கூட்டாளி சினிமா விமர்சனம்

கூட்டாளி சினிமா விமர்சனம்

எஸ்.பி.பிக்சல்ஸ் சார்பில் பி.பெருமாள்சாமி, எஸ்.சுரேஷ்பாபு தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.கே.மதி.

இதில் சதீஷ், க்ரிஷா குரூப், கல்யாண் மாஸ்டர், அருள்தாஸ், யு.பி.மகேஷ்வரன், அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ், நந்தகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சுரேஷ் நடராஜன், இசை-பிரிட்டோ மைக்கேல், கலை-வி.சிவகுமார், பாடல்கள்-விவேகா, ஏகாதேசி, குறிஞ்சி பிரபா, எடிட்டிங்-பிரசாந்த் தமிழ்மணி, தயாரிப்பு நிர்வாகி-ஆர்.கிருஷ்ணபாண்டியன், பிஆர்ஒ-நிகில் முருகன்.

வாகனங்களை கடனில் வாங்கி பாக்கி செலுத்தாத கஸ்டமர்களின் வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருவது தான் சதீஷ் மற்றும் மூன்று நண்பர்களின் வேலை. முதலாளி சேட் சொன்ன வேலைகளை கச்சிதமாக முடித்து கொடுத்து நல்ல பெயருடன் வலம் வருகிறார்கள். இதே போல் அரசியல்வாதியின்; காரை தூக்கி வர நான்கு பேரையும் தீர்த்துக் கட்டும் அ;ளவிற்கு அவரின் தீராத பழிக்கு ஆளாகிறார்கள். இதனிடையே சதீஷிற்கு க்ரிஷா குரூப் மீது மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது. க்ரிஷாவின் தந்தை ;போலீஸ் அதிகாரி கல்யாண் மாஸ்டர் இதற்கு உடன் பட வில்லை என்றாலும் மகளுக்காக பொறுமை காக்கிறார். போலீஸ் அதிகாரியான கல்யாண் மாஸ்டர் நண்பர்களின் நட்பை பிரிக்க பல வழிகளில் முயன்றும் முடியாமல் போக க்ரிஷா மூலம் நான்கு பேரை கொல்ல சதி தீட்டம் போடுகிறார். இதில் அ;ரசியல்வாதியின் பழி தீர்க்கும் திட்டமும் சேர்ந்து விடுகிறது. இவர்களின் மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆனதா? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? நண்பர்கள் பிரிந்தார்களா? என்பதே படத்தின் சோகமான க்ளைமேக்ஸ்.

அழகி படத்தில் நடித்த சதீஷ் இதில் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.

க்ரிஷாகுரூப் தத்ரூபமாக நடித்திருந்தாலும் சில இடங்களில் மிகையாக தெரிகிறது.
மற்றும் வில்லனாக கல்யாண்மாஸ்டர், நந்தகுமார், அருள்தாஸ், யு.பி.மகேஷ்வரன், அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ் ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம்.
சுரேஷ் நடராஜனின் ஒளிப்பதிவும், பிரிட்டோ மைக்கேலின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்கம்-எஸ்.கே.மதி. விக்ரம் நடித்து வெளி வந்த ஸ்கெட்ச் படத்தின் அச்சு அசலான பிரதியாக படம் இருந்தாலும், இறுதியில் உண்மையான நட்பு இறப்பிலும் பிரியாது என்பதை உணர்த்தும் விதம் இயக்கியிருக்கிறார் எஸ்.கே.மதி. படத்தில் காதல், ;சென்டிமெண்ட், நட்பு, பகை, பழி தீர்த்தல், சண்டை என்று எல்லாம் கலந்த கலவையாக இருந்தாலும் எதுவுமே முழுமை பெறாமல் இருப்பது போல் உணர்வை க்ளைமேக்ஸ் காட்சி ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் உயிர் நட்பிற்கு அடையாளம் இந்த கூட்டாளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *