குழந்தைகளுக்கான இதய சிகிச்சைக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி – ஆர்ட் ஃபார் ஹார்ட்
ஐஸ்வர்யா டிரஸ்ட் மற்றும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இணைந்து இந்நிகழ்வை நடத்தின
சென்னை, 2018, ஜனவரி 20 : ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையானது , ஐஸ்வர்யா டிரஸ்ட் உடன் இணைந்து பிறவி நிலை இதய நோயால் (CHD), அவதியுறுகின்ற குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு இசை நிகழ்ச்சியை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடத்தின. இந்த மாபெரும் இசை நிகழ்வில் சித்ரவீணை இசை வித்தகரான சங்கீத சாம்ராட் N. ரவிகிரண், மிருதங்க இசைக்கலைஞரான திரு. K.V. பிரசாத் மற்றும் கஞ்சிரா இசைக்கலைஞரான திரு. B. சுந்தர்குமார் ஆகியோர் பங்கேற்று தங்களது மெய்மறக்க செய்த இசையின் வழியாக பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இதய அறிவியல் துறை இயக்குநரும், இதய நெஞ்சக மற்றும் உறுப்புமாற்றுப்பதிய தலைமை அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். K.R. பாலகிருஷ்ணன் மற்றும் இம்மாநகரைச் சேர்ந்த பல பிரபல ஆளுமைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
புகழ்பெற்ற சித்ரவீணை இசைக்கலைஞரான ரவிகிரண் மற்றும் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் திரு. கே.வி. பிரசாத் ஆகியோரின் அற்புதமான இசை பிரவாகமானது, அரங்கில் கூடியிருந்த 900-க்கும் அதிகமான இரசிகர்களை மெய்மறக்கச்செய்வது, இதற்கு சற்றும் குறையாமல், கஞ்சிரா வித்வான் திரு. ஸ்ரீ சுந்தர்குமார் மற்றும் வயலின் இசைக்கலைஞர் அபூர்வா கிருஷ்ணா ஆகியோரின் கச்சேரிகளும் அமைந்தன. கீபோர்டு சத்யா என அழைக்கப்படும் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான திரு. கே. சத்யநாரயணனின், இசையானது, இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது.
இந்நிகழ்வு குறித்து பேசிய சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இதய அறிவியல் துறை இயக்குநரும், இதய நெஞ்சக மற்றும் உறுப்புமாற்றுப்பதிய அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். K.R. பாலகிருஷ்ணன், “நிதி திரட்டுவதற்கான இந்த சிறப்பான இசை நிகழ்ச்சி, பிறவி நிலை இதய நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புவதற்கும் மற்றும் கடுமையான இதய நோய்களால் அவதியுறும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவவிருக்கிறது என்பதால் எங்கள் அனைவருக்குமே இது ஒரு மிகச்சிறந்த அனுபவமாகும். ஐஸ்வர்யா டிரஸ்ட்-ன் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பங்களிப்பினால், பிறவிநிலை இதய நோய்களால் அவதியுறும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதில் இந்நிகழ்வு வெற்றியடைந்திருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார். ஐஸ்வர்யா டிரஸ்ட்-ன் அறங்காவலரான திருமதி. சித்ரா விஸ்வநாதன் இந்நிகழ்வு குறித்து பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் கடுமையான பிறவி நிலை இதய குறைபாடுகளுடன் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றனர். சிகிச்சையின் மூலம் CHD-யினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியுமென்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஐஸ்வர்யா டிரஸ்ட் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் பிரபலமான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வான மருத்துவர்கள் குழுவோடு இணைந்து செயல்படுகிற நாங்கள், பிறவி நிலை இதய குறைபாடுகளை எதிர்த்து போராடவும் மற்றும் சிகிச்சையின் மூலம் அதனை வெற்றிகாணவும் சிறந்த சாத்தியமுள்ள மருத்துவ சிகிச்சையை வழங்க நாங்கள் பணியாற்றிவருகிறோம்,” என்று கூறினார். அறுவைசிகிச்சைகள் மற்றும் இதயமாற்று சிகிச்சைகள் வழியாக இதய நோய்கள் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஆர்ட் ஃபார் ஹார்ட் இசைநிகழ்ச்சிகள் வழியாக திரட்டப்பட்ட நன்கொடைகள் பல குடும்பங்களுக்கு ஆதரவு கரத்தை நீட்டும்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ஐஸ்வர்யா டிரஸ்ட், ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் ஒத்துழைப்போடு இதய நோய்கள் பாதிப்புடன் மருத்துவ சிகிச்சை அவசியப்படும் வசதி குறைவான குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்த டிரஸ்ட் வழங்கிய பங்களிப்பானது, கடந்த காலத்தில் 1600-க்கும் கூடுதலான குழந்தைகளுக்கு சிகிச்சையின் மூலம் நலம் பெற உதவியிருக்கிறது. வழங்கப்பட்டு வரும் இந்த ஆதரவை தொடர்ந்து மேற்கொள்வதே இந்த டிரஸ்ட்-ன் உறுதியான விருப்பமாக இருந்து வருகிறது. பிறப்பு நிலை இதய நோய் (CHD) மீது விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த டிரஸ்ட், அரிய உயிர்களை காப்பதற்காக ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிதல் மற்றும் உரிய நேரத்திற்குள் அறுவைசிகிச்சை செய்யப்படுவதை ஏதுவாக்க தங்களது இலவச நோய் கண்டறிதல் திட்டங்களின் மூலம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் குறித்து : ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், ஆசியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல பராமரிப்பு சேவை வழங்குநர்களில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. மருத்துவமனைகள், நோயறிதல் பிரிவுகள் மற்றும் பகல்நேர சிறப்பு சிகிச்சை மையங்கள் என உடல்நல சிகிச்சைக்கான பல பிரிவுகளை இந்நிறுவனத்தின் உடல்நல பராமரிப்பு துறையானது கொண்டிருக்கிறது. தற்போது, இந்நிறுவனம் இந்தியா, துபாய், மொரீஷியஸ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் 45 மருத்துவமனைகளில் (தற்போது உருவாக்க நிலையில் இருக்கும் திட்டங்கள் உட்பட), தோராயமாக 10,000 படுக்கை வசதிகளுடன், 372-க்கும் கூடுதலான நோயறிதல் மையங்களையும் கொண்டு உடல்நல பராமரிப்பு சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது.
ஐஸ்வர்யா டிரஸ்ட் குறித்து:பிறப்பிலேயே இதயகுறைபாடுகள் / நோய் பாதிப்புகள் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் சீரிய நோக்கத்தை கொண்டு 2008-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐஸ்வர்யா டிரஸ்ட் நிறுவப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா CHD என்ற இந்த பாதிப்பினால் அவதியுறுகிற குழந்தைகளுக்காக நோயறிதலுக்கான ஸ்கிரீனிங் நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மறுபரிசீலனை ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்திட்டத்தை ஐஸ்வர்யா டிரஸ்ட் மேற்கொள்கிறது. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த திறன்மிக்க மருத்துவர்கள் குழு, தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத்துறை ஆகியோரோடு இணைந்து செயல்படும் ஐஸ்வர்யா டிரஸ்ட், இந்தியாவில் குழந்தைகளுக்கான இதய நலப்பிரிவில் முதன்மையான அரசுசாரா தொண்டுநிறுவனங்களுள் ஒன்றான அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை குறித்து : ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையானது (மலர் மருத்துவமனை என்று முன்பு அறியப்பட்ட) 2008-ன் ஆரம்பத்தில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (இந்தியா) லிமிடெட்-ஆல் கையகப்படுத்தப்பட்டது. 1992ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இம்மருத்துவமனையானது, தரமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் பன்முக சிறப்பு பிரிவுகளில் உடல்நல சேவைகளை சென்னையில் வழங்குகிற மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுள் ஒன்றாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. 180 படுக்கை வசதிகளைக் கொண்டிருக்கும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இதயவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, மகளிர் நலவியல், எலும்பியல், இரைப்பை குடலியல், நரம்பியல், குழந்தை மருத்துவம், நீரிழிவு, சிறுநீரகயியல் மற்றும் சிறுநீர்ப்பாதையியல் ஆகிய பல்வேறு துறைகளில் மிக விரிவான மற்றும் முழுமையான மருத்துவ சேவையை வழங்குவது மீது கூர்நோக்கம் கொண்டிருக்கிறது.
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, மிக நவீன கேத் லேப் மற்றும் இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காக பல ஆப்ரேஷன் தியேட்டர்கள் மற்றும் தீவிர இதயச் சுவர் சிரை (Coronary) கவனிப்பு பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. இம்மருத்துவமனையில் வயது வந்தோருக்கும் மற்றும் சிறார்களுக்கும் பல அரிதான மற்றும் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள், எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, நரம்பு அறுவைசிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் & மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் மகளிர் நலவியல் சேவைகள் இம்மாநகரில் சிறப்பான நற்பெயரை கொண்டிருக்கின்றன. இப்பிரிவில் சிக்கலான பல பிரசவங்கள் மற்றும் அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன், பிறந்த குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவயியல் பிரிவும் இங்கு சிறப்பாக இயங்குகிறது.