தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம்: சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம்: சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார்

சென்னை, தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படதிறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்பட்டது. இதற்காக நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைத்துள்ளார்.

இந்த உருவப்படம் 7 அடி உயரம் மற்றும் 5 அடி அகலம் கொண்டது. பச்சை நிற சேலையுடன் அவர் நிற்பது போன்று உருவப்படம் வரையப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு உள்ளது.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேசினார். ஜெய லலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசிய உரை சட்டசபையில் ஒலிபரப்பப்பட்டது. 9.53 மணிக்கு நிகழ்ச்சி நிறை வடைந்தது.

படத்திறப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட செய லாளர்கள், அரசு வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பிர தான எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் அமரும் இருக்கையில் அவர்கள் அமர்ந்தனர். துரைமுருகன் இருக்கையில் மதுசூதனன் அமர்ந்து இருந்தார். பி.எச்.பாண்டி யன், பொன்னையன், கே.பி. முனுசாமி, தமிழ்மகன் உசேன், புதுவை அன்பழகன், பாலகங்கா, வைத்திலிங்கம், வேணு கோபால் கலந்து கொண்டனர்.

யாருக்கும் குறிப்பிட்ட இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. விருப்பப்பட்ட இடங்களில் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா, காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்கள் அவையில் வைக்கப்பட்டு உள்ளன. இது முதல் பெண் தலைவரின் படம்.

மு.க. ஸ்டாலின் இருக்கைக்கு எதிரே ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

விழா முடிந்ததும் ஜெயலலிதா படம் முன்பு நின்று எம்.எல். ஏ.க்கள் “செல்பி”எடுத்துக் கொண்டனர்.

Please follow and like us: