பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

pslv ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய தயாராக உள்ள பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட் வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 24 மணி நேரக் ‘கவுன்ட் டவுன்’ வியாழக்கிழமை காலை தொடங்குகிறது.
பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட்டில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.
இதன் மூலம் இந்தியாவின் 100 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சாதனையை இஸ்ரோ படைக்கவுள்ளது. பிஎஸ்எல்வி -சி39 ராக்கெட் மூலம் இந்தியாவின் வழிகாட்டி செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் -1எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 -ஆம் தேதி அனுப்பியது.
ஆனால் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்தபின், செயற்கைக்கோள் ராக்கெட்டை விட்டு வெளியேறவில்லை. வெப்ப பாதுகாப்பு தகடு பிரிவதில் கோளாறு ஏற்பட்டதால், இத்திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் பிஎஸ்எல்வி ராக்கெட் எதுவும் விண்ணுக்கு அனுப்பப்படவில்லை.
இதேபோன்ற தவறு மீண்டும் நடக்காத வகையில் பிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பில் பலகட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் தற்போது, பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட், ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
இதில் 710 கிலோகிராம் எடையுள்ள இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோளும், ஒரு மைக்ரோ மற்றும் ஒரு நானோ செயற்கைக்கோளும் அனுப்பப்படுகின்றன.
மேலும், கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 25 நானோ செயற்கைக்கோள்களும், 3 மைக்ரோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட்டில் அனுப்பப்படுகின்றன. மொத்தம் அனுப்பப்படும் 31 செயற்கைக்கோள்களின் எடை 1,323 கிலோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:

The 28hr countdown activity of PSLV-C40/Cartosat2 Series Satellite Mission has started

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *