குலேபாகவாலி விமர்சனம்

குலேபாகவாலி விமர்சனம்

கேஜிஆர் ஸ்டியோஸ் சார்பில் கோடப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.கல்யாண்.

பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ராமதாஸ், ஆனந்த்ராஜ், சத்யன், மொட்ட ராஜேந்திரன், மன்சூர்அலிகான், யோகி பாபு, மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-விவேக், மெர்வின், ஒளிப்பதிவு-ஆர்.எஸ்.ஆனந்தகுமார், எடிட்டிங்-விஜய் வேல்குட்டி, கலை-கதிர், சண்டை-பீட்டர் ஹெய்ன், நடனம்-ஜானி, பாடல்கள்-பா.விஜய், கோசேஷா, கு.கார்த்திக், பிஆர்ஒ-நிகில்.

1947 ஆம் ஆண்டு வைர பெட்டிகளோடு கப்பலில் தப்பிச்செல்லும் ஆங்கிலேயேரிடமிருந்து ஒரு வைரப் பெட்டியை சுருட்டிக் கொள்கிறார் இந்திய வேலைக்காரர். அந்த வைரங்களை தந்தத்திலான எலும்புக் கூட்டில் உள்ளே பதுக்கி வைத்து குலேபாகவாலி ஊரில் உள்ள கோவில் மதில் சுவர் அருகே புதைத்து விடுகிறார். தன் இறுதி நாட்களில் வெளிநாட்டில் இருக்கும் தன் வாரிசிடம் வைரங்கள் பதிக்கி வைத்த இடத்தை கூற அதனை எடுப்பதற்காக இந்தியா வரும் வாரிசு அந்தப் புதையலை எடுத்து வர பிரவுதேவா, முனீஸ்காந்த், ஹன்சிகா ஆகியோரை அனுப்புகிறார். இவர்களுடன் ரேவதியும் சேர்ந்து கொள்கிறார். இவர்கள் வெற்றிகரமாக வைரப் புதையலை எடுத்தார்களா? வைரத்திற்காக இவர்களை பின் தொடர்ந்து வரும் வில்லன்களிடமிருந்து தப்பித்தார்களா? இறுதியில் புதையல் யாரிடம் கிடைத்தது? என்பதே மீதிக்கதை.

இதில் பிரபுதேவாவின் நடிப்பும், நடனமும் ரசிக்க வைக்கிறது என்றாலும் இனி வரும் காலங்களில் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஹன்சிகா அழகு கவர்ச்சி பதுமையாக வந்து போகிறார். ரேவதி ஆரம்பம் முதல் இறுதி வரை ஏமாற்றுக்காரி மாஷாவாக கை தேர்ந்த நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

ராமதாஸ், ஆனந்த்ராஜ், சத்யன், மொட்ட ராஜேந்திரன், மன்சூர்அலிகான், யோகி பாபு, மதுசூதனன் ராவ் என்று ஏகப்பட்ட காமெடியன்கள், வில்லன்கள் என்று படம் முழுவதும் பரவி கிடந்தாலும் திரைக்கதையின் பலவீனத்தால் யாரும் மனதில் நிற்கவில்லை.
இசை-விவேக், மெர்வீன் விறுவிறு இசை பிரபுதேவாவின் நடனத்திற்கு ஒத்து போகிறது.

ஆர்.எஸ்.ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு சில இடங்களில் சிறப்பாக இருந்தாலும் பல இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் எடுபடவில்லை.

கதை, திரைக்கதை, இயக்கம்-எஸ்.கல்யாண். பல வருடங்களாக புதைந்து கிடக்கும் வைர புதையலை எடுக்க வரும் நான்கு ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து அபகரிக்க நினைக்கும் வில்லன்கள் என்ற பழைய கான்செப்டை தூசு தட்டி அதில் காமெடி கலந்து சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும் திரைக்கதையில சுவாரஸ்யம் இல்லாததால் சலிப்படைய செய்து கேலிக்கூத்தாக இயக்கியிருக்கிறார் எஸ்.கல்யாண்.

மொத்தத்தில் குலேபாகவாலியில் பிரபுதேவாவின் இசைக்கேற்ற நடனத்தை பார்க்க தொலைக்காட்சியே போதும்.

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *