விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் சினிமா விமர்சனம்

விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் சினிமா விமர்சனம்

சரஸ்வதி பிலிமிஸ் தயாரிப்பில் தெலுங்கு படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல் என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார் ராஜமௌலியின் உதவியாளராக இருந்து இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய பாகுபலி கே.பழனி.

நாக அன்வேஷ், ஹேபா பட்டேல், சுமன், ஷாயாஜி ஷிண்டே, பிரதீப்ராவத், பிதாமகன் மகாதேவன், கபிர்சிங், சப்தகிரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-குணா, இசை-பீம்ஸ், பாடல்கள் சினேகன், வசனம்-வி.பிரபாகர், நிர்வாக தயாரிப்பு-ஆர்.பன்னீர்செல்வம், திரைக்கதை, தயாரிப்பு-செந்தூரப்பூ கிருஷ்ணாரெட்டி, மக்கள் தொடர்பு வெங்கட்.

ஆந்திராவில் அமராவதி நகரத்தில் விண்ணுலக பெண்ணின், பழங்கால சிலையை கண்டெடுக்கும் ஷாயாஜி ஷிண்டே அதை வெளிநாட்டு சிலை கடத்தல்; கும்பலுக்கு பல கோடிக்கு விற்று விடுகிறார். அந்த சிலையை சென்னைக்கு கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கும் வேலையை நாக அன்வேஷ் மற்றும் சப்தகிரியிடம் ஒப்படைக்கப் படுகிறது. சிலை பற்றி எதுவும் அறியாத இருவரும் ஆம்புலன்ஸ் வேனில் எடுத்துச் செல்லும் போது போலீசின் கெடுபிடியிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியில் செல்ல விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் சிலை வெளியே வந்து விழ, அதை கவனிக்காத இருவரும் மது அருந்துகின்றனர். நாக அன்வேஷ் குடிபோதையில் விழுந்து கிடக்கும் சிலையை பார்த்து வர்ணிக்க, சிலை நட்சத்திரா என்ற பெண்ணாக உயிர்பெறுகிறது. மறுநாள் வண்டியை எடுக்க அதில் சிலை இல்லாததை அறிந்து கலக்கமடையும் இருவரின் எதிரில் வரும் நட்சத்திராவை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வருகின்றனர். அதன் பின் டூப்ளிகேட் சிலையை வாங்கி அதே போல் பேக் செய்து ஷாயாஜி ஷிண்டேயிடம் கொடுத்து விட்டு தப்பித்து விடுகின்றனர். நட்சத்திராவையும் தங்களுடன் அழைத்து செல்கின்றனர். விண்ணுலக பெண் என்று தெரியாமல் நாக அன்வேஷ் நட்சத்திராவை காதலிக்க தொடங்குகிறார். அதே சமயத்தில் தங்களை ஏமாற்றிய நாக அன்வேஷை கடத்தல் கும்பல் துரத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பித்து ஒடும் போது கிராமத்து மக்கள் இருவரையும் காப்பாற்றுகிறார்கள். அந்த கிராமத்தில் காணாமல் போன ஊர் தலைவரின் மகள் நந்து என்ற நினைத்து நட்சத்திராவை கிராமத்து மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். விண்ணுலக நட்சத்திரா எப்படி நந்துவானார்? என்ன காரணம்? நாக அன்வேஷ்-நட்சத்திரா காதல் கை கூடியதா? நட்சத்திரா மீண்டும் விண்ணுலகிற்கு சென்றாரா? என்பதே மீதிக்கதை.

நாக அன்வேஷ், ஹேபா பட்டேல், சுமன், ஷாயாஜி ஷிண்டே, பிரதீப்ராவத், பிதாமகன் மகாதேவன், கபிர்சிங், சப்தகிரி மற்றும் பலர் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஜொலிக்கிறார்கள்.
குணாவின் ஒளிப்பதிவும், பீம்ஸின் இசையும் கற்பனை உலகையும், நிஜ உலகையும் கண் முன்னே நிறுத்துகின்றனர்.

வி.பிரபாகரின் வசனங்கள் செவிக்கு விருந்து.

கதை, இயக்கம்-பாகுபலி கே.பழனி. இந்திரலோகத்தில் இருக்கும் தேவதை தன்னைப்போல் இருக்கும் பூலோகத்தில் வாழ்ந்து தன் கிராம மக்களை காப்பாற்ற முடியாமல் இறந்த பெண்ணின் நிறைவேறாத கடமைகளையும், ஆசைகளையும் மண்ணுலகத்திற்கு வந்து நிறைவேற்றுவதே படத்தின் கதை. தெலுங்கு படமான ஏஞ்சல் தெலுங்கு படத்தின் மொழிமாற்றத்தில் காதல், மோதல், சென்டிமெண்ட், காமெடி கலந்து கந்து வட்டி, நிலம் அபகரித்தல், பண மோசடி என்று சமூக சீர்கேடுகளையும், விவசாய நிலத்தை பறிகொடுத்து தவிக்கும் அவலங்களையும் படத்தில் திணித்து கற்பனைகெட்டாத திரைக்கதையோடு இணைத்து சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாகுபலி கே.பழனி.

மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் ஆந்திரா கார சார மசாலாவில் பூத்த தேவதை.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *