விதி மதி உல்டா விமர்சனம்

விதி மதி உல்டா விமர்சனம்

ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் விதி மதி உல்டா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் பாலாஜி.எஸ்.

மீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், ஞானசம்பந்தம், சித்ரா லட்சுமணன், ஆதித்யா டி.வி. குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வின் விநாயகமூர்த்தி, எடிட்டிங் – புவன் சீனிவாசன், பாடல்கள் – கபிலன், கலை – வனராஜ், நடனம் – நந்தா- தஸ்தா, தயாரிப்பு மேற்பார்வை – அகமது பஹாத், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.செல்லதுரை, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல்.
ரமீஸ்ராஜாவிற்கு நாளை நடப்பதை இன்றே தெரிந்து கொண்டால் எப்படியிருக்கும் என்ற ஆசை போல் ஒரு விபரீத கனவு வருகிறது. அதாவது ரமீஸ் ராஜா ஜனனி ஐயரை காதலிக்க தொடங்குகிறார். ஆனால் ஜனனி ஐயரை தாதா டேனியல் பாலாஜியின் தம்பி ஒரு தலையாக காதலிக்க, ரௌடிகள் மூன்று பேரை அனுப்பி ஜனனி ஐயரை கடத்தி வர ஏற்பாடு செய்கிறார். அதே சமயம் ரமீஸ் ராஜாவின் அப்பா ஞானசம்பந்தம் ப்pரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் நாற்பதாயிரம் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்.

இதனால் கடுப்பாகும் சென்ட்ராயன் தன் நண்பர்கள் இரண்டு பேரை துணைக்கு அழைத்து ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் பறிக்க திட்டம் போடுகிறார். இந்த இரண்டு கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் ரமீஸ் ராஜாவைவும், ஜனனி ஐயரையும் கடத்தி ஒரே பாழடைந்த பங்களாவில் தனித்தனி அறையில் கட்டி போடுகிறார்கள். அதே பங்களாவில் திருட்டு நகையை ஒளித்து வைத்திருக்கும் கருணாகரனும் அங்கே வருகிறார். அங்கே அடியாட்கள் ஆறு பேரை பார்த்தவுடன் பெரிய தாதாவாக ஆசைப்பட்டு தன்னுடன்; கூட்டு சேர்ந்தால் பணம் தருவதாக ஆசை காட்டி அவர்களுடன் டீல் பேசுகிறார். இதற்கிடையே ரமீஸ் ராஜாவும், ஜனனி ஐயரும் தப்பித்து வந்து இவர்களிடம் திரும்பவும் மாட்டிக் கொள்கின்றனர். அந்த தருணத்தில் டேனியல் பாலாஜியின் தம்பி அங்கே வர கைகலப்பு நடந்து தவறுதலாக சுட்டுக் கொல்லப்படுகிறார்.

 

இதனால் ஆத்திரமடையும் தாதா டேனியல் பாலாஜி இதற்கு காரணம் ரமீஸ் ராஜாவும், ஜனனி ஜயர் தான் காரணம் என்று அவர்களையும், குடும்பத்தாரையும் அடித்து கொன்று விடுகிறார்.
மேலே சொன்ன அத்தனை நிகழ்வுகளும் ரமீஸ் ராஜாவிற்கு கனவாக வருகிறது. விழித்து எழுந்தவுடன் தன் தந்தை ஞானசம்பந்தத்திடம் சொல்லி பணத்தை திருப்பி கொடுக்கச் சொல்கிறார். ஜனனி ஐயரை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்கிறார். ஆனால் எவ்வளவு தான் முயன்றாலும் கனவில் பார்த்த ஒவ்வொருவரும் வேறொரு தருணத்தில் இவர்கள் வாழ்க்கையில் குறிக்கிடுகிறார்கள். அதே சம்பவங்கள் வேறொரு கோணத்தில் காதலர்களை நெருங்குகிறது. இறுதியில் கனவு பலித்ததா? தாதாவிடமிருந்து குடும்பத்தையும், காதலியையும் காப்பாற்றினாரா? என்பதே காமெடி கலந்த சஸ்பென்ஸ் க்ளைமேக்ஸ்.

டார்லிங்-2வில் கூட்டணியமைத்து களமிறங்கிய ரமீஸ் ராஜா, இந்தப் படத்தில் சோலோ ஹீரோவாக பாட்டு, நடனம், காதல், காமெடி, சண்டை என்று கலந்து கட்டி நடிப்பில் இம்ரூவ் செய்து மிளிர்கிறார்.

ஜனனி ஐயர் காதலியாக நச்சென்று மனதில் பதிகிறார்.

டெரர் வில்லனாக டேனியல் பாலாஜி, வாய் ஊதார் ;திருடன் கருணாகரன், காமெடி பிரோக்கர் சென்ட்ராயன், ஹீரோவின் அப்பாவாக ஞானசம்பந்தம், ஹீரோயின் அப்பாவாக சித்ரா லட்சுமணன், காமெடி அடியாட்களாக ஆதித்யா டி.வி. குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் மற்றும் பலர் படத்தின் உயிரோட்டமான காட்சிகளுக்கு உத்தரவாதம்.

மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும், அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையும் படத்திற்கு மேலும் வலு சேர்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-விஜய் பாலாஜி.எஸ். முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்து, சிறப்பாக திரைக்கதையமைத்து வித்தியாசமான கோணத்தில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸின்; உதவியாளராக இருந்து இயக்குனராக களமிறங்கியிருக்கும் விஜய் பாலாஜி.எஸ். இது காமெடி கலந்த த்ரில்லர் படமாக நாளை நடப்பதை இன்றே அறிந்து கொண்டால் விதியை மதியால் வெல்லலாம் என்று கணக்கு போடும் இளைஞனுக்கு ஏற்படும் சம்பவங்கள் தடம் மாறி மீண்டும் அவனுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் விபரீதங்களை சமாளித்து இறுதியல் வெல்கிறாரா என்பதை ரௌடிசத்தையும் கலந்து த்ரில்லிங்காகவும், சஸ்பென்சாகவும் கொடுத்து படத்தை தோய்வில்லாமல் இயக்கி கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் விஜய் பாலாஜி.எஸ்.

மொத்தத்தில் விதி மதி உல்டா த்ரில்லிங்கான ஜாலியான ஒரு கனவு உலா.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *