சென்னையில் ஃபிலிப்ஸ் அறிமுகப்படுத்தும் ஐசியூ@ஹோம் 

சென்னையில் ஃபிலிப்ஸ் அறிமுகப்படுத்தும் ஐசியூ@ஹோம் 

ஹெல்த்கேர்@ஹோம்சர்வீசஸ் விரிவாக்கம்சென்னையில் ஃபிலிப்ஸ் அறிமுகப்படுத்தும் ஐசியூ@ஹோம்   ஹெல்த்கேர்@ஹோம்சர்வீசஸ் விரிவாக்கம் சென்னை: 2018

ஹெல்த்கேர்@ஹோம் சர்வீசஸ் விரிவாக்கமாக முன்னணி சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான ஃபிலிப்ஸ் இந்தியா  சென்னையில் ஐசியூ@ஹோம் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்தப் புதிய சேவை தீவிர சிகிச்சைக் கருவி, வீட்டில் நோயாளிகளுக்கான உயர் தர மருத்துவ வசதி ஆகியவற்றை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் ஆலோசனையுடன் உருவாக்கி வழங்கி உள்ளது.  மேலும் ஐசியூ பயிற்சி பெற்ற செவிலியர்கள் நோயாளிக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பை அளிக்கத், தொலைதூர இயக்கமாக மருத்துவர்கள் நோயாளியைக் கண்காணிப்பர்.
மூச்சுத் திணறல் மற்றும் தீவிர சிகிச்சை ஆகியவற்றைத் தாண்டி ஃபிலிப்ஸ் தனது ஹோம்கேர் சேவைகளாக, உயர் தர சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை இந்தியா முழுவதும் வீட்டிலேயே வழங்க விரிவுபடுத்தி உள்ளது.  சிறப்பு மருத்துவர் வருகை, இயன் மருத்துவம், மறுவாழ்வு சேவைகள், மருத்துவர் ஆலோசனை, நோயாளி மேலாண்மை, மருந்து செலுத்தும் சிகிச்சை, பல்வேறு நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும் அவசியத்தைக் குறைத்தல், 24 மணி நேர செவிலியர் சேவை உள்ளிட்ட புதிய சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.  பெரும்பாலான சேவைகள் அதன் சுகாதாரப் பாதுகாப்பு தளம், தொலைதூரக் கண்காணிப்பு மற்றும் மருத்துவமனை வசதிகளை வீட்டில் வழங்குதல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதி நவீன சுகாதாரத் தொழில்நுட்பம், நோயாளி கண்காணிப்பு ஆகியவை இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் குறைந்த கால மற்றும் நீண்ட கால நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க உதவும்.
இது குறித்து ஃபிலிப்ஸ் ஹெல்த்கேர்@ஹோம், வணிகப் பிரிவு தலைவர், ரிச்சா சிங் கூறுகையில் ‘மூச்சுத் திணறல் சேவையுடன் வீட்டுச் சுகாதாரப் பாதுகாப்பில் களமிறங்கிய ஃபிலிப்ஸ் தீவிர மற்றும் நாள்பட்ட நோய்களுக்கும் தனது சேவைகளை விரிவுபடுத்தி உள்ளது.  கடந்த பல மாதங்களாக ஃபிலிப்ஸ் ஹோம் கேர் சேவைகள் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வீடுகளிலிருந்து விரைந்து மருத்துவமனைகளுக்கு மாறவும், குணமடையவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் வீட்டிலேயே சிறந்த சிகிச்சையைப் பெறவும் உதவியுள்ளன. பரிசோதனைகள் மற்றும் இடையீட்டு சிகிச்சை தேவைப்படும் தீவிர நோய்ப் பகுதிகளில் மருத்துவமனைகள் கூடுதல் கவனம் செலுத்த இந்த முனைவு இயலச் செய்யும். எங்கள் சேவைகளைச் சென்னையில் விரிவுபடுத்தி மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.
ஹெல்த்கேர்@ஹோம் வழங்கும் ஐசியூ சேவைகள் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்குவதால் ஏற்படும் செலவுகளுடன் ஒப்பிடும் போது குறைவுதான். அனுபவமிக்க மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், அதி நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவை மூலம் தேவையான மருத்துவ வசதிகளை மருத்துவமனையில் வழங்குவதைப் போன்றே வீட்டில் வழங்க நிறுவனம் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ளூம்.  கடந்த சில மாதங்களாக இந்த சேவையை டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 4 நகரங்களில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி உள்ளது. அதி நவீன சுகாதாரத் தொழில்நுட்பத்தையும், பாதுகாப்பையும், மருத்துவமனையில் உள்ளதைப் போன்றே வீட்டில் வழங்குவதன் மூலம் நோயாளிக்கும் சிகிச்சை அளிப்போருக்கும் உதவி உள்ளது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *