களவாடிய பொழுதுகள் விமர்சனம்

களவாடிய பொழுதுகள் விமர்சனம்

ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கே.கருணாமூர்த்தி, சி.அருண்பாண்;டியன் தயாரிப்பில் கதை எழுதி இயக்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-பரத்வாஜ், ஒளிப்பதிவு-தங்கர்பச்சான், திரைக்கதை, வசனம்-தங்கர்பச்சான்-ஆர்.டி.தமிழ்செல்வி, எடிட்டிங்-பி.லெனின், சி.எஸ்.பிரேம், கலை-கே.கதிர், பாடல்கள்-வைரமுத்து-அறிவுமதி, பிஆர்ஒ-டைமண்ட் பாபு.
கல்லூரியில் படிக்கும் போது பிரபுதேவாவும், பூமிகாவும் காதலிக்கிறார்கள்.இவர்களின் காதலுக்கு பூமிகாவின் பணக்கார அப்பா எதிர்ப்பு தெரிவித்து சூழ்ச்சி செய்து இவர்களை பிரித்து பூமிகாவிற்கு வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார். அதன் பின் கார் டிரைவராகும் பிரபுதேவாவும் இன்பநிலாவை திருமணம் செய்து கொண்டு மகள் பிறக்க, அன்றாடம் வருமானம் இல்லாமல் கஷ்ட நிலைமையில் வாழ்கிறார். இந்த சமயத்தில் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடும் பிரகாஷ்ராஜை பிரபுதேவா மருத்துவமனையில் சேர்த்து தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்து உயிரை காப்பாற்றுகிறார். அங்கே பிரகாஷ்ராஜின் மனைவி பூமிகா என்பதறிந்து அங்கிருந்து சென்று விடுகிறார். பிரகாஷ்ராஜ் நலம் பெற்றவுடன் தன் மனைவி பூமிகாவை அனுப்பி பிரபுதேவாவை கண்டு பிடித்து பண உதவி செய்ய அனுப்புகிறார். அங்கே சென்றவுடன் தான் காதலன் பிரபுதேவா என்பதை அறியும் பூமிகா ஏழ்மை நிலையை பார்த்துவிட்டு பணத்தை கொடுத்து தன் கணவரிடம் சொல்லி வேலை வாங்கி தருவதாகவும் கூறுகிறார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பிரபுதேவா பூமிகாவை அனுப்பி விடுகிறார். பூமிகா பலமுறை தொடர்பு கொண்டாலும் வர மறுக்கும் பிரபுதேவாவை பிரகாஷ்ராஜ் பேசி குடும்பத்துடன் வரவழைத்து வேலையும் போட்டு கொடுக்கிறார். அதன் பின் நடந்தது என்ன? பிரிந்த காதலர்கள் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டதா? திருமண வாழ்க்கை என்னானது? என்பதே மீதிக்கதை.
பொற்செழியனாக பிரபுதேவா கணவன்-காதலன் என்ற இருவேறு உணர்ச்சிகரமான நடிப்பில் மனதில் நிற்கிறார்.
ஜெயந்;தியாக பூமிகா காதலன்-கணவன் என்ற இருவரையும் விட முடியாமல் தவிக்கும் தவிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பூமிகாவின் கணவர் சௌந்தர்ராஜாவாக பிரகாஷ்ராஜ், சத்யராஜ்,கருப்பு ராஜா, சத்யன், இன்பநிலா, பேபி ஜோஷிகா ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.
பரத்வாஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம் -தங்கர்பச்சான்.வலுவான கதாபாத்திரங்கள், தெளிவான யதார்த்தமான திரைக்கதை அமைப்பது தங்கர்பச்சானின் தனித்துவம். எட்டு வருடங்களுக்கு முன்னால் எடுத்த படம் என்பதால் இக்காலத்திற்கு பொருந்தாத நாடகத்தன்மை நிறைந்த கதைக்களமாக இருந்தாலும், பிரித்த காதலர்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் தங்கள் குடும்பங்களை மனதில் வைத்து கொண்டு கண்ணியமாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பிரவுதேவாவின் மூலம் ஆசைகள், வருத்தங்கள் உதறிவிட்டு தூய்மையான உறவோடு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை எந்தவொரு முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாமல் அற்புதமாக ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.
களவாடிய பொழுதுகள் இப்பொழுதுள்ள பிரிந்த திருமணமான காதலர்கள் பார்க்க வேண்டிய படம்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *