சாவி விமர்சனம்

சாவி விமர்சனம்

தி ஸ்பார்க் லேண்ட் நிறுவனம் தயாரிப்பில் சாவி படத்தை இயக்கியிருக்கிறார் ஆர்.சுப்ரமணியன்.
இதில் நாயகனாக பிரகாஷ் சந்திரா, நாயகியாக சுனு லட்சுமி நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ லிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை – சதீஷ் தாயன்பன், ஒளிப்பதிவு – சேகர்ராம், எடிட்டிங் – சுரேஷ்அர்ஸ், கலை – வீராசமர், ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர், நடனம் – விஜி சதீஷ், அபிநயஸ்ரீ, தயாரிப்பு நிர்வாகம்-எம்.சிவகுமார், பிஆர்ஒ-நிகில்.

மதுரையில் சாவிகளை தயாரிக்கும் தொழில் செய்வர் பிரகாஷ்; சந்திரா. இவரின் அண்ணன் ஆட்டோ டிரைவர். பிரகாஷ் சந்திராவின் உயிர் நண்பன் ஆனந்தன் இவர்களுடன் நட்புடன் பழகுகிறார் போலீஸ் கான்ஸ்டபிள். இதனிடையே அந்த ஊரில் சம்பவம் ஒன்று நடக்கிறது. பழனி கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் குடும்பம், வீட்டில் வைத்திருந்த நாற்பது லட்சம் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதை அறிந்து அதிர்கிறார்கள். ஏற்கனவே வட்டிக்கு பணம் வாங்கி அதை திருப்பி தர வைத்திருந்த பணம் என்பதால் கடன் கொடுத்த வட்டிக்காரர் உடனே பணத்தை தர வேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டில் உள்ள மகளை தூக்கி விடுவேன் என்று எச்சரித்து மிரட்டிவிட்டு போகிறார். இதனால் மனமுடைந்த குடும்பத்தின் தலைவர் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தற்கொலையை போலீசார் விசாரிக்கின்றனர். அதன் பின் பிரகாஷ் சந்திராவின் ஆட்டோ டிரைவர் அண்ணன் படுகொலை செய்யப்பட, பிரகாஷ் சந்திராவும் தலைமறைவாகிறார். வீட்டில் உள்ள குடும்பத்தார், நண்பன், பிரகாஷ் சந்திராவிற்கு நிச்சயிக்கப்பட்ட பெண் சுனுலட்சுமி ஆகியோரை பிடித்து விசாரிக்கிறார்கள். அனைவரும் பிரகாஷ் சந்திராவைப் பற்றி தங்களுக்கு தெரிந்த உண்மைகளை போலீசிடம் சொல்கிறார்கள். ஆனாலும் போலீசாரால் பிரகாஷ் சந்திராவை பிடிக்க முடியவில்லை. பிரகாஷ் சந்திரா தான் குற்றவாளியா? ஏன் தலைமறைவானார்? உண்மையான காரணம் என்ன? என்பதே சிம்பிளாக சொல்லியிருக்கும் த்ரில்லிங்கான கதைக்களம்.

பிரகாஷ் சந்திரா சாதாரண முகதோற்றம் என்றாலும் ஏற்றிருக்க கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்புற பிரதிபலித்திருக்கிறார். குற்றவாளியை பிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வி கண்டாலும் விடாமல் துரத்தி பிடித்து இறுதியில் வெற்றி பெறும் வரை தன் பங்களிப்பை கச்சிதமாக கொடுத்து கை தட்டல் பெறுகிறார்.

சுனுலட்சுமி அழுத்தமான நடிப்பு படத்திற்கு வலு சேர்கிறது. அவரை விட அவரின் குடிகார தந்தை சில காட்சிகளே வந்தாலும் பேசும் வசனங்கள் சிரிப்பலைகளில் அரங்கமே அதிர்கிறது.
மற்றும் ராஜலிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா உள்பட பலர் படத்தில் நடித்திருப்பதை விட இயல்பாக வாழ்ந்திருப்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
சதீஷ் தாயன்பன் இசையும், சேகர்ராம் ஒளிப்பதிவும் சிறப்பாகவும், இயல்பாகவும் இருக்கிறது.
இயக்கம்-ஆர்.சுப்ரமணியன். மதுரையில் நல்லவனாக வாழும் இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் திடுக்கிடும் கொலை சம்பவங்களால் கெட்டவனாக சித்திரிக்கப்பட அதிலிருந்து மீண்டு வர நடத்தும் போராட்டமே திரைக்கதை. முதலில் குழப்பமாக தொடங்கும் கதை போகப் போக ஒவ்வொரு காட்சியும் தெளிவாக புரியும்படி தோய்வின்றி விறுவிறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் சஸ்பென்ஸ் வைத்து இறுதியில் த்ரில்லிங்காக முடித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.சுப்ரமணியன். இது போன்ற நல்ல படத்தை சிறப்பாக பிரமோஷன் செய்தால் நிச்சயம் படம் வெற்றி வாகை சூடும்.

மொத்தத்தில் யதார்த்தமான க்ரைம் கதை, பெருத்தமான தலைப்பு, அதற்கேற்ற இயல்பான கதாபாத்திரங்கள், சிறப்பான இயக்கத்தால் சாவி மக்களின் பாராட்டைப் பெறும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *