பலூன் விமர்சனம்

பலூன் விமர்சனம்

70ஆஆ எண்டர்டெய்ன்மென்ட்ஸ், ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் பலூன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சினிஷ்.
ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகிபாபு, நாகிநீடு, ஜாய் மாத்யூஸ், ராமசந்திரன், பத்திரிகையாளர் சு.செந்தில் குமரன், ரிஷி, மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு-சரவணன் ராமசாமி, எடிட்டிங்-ரூபன், கலை-சக்தி வெங்கட்ராஜ்.எம், சண்டை-திலீப் சுப்பராயன், பாடல்கள்-அருண்ராஜா காமராஜ், உடை-சத்யா என்ஜே,நடனம்-ஷெரிஃப் எம், மிக்சிங்-ஹரிஷ், ஸ்டில்ஸ்-ராஜேந்திரன், ஒலி-சின்க் சினிமா, தயாரிப்பு மேற்பார்வை-டி.முருகேசன், ஒப்பனை-அப்துல், டிசைன்ஸ்-என்.டி.ப்ரதுல், வண்ணம்-கௌதம் ஆர் சங்கர், பிஆர்ஒ-சுரேஷ்சந்திரா.
பேய் படத்தின் கதை டிஸ்கஷனுக்காக ஊட்டிக்கு செல்கிறார் இயக்குனரான ஜெய். தன் நண்பர்கள் கார்;த்திக் யோகி, யோகி பாபு, மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு ஆகியோருடன் தனி பங்களாவில் தங்குகிறார். அங்கே அமானுஷ்யமாக பல பயமுறுத்தும் சம்பவங்கள் நடக்க பப்புவை பேய் ஆட்டி படைக்கிறது. அவனை காப்பாற்ற நினைக்கும் போது அஞ்சலிக்கும் பேய் பிடித்து விடுகிறது. இவர்களை ஆட்டிப் படைக்கும் இரண்டு பேய்க்கும் ஜெய்யின் பூர்வ ஜென்மத்திற்கு தொடர்பு இருப்பதை பாதிரியார் சொல்கிறார். அதன் பின் ஜெய் மனைவி அஞ்சலியையும், அண்ணன் மகனையும் காப்பாற்றினாரா? பேய்கள் இவர்களை துன்புறுத்த என்ன காரணம்? என்பதே புஸ்வானக் கதை.
ஜெய் இயக்குனர், பலூன் விற்பவர் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் தோன்றினாலும் எந்த ஒரு காட்சிக்கும் முகத்தில் ரியாக்ஷன் இ;ல்லாமல் கொடுத்த வேலையை செய்து விட்டு போகிறார்.
அஞ்சலி மனைவியாகவும், ஜனனி பூர்வ ஜென்ம காதலியாகவும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
யோகிபாபு கவுண்டர் பஞ்ச் காமெடியில் முதல் பாதியை தோய்வில்லாமல் நகர்த்தி செல்ல உதவுகிறார்.
பத்திரிகையாளர் சு.செந்தில்குமரன் முதல் காட்சியில் வந்து கலகலப்பூட்டுகிறார்.
நாகிநீடு, ஜாய் மாத்யூஸ், ராமசந்திரன், ரிஷி, மோனிகா ஆகியோர் படத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை படத்தில் ஏற்படும் திகில் உணர்வுக்கு உத்தரவாதம்.
சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் த்ரில்லாகவும், கச்சிதமாகவும் தந்திருக்கிறார்.
எழுத்து, இயக்கம்-சினிஷ். பல ஆங்கில திகில் படங்களின் கலவையாக வெளிவந்திருக்கும் இப்படத்தில் முதல் பாதி விறுவிறுப்பும், காமெடியும், திகில் உணர்வும் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சியால் சப்பென்று காற்றில்லாத பலூனாக சரிகிறது. இருந்தாலும் இயக்குனரின் கடின உழைப்பும், முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
பலூன் பாதி தூரம் சென்றவுடன் தடுமாறுகிறது.

மொத்தத்தில் பலூன் உயரம் செல்ல மறுக்கிறது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *