தமிழகத்தில் இரண்டு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள சொனாலிகா ITL

கடந்த இரண்டு நிதியாண்டுகளைக் காட்டிலும், தமிழகத்தில் கொள்ளளவின் அடிப்படையில் இரண்டு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள சொனாலிகா ITL

• ஒட்டு மொத்தமாக நிறுவனம் 45மூ வளர்ச்சியை பதிவு செய்துள்ளது மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி 154மூ ஆகும்.• புதிய சிக்கந்தர் சீரீஸ், வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவுள்ளது

சென்னை,பிப்ரவரி 13, 2018: சொனால  ITL டிராக்டர்ஸ் உற்பத்தியாரான, இந்தியாவின் இளம் டிராக்டர் பிராண்டாகத் திகழும் இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட்(ITL), உலகின் நம்பர்.1 ஒருங்கிணைந்த டிராக்டர் உற்பத்தி தொழிலகத்தை ஹோஷியார்பூரில் கட்டமைத்துள்ள நிலையில், அதன் புத்தம் புதிய மற்றும் மிகநவீன டிராக்டர் சீரீஸ் ‘சிக்கந்தர்’– ஐ, சென்னையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. 35 ஹெச்பி முதல் 90 ஹெச்பி வரையிலான வகையினங்களில் கிடைக்கப்பெறும் இது, அதிக ஆற்றல் மற்றும் வேகத்தை, குறைவான எரிபொருள் பயன்பாட்டுத் திறனுடன் அளித்து, குறைவான இயக்கச் செலவீனங்களில் விவசாயிகள் உச்சபட்ச உற்பத்தித்திறனை எட்ட உதவுகிறது.

நவீன வடிவமைப்பு கொண்டுள்ள இப்புதிய மாடல், HDM  இன்ஜின், HS-ST கியர்பாக்ஸ், CCS வொர்க்ஸ் பேஸ் மற்றும் எக்ஸோ சென்சிங் ஹைட்ராலிக்ஸ் போன்ற ஈடுஇணையற்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இது தவிர்த்து இப்புதிய டிராக்டர், பட்டலிங் பணியை ஒருரோட வேட்டர் அல்லது ஒரு ஃபுல் கேஜ் வீலின் வழியாக மேற்கொள்வதை அனுமதிக்கிறது மற்றும் அதன் உயர் ஆக்சில் டார்க், பவர்டேக் ஆஃபின் (PTO) சிறந்த தன்மை மற்றும் கள வேகம் போன்றவைகளின் வழியாக ஈடு இயைற்ற செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு முழுவதும் சீலிடப்பட்டடிராக் டராகத் திகழும் இது, கடுமையான பட்லிங் சூழல்களில் மற்றும் ஹாலேஜில் சீரான இயக்கத்தை உறுதி செய்வதால், தமிழக நிலப்பரப்புகளுக்கு பொருத்தமானதாகத் திகழ்கிறது.

சொனாலிகா, ITL வர்த்தக ரீதியிலான மற்றும் செயல் திட்ட கூட்டாண்மைகள் பிரிவின் தலைவர் திரு.முதித் குப்தா அவர்கள், “சொனாலிகா ITL – ல், எங்களது செயல்பாடுகளின் மையமாக தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் கட்டமைத்தல்கள் திகழ்கின்றன. இன்று, உலகளாவிய அளவில் நாங்கள் படைப்பாற்றல் மிக்க மற்றும் நம்பத்தக்க தயாரிப்புகளை ஹோஷியார்ப+ரில் அமைந்துள்ள எங்களது உலகின் நம்பர்.1 ஒருங்கிணைந்த டிராக்டர் உற்பத்தி தொழிலகத்தில் உற்பத்தி செய்து வழங்குகிறோம். சிகந்தர் அறிமுகத்தின் வழியாக, இந்தியாவில் எங்களது தயாரிப்பு வழங்கு பட்டியல், விவசாயிகளுக்கு தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ளும் ஆற்றலை அளிக்கிறது. தமிழகத்தில் டிராக்டர்களில் 41-50 ஹெச்பி பிரிவு ஆதிக்கம் செலுத்திவதால், எங்களுக்கான முன்னுரிமை சந்தையாக இது மாறியுள்ளது மற்றும் எங்களது சமீபத்திய வழங்குதல்களை,  இப்பிராந்தியத்திலுள்ள விவசாயிகளுக்கு வழங்கநாங்கள் உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம். சிக்கந்தரின் புரட்சிகர மானவசதிகள் மற்றும் தனித்துவ மிக்க அம்சங்கள், இம்மாநிலத்தைச் சேர்ந்த எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்களின் மனதை கொள்கைகொள்ளும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.

தென்னிந்திய வேளான் சமூகத்தினருக்கு அதிகபட்ச மதிப்பு முன்மொழிவின் உத்தரவாதத்தை உறுதி செய்யும் வகையில், குறைவான மறு இயக்க செலவீனங்களை குறைத்து ,உற்பத்தித்திறனை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்துவதே நிறுவனத்தின் இலக்காகும். விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தி வருவாயை உயர்த்தும் நோக்கில், ரோடவேட்டர்கள் போன்ற சொனாலிகாவின் புத்தாக்க அமலாக்கங்கள் காரணமாக, 2022 – ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நிதி ஆயோக் திட்டத்திற்கான பங்களிப்பு கூட்டாளியாக இந்திய அரசு சொனாலிகா நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. “2018 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விவசாயம் மீதான கூர்நோக்கம் மற்றும் அனைத்து கரீஃப் பயிர்களின் உற்பத்தி செலவீனத்தில் 1.5 மடங்கு அதிகரிப்பு ஆகியவைகள் வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். இது விவசாயிகள் இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் மற்றும் ஆற்றலளிக்கும். இது எங்களது தயாரிப்புகளின் தேவைப்பாட்டினை உயர்த்த உதவும். 20 ஹெச்பி முதல் 120 ஹெச்பி வரையிலான பரந்துபட்ட தயாரிப்பு வகையினங்களை சொனாலிகா கொண்டுள்ளது மற்றும் தமிழகத்தில் விற்பனை செய்யப்படவுள்ள வகையினம் 20 முதல் 60 ஹெச்பி வரையிலான தாகும். ஒரு உறுதியான டீலர்ஷிப் வலையமைப்பின் வழியாக எங்களது பிராந்திய இருத்தலை அதிகரிப்பதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இது எங்களது விவசாயிகளுக்கான அடைதலையும் மற்றும் மாநிலத்தின் வேலைவாய்ப்பு பெருக்கதையும் அதிகரிக்கும்” என்று திரு.குப்தா அவர்கள் மேலும் கூறினார்.

தென்னிந்திய பிராந்தியத்தின் மீதான உறுதியான கூர்நோக்கத்துடன், உள்ளுர்சந்தையில் தனது இருத்தலை விரிவுபடுத்த சொனாலிகா திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 29 அங்கீகரிக்கப்பட்ட டீலர்களைக் கொண்டுள்ள இதன் இலக்கு, அடுத்த ஆண்டிற்கு இந்த எண்ணிக்கையை 50 டீலர்களாக உயர்த்துவதாகும். கடந்த இரண்டு நிதியாண்டுகளில் நாங்கள் 100மூ வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம் மற்றும் ஜனவரி 2018 – ல், எங்களது வளர்ச்சி154மூ  ஆகதிகந்தது. மங்களகரமான பொங்கல் பண்டிகையின் காரணமாக, YTM ஜனவரியில் நாங்கள் 85மூ வளர்ச்சியை பெற்றுள்ளோம். ஒட்டுமொத்தமாக, ஜனவரி 18 – ல், இந்நிறுவனம் 45மூ வளாச்சியை பதிவு செய்துள்ளது.

மாநிலத்திலுள்ள அபரிமிதமான வாய்ப்புகளை புரிந்து கொண்டுள்ள சொனாலிகா, வேளாண்மையில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பமேம்பாடுகள் மற்றும் வேளான் இயந்திர மயமாக்கல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு விஷயங்கள் குறித்து இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கும் வகையில் ஒருதிறன் மையத்தை உருவாக்கியுள்ளது. சிக்கந்தர் சீரீஸிற்கு கூடுதலா, சொனாலிகா ITL தமிழக விவசாயிகளின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஊடு-பயிர் வேளாண்மைக்கான, GT 26 மற்றும் GT 30 டிராக்டர்கள் – கரும்பு போன்றபயிர்களுக்கும் மற்றும் வாழை, எலுமிச்சை மற்றும் பப்பாளி போன்ற தோட்டப்பயிர்களுக்கும் மிகவும் ஏற்றதாகும். அவையும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Also read:

Sonalika ITL registers two fold increase in volume in Tamil Nadu over the last two Financial Years

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *