சொல்லிவிடவா சினிமா விமர்சனம்

சொல்லிவிடவா சினிமா விமர்சனம்

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நிவேதிதா அர்ஜுன் தயாரிக்க சொல்லிவிடவா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அர்ஜுன்.

சந்தன்குமார், ஐஸ்வர்யா அர்ஜுன், கே.விஸ்வநாத், சுகாசினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, மனோபாலா, சிறப்பு தோற்றத்தில் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-எச்.சி.வேணுகோபால், இசை-ஜாசி கிப்ட், எடிட்டிங்-கேகே, பாடல்கள்-மதன்கார்க்கி,விவேகா,பா.விஜய், நடனம்-சின்னிபிரகாஷ், கணேஷ் ஆச்சார்யா, பூனம், பிரியங்கா, சண்டை-கிக்காஸ் காளி, மக்கள் தொடர்பு-நிகில்.

பெற்றோரை இழந்த ஐஸ்வர்யா அர்ஜுன் தாதாவின் அரவணைப்பில் வளர்கிறார். தனியார் சேனலில் வேலை செய்யும் ஜுஸ்வர்யாவை தன் மருமகளாக்கி கொள்ள நினைக்கிறார் பணக்கார குடும்ப நண்பரான சுகாசினி மணிரத்னம். இதில் உடன்பாடு இல்லை என்றாலும் ஐஸ்வர்யா சம்மதித்து நிச்சயம் நடக்கிறது. அதே சமயம் இன்னொரு தனியார் சேனலில் வேலை செய்யும் சந்தன் குமாருடன் ஐஸ்வர்யாவிற்கு அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இதனிடையே கார்கில் போரை நேரிடையாக பதிவு செய்ய சேனல்கள் இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்து கார்கிலுக்கு அனுப்புகிறது. அங்கே தங்கள் பணியை செய்து முடித்து திரும்பும் போது காதலும் மலர்கிறது. ஆனால் தங்கள் காதலை வெளியே சொல்லாமல் மௌனமாக இருந்து விடுகிறார்கள். ஊர் திரும்பியவுடன் ஐஸ்வர்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. சந்தன் குமார் திருமணத்தை தடுத்து நிறுத்தி காதலை சொன்னாரா? காதலர்கள் இணைந்தார்களா? எதிர்பாராத திருப்பம் என்ன? என்பதே மீதிக்கதை.

சிறப்பான தோற்றத்திலும், நடிப்பில் சந்தன்குமார் ஸ்கோர் செய்கிறார்.
ஐஸ்வர்யா அர்ஜுன் படபடவென வசனங்களால் துளைத்தெடுப்பதிலும், அழுத்தமான கதாபாத்திரத்திலும் நிலைத்து நிற்கிறார்.

கே.விஸ்வநாத், சுகாசினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, மனோபாலா மற்றும் பலர் வழக்கம் போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காமெடியன்;களின் ;பங்களிப்பு வேஸ்ட். ஒரு பாடலுக்கும், ஒரு சீனிலும் சிறப்பு தோற்றத்தில் அர்ஜுன் வந்து போகிறார்.

எச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவும், ஜாசி கிப்டின் இசையும் படத்தின் தோய்வான இடங்களுக்கு பலம் சேர்த்து வலுவோடு பயணிக்க வைக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம்-அர்ஜுன். ஆக்ஷன் கலந்த தேசப்பற்றை சொல்லி அடிப்பதில் கில்லியாக இருக்கும் அர்ஜுன் இதில் காதல் கலந்த கார்கில் போரை மையப்படுத்தி இயக்கியிருக்கிறார். ஃபிலாஷ்பேக்கில் தொடங்கும் கதையில் முதலிலேயே சேசிங் காட்சியில் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார். அதன் பின் எப்பொழுதும் போல் மோதல், காதல் கலந்து உருக்கமான போர் வீரர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் உணர்ச்சிபூர்வமாக கொடுத்து இறுதியில் காதலர்களை ஒன்று சேர்த்து பழைய பாணி கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்களாக இருப்பதும், விறுவிறுப்பாக திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் சொல்லிவிடவா தோற்காத போர்கால காதல்.

Please follow and like us: