ஒநாய்கள் ஜாக்கிரதை சினிமா விமர்சனம்

ஒநாய்கள் ஜாக்கிரதை சினிமா விமர்சனம்

எஸ்.பயாஸ்கோப் புரொடக்ஷன்ஸ் தயாரித்து கரீஷ்மா என்போடைன்மென்ட் வெளியிட கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒநாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கியிருக்கிறார் ஜே.பி.ஆர்.

விஸ்வந்த், ரித்விகா, ஆடம்ஸ், ஏ.வெங்கடேஷ், விஜய்கிருஷ்ணராஜ், நித்யா ரவீந்தர்,பேபி அம்ருதா, கேஸியான் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-மகேஷ், கே.தேவ், இசை-ஆதீஷ், உத்ரியன், பாடல்கள்-கார்த்திக்கேயன், ஜே.பி.ஆர், எடிட்டிங்-தீபக், பிஆர்ஒ-வெங்கட்.

விஸ்வந்த், ஆடம்ஸ், ஏ.வெங்கடேஷ், கேஸியான் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். பணக் கஷ்டத்தில் தவிக்கும் இந்த நான்கு பேரும் குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். இதில் முதலில் மாட்டுவது ரித்விகா, அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிடும் போது ரித்விகா இவர்களை அடையாளம் கண்டு கொள்வதால் அவரை கொன்று அந்த பங்களாவிலேயே புதைத்து விடுகிறார்கள். இரண்டாவதாக சொந்த அக்கா குழந்தை அம்ருதாவை கடத்த திட்டம் போடுகிறார் விஸ்வந்த். அக்கா நித்யாரவீந்தரும், மாமா விஜய் கிருஷ்ணராஜீம் குழந்தை அம்ருதா மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருப்பதால் லட்சத்தில் பணம் பார்க்கலாம் என்று நண்பர்கைள பணிய வைத்து கடத்துகிறார்.குழந்தையை வைத்து லட்சத்தில் n;தாடங்கும் மிரட்டல் பேரம் கோடிகளை தாண்டுகிறது. போலீசிடம் போகாமல் தன் குழந்தையை உயிருடன் மீட்க கேட்ட பணத்தை கோடிகளில் கொட்டிக் கொடுக்கும் விஜய் கிருஷ்ணராஜீவிடம் குழந்தையை மட்டும் ஒப்படைக்காமல் நால்வரும் ஏமாற்றி வருகின்றனர். கடைசியாக குழந்தையை ஒப்படைக்க நினைக்கும் நேரத்தில் குழந்தை அம்ருதா நான்கு பேரையும் பார்த்து விடுகிறது.எங்கே குழந்தை காட்டி கொடுத்து விடுமோ என்று பயந்து விஸ்வந்தின் எதிர்ப்பை மீறி மற்ற மூன்று பேரும் குழந்தையை கொன்று புதைத்து விடுகின்றனர். குழந்தையை பார்க்க முடியாமல் குழந்தையின் தாய் நித்யா ரவீந்தரும், தந்தை நிஜய் கிருஷ்ணராஜீம் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அதே சமயம் பங்களாவில் இறந்த ரித்விகாவும், குழந்தை அம்ருதாவும் பேயாக மாறி நால்வரையும் மிரட்டுகின்றனர். பேயிடமிருந்து நான்கு பேரும் தப்பித்தார்களா? பேய்கள் இவர்களை பழி வாங்கியதா? பணத்தை என்ன செய்தார்கள்? குழந்தையை பறி கொடுத்த பெற்றோர் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

விஸ்வந்த், ரித்விகா, ஆடம்ஸ், ஏ.வெங்கடேஷ், விஜய்கிருஷ்ணராஜ், நித்யா ரவீந்தர்,பேபி அம்ருதா, கேஸியான்; ஆகியோர் படத்தின் பக்கமேளங்கள்.
மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு ஒரளவு கை கொடுத்துள்ளது.

ஆதீஷ், உத்ரியன் இரண்டு பாடல்களின் இசை கேட்கும்படியும், பின்னணி இசை மிரட்ட முயற்சி செய்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்-ஜே.பி.ஆர். குழந்தை கடத்தலால் பாதிக்கப்படும் பெற்றோர்களின் நிலையையும், பணத்தாசையால் நிலை தடுமாறி கொலைக்கும் அஞ்சாத நண்பர்கள் என்று திரைக்கதையமைத்து முதல்பாதி விறுவிறுப்பாக செல்லும் கதை, அதன் பின் நிலை தடுமாறி பேய், மிரட்டல், வழிவாங்குதல் என்று தடுமாறி இயக்கியிருக்கிறார் ஜே.பி.ஆர். பேய் காட்சிகளை தவிர்த்து கடத்தல் சம்பவத்தை மட்டும் மையமாக வைத்திருந்தால் க்ரைம் த்ரில்லராக இன்றைய சூழ்நிலைக்குகேற்ப படம் பேசப்பட்டிருக்கும். நிறைய காமெடி பேய் படம் பார்த்திருக்கிறோம் ரசித்திருக்கிறோம் ஆனால் சீரியஸ் ரித்விகா பேயே அறைகுறை மேக்அப்பில் காமெடியாக வந்து பார்க்க முடியாமல் பயமுறுத்துவது இந்த படத்தில் தான்.

மொத்தத்தில் எஸ்.பயாஸ்கோப் புரொடக்ஷன்ஸ் தயாரித்து கரீஷ்மா என்போடைன்மென்ட் வெளியிடும்  ஒநாய்கள் ஜாக்கிரதை குடும்பத்திலே உலவும் ஒநாய்கள் ஜாக்கிரதை.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *