4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு – முதலில்’முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா

4 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ‘பாதுகாப்பு – முதலில்’ முக்கியத்துவத்தை வலியுறுத்தும் யமாஹா

குழந்தைகளிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முனைவின் நோக்கமாகும்

சென்னை: 2018 ஜனவரி 9: இந்தியா யமாஹா மோட்டார் நிறுவனம் தனது அதிர்ஷ்டப் பொருளான ஜிப்பியின் 4 ஆவது பிறந்தநாளைச் சென்னை சிஎஸ்ஐ ஈவார்ட் பள்ளி வளாகத்தில் கொண்டாடியது. ‘பாதுகாப்பு-முதலில்’ பிரச்சாரம் மூலம் குழந்தைகள் இடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முனைவின் முக்கிய நோக்கமாகும்.

குழந்தைகளிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியப் பொறுப்பு இருப்பதால், 5ஆவது ஆண்டாகத் தொடரும் யமாஹா குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி (ஓய்சிஎஸ்பி) அவர்களிடையே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலைப் பாதுகாப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதை வலியுறுத்துகிறது. பெற்றோர்கள் சாலைகளின் ஊர்திகளைப் பயன்படுத்துவதால், அவர்களை மாற்றும் திறன் குழந்தைகளிடம் இருப்பதாக யமாஹா நம்புகிறது. குழந்தைகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களுடன் இணைந்திருக்கவும், ‘ஜிப்பி’ அதிர்ஷ்டப் பொருளுடன் இந்தப் பிரச்சாரம் 2014 தொடங்கியது.

7-13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்குக் குதூகலமூட்டும் பல்வேறு போட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் யமாஹா ஏற்பாடு செய்தது. இதனைத் தொடர்ந்து யமாஹாவின் பிடித்தமான அதிர்ஷ்டப் பொருளான – ஜிப்பியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் பிராண்ட் ஏற்பாடு செய்த சாலைப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்ட இந்தியன் ஐடல் ஜூனியர் (சீசன் 2) வெற்றியாளர் அனன்யா நந்தா மற்றும் யமாஹா ஃபேஸ்ஸினோ மிஸ் திவா 2017 வெற்றியாளர் ஷ்ரத்தா ஷஷிதர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் குழந்தைகளுடன் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று யமாஹா மோட்டார் இந்தியா விற்பனை & சந்தை மூத்த துணைத் தலைவர் ராய் குரியன் கூறுகையில் ‘பொறுப்புள்ள இரு சக்கர பிராண்டாகப் ‘பாதுகாப்பு – முதலில்’ என்பதே யமாஹாவின் முதல் மற்றும் முக்கியப் பணியாகும். குடும்பம் மற்றும் சமூகத்தில் இந்தச் செய்தியை பரப்புவதில் முக்கியப் பங்களிப்பவர்கள் குழந்தைகள்தான். எனவே எதிர்காலத்தில் பொறுப்புள்ள சாலைப் பயன்படுத்துவோராக உருவாகக் குழந்தைகளைப் பாதுகாப்பதுடன், அவர்களிடையே விழிப்புணர்வை ஏர்படுத்துவதும் யமாஹாவின் பொறுப்பாகும்.

2017இல் யமாஹா குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் (ஓய்சிஎஸ்பி) இந்தியாவில் 300க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் 50,000 மாணவர்களைச் சென்றடைந்துள்ளது.

ALSO READ:

Yamaha reiterates the importance of ‘Safety- First’ with Zippy’s 4th birthday celebration

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *