அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சினிமா விமர்சனம்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சினிமா விமர்சனம்

ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் எஸ் துரை முருகன் , மற்றும் பி. நாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளது.

நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஸெளரப் ஜெயின், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ஓம் நமோ வெங்கடேசாய படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்ற பெயரில் கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-கோபால் ரெட்டி, இசை-கீரவாணி, தமிழ் வசனம்-டி.எஸ்.பாலகன், பாடகர்-எஸ்.பி.பி.சரண், மக்கள் தொடர்பு-நிகில் முருகன்.
திருப்பதி வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தரான ராமா தன் பாடல்களாலும், செயல்களாலும் எப்படி பெருமாளை ஆட்கொண்டார்? என்பதும், இவரின் தீவர பக்தியை கண்டு பரவசமடைந்த பெருமாள் ராமா முன் காட்சியளித்து அவருடன் பகடை ஆடி நகைகளை தோற்ற கதையும், கோபமடைந்த அரசர் கொடுத்த தண்டனையை எப்படி பெருமாள் யானை உருவத்தில் வந்து காப்பாற்றினார்?என்ற கதையும், திருப்பதியில் நடக்கும் பூஜைகள், பெருமாள் பயணித்த இடங்கள், திருக்கல்யாண உற்சவங்கள், பக்தர் ராமா சமாதி நிலை அடைந்த வரை பல சம்பவங்களின் கோர்வையாக உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி பிரம்மாண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கதையே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்.

பக்தர் ராமாவாக நாகார்ஜுன் தனி தனிச்சிறப்பாகவும், பக்திப் பரவசத்தோடு உணர்ச்சிக் குவியலாக நடித்து பாராட்டுதல்களை பெறுகிறார்.

கிருஷ்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் அனுஷ்கா எப்பொழுதும் போல் திறம்பட பங்களிப்பை கொடுத்துள்ளார்.

மகாபாரதத்தில் கிருஷ்ணராக நடித்த ஸெளரப் ஜெயின் பெருமாளாக கண் முன்னே நிற்பது போன்ற பிரம்மை ஏற்படுகிறது.

பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் மற்றும் பல நட்சத்திரப் பட்டாளங்கள் படத்திற்கு முக்கிய பங்கு வகித்து சிறப்பித்திருக்கின்றனர்.
பிரம்மாண்டமான அட்டகாசமான காட்சிக் கோணங்கள் திருப்பதி ஏழுமலையானின் தனிச் சிறப்பை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தி தன் ஒளிப்பதிவில் மயக்கி விடுகிறார் கோபால் ரெட்டி.

கீரவாணியின் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் சம அளவில் கலந்து மெய் சிலிர்க்க வைக்கிறது.

டி.எஸ்.பாலகன் வசனங்கள் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்.

இயக்கம்-கே. ராகவேந்திர ராவ். தெலுங்கில் நூற்றுக்கணக்கான படங்களை இயக்கிய கே.ராகவேந்திர ராவின் முக்கிய திருப்புமுனை படம் தான் இந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். பக்தி சம்பந்தபட்ட கருத்துக்கள் கொண்ட படம் என்றாலும் முழு நீள சமூகப் பின்னணியோடு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திரைக்கதை யமைத்து பல சம்பிரதாயங்கள், வழிபாடுகள் ஏற்பட்ட காரணம் என்ன என்ற கேள்விகளுக்கு இந்தப் படம் பல புதிர்களை அவிழ்க்கும் விடையாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை விளக்கி பக்தரின் பார்வையில் பெருமாள் தரிசனத்தை பிரம்மிப்பாக கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் கே.ராகவேந்திர ராவ்.

மொத்தத்தில் அகிலாண்ட கோடி பிரம்மாணட நாயகன் அனைவரும் பார்த்து பக்தி பரவசத்தில் மெய் சிலிர்க்க வைக்கும் படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *