சங்குசக்கரம் விமர்சனம்

சங்குசக்கரம் விமர்சனம்

லியோ விஷன், சினிமாவாலா பிக்சர்ஸ் வழங்கும் கே.எஸ்.ராஜ்குமார், கே.சதிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவான சங்குசக்கரம் படத்தை இயக்கியிருக்கிறார் மாரிசன்.
இதில் கீதா, திலீப் சுப்புராயன், மோனிகா, தீபா, ஜெனீபர், நிஷேஷ், பாலா, தேஜோ, க்ருத்திக், ஆதித்யா, அஜீஸ், ஆதர்ஷ், ராஜா, ஜெர்மி ரோஸ்கி, பிரதீப், ராக்கி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ரவிகண்ணன்.ஜி, எடிட்டிங்-விஜய்வேலுகுட்டி, இசை-ஷபீர், சண்டை-திலீப் சுப்புராயன், கலை-எஸ்.ஜெயச்சந்திரன், மக்கள் n;தாடர்பு-சுரேஷ்சந்திரா.
ஏழு சிறுவர்கள் விளையாட பேய் இருக்கும் பாழடைந்த பங்களாவிற்கு செல்ல வழி சொல்கிறார் முதியவர். அங்கே செல்லும் ஏழு சிறுவர்களை கடத்தி வைத்து பணம் பறிக்க திட்டம் தீட்டுகிறார் கடத்தல்காரரான திலீப் சுப்புராயன். அதே சமயம் 500 கோடி சொத்துள்ள பணக்கார பையன் நிஷேஷை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர் அவனின் இரண்டு கார்ட்டியன்கள். நிஷேஷ் தன் நண்பனுடன் அந்த பேய் பங்களாவிற்குள் செல்கிறான். அவனை கொல்ல கார்ட்டியன்களும் பங்களாவிற்குள் செல்கின்றனர். இவர்களின் திட்டத்தை அறிந்து ஒன்பது சிறுவர்களை அந்த பங்களாவிற்குள் இருக்கும் குழந்தை பேய் மோனிகா காப்பாற்றுகிறது. தாய் பேய் கீதா கடத்தல்காரனையும், கார்ட்டியன்களையும் அடித்து பயமுறுத்துகிறது. அதே சமயம் அந்த பங்களாவில் இருக்கும் பேயை விரட்டி அதை வாங்க நினைக்கும் புரோக்கர் பங்களாவிற்குள் மந்திரவாதிகளை அனுப்பி தாய், மகள் ஆகிய இரண்டு பேய்களையும் குடுவையில் அடைந்து விடுகிறார். அதன் பின் இவர்கள் அனைவரும் சேர்ந்து குழந்தைகளை என்ன செய்தார்கள்? குழந்தைகள் தப்பித்தார்களா? இரண்டு பேய்களும் விடுவிக்கப்பட்டு எதிரிகளை பழி வாங்கியதா? என்பதே க்ளைமேக்ஸ்.
கீதா, திலீப் சுப்புராயன், மோனிகா, தீபா, ஜெனீபர், நிஷேஷ், பாலா, தேஜோ, க்ருத்திக், ஆதித்யா, அஜீஸ், ஆதர்ஷ், ராஜா, ஜெர்மி ரோஸ்கி, பிரதீப், ராக்கி மற்றும் பலர் படத்திற்கு பலம்.
ரவிகண்ணனின் ஒளிப்பதிவு கிராபிக் காட்சிகளையும், பேய் பங்களாவையும் தத்ரூபமாக காட்சிக் கோணங்களில் தந்திருக்கிறார்.
ஷபிரின் பின்னணி இசை பயமுறுத்த முயற்சித்திருக்கிறது.
இயக்கம்-மாரிசன். பெரியவர்களை வைத்தே பேய் கதைகள் வெளிவந்திருக்கிறது இதில் குழந்தைகளை வைத்து பேய் கதையை உருவாக்கியிருக்கிறார் மாரிசன். பேயை பார்த்து குழந்தைகள் பயப்படாமல் கேள்வி கேட்டே பேயை பயமுறுத்தும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது, சீன,அமெரிக்க மந்திரவாதிகளை நம்மூர் மந்திரவாதி புத்தி சாதுர்யத்தால் விரட்டி அடிப்பதும் சிரிக்க வைப்பதோடு, சில காட்சிகளில் கேட்கும் கேள்விகள் சிந்திக்க வைக்கவும் செய்கிறது. பல குறைகள் இருந்தாலும், பேய்க்கு பிளாஷ்பேக் வைக்காமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தோய்வில்லாமல் ஜாலியாக டாரு டமராக படத்தை இயக்கியிருக்கிறார் மாரிசன்.
மொத்தத்தில் சங்கு சக்கரம் குழந்தைகளுக்கு குதூகலம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *