உள்குத்து விமர்சனம்

உள்குத்து விமர்சனம்

பி.கே.பிலிம் பாக்டரி சார்பில் ஜி.விட்டல்குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்து கதை, வசனம் எழுதி உள்குத்து படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் ராஜீ.
தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன், சரத்லோகிதஸ்வா, சாயாசிங், ஜான் விஜய், திலீப் சுப்பராயன், செஃப் தமோதரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு-பி.கே.வர்மா, பாடல்கள்-விவேக், ஆன்டனி தாசன், கட்டளை ஜெயா, எடிட்டிங்-பிரவீன் கே.எல், கலை-விதேஷ், சண்டை-திலீப் சுப்பராயன், உடை-ஜாய் கிரிசில்டா, ஒலி-டி.உதயகுமார், ஒப்பனை-கிரி, தயாரிப்பு நிர்வாகி -ராஜா செந்தில், தயாரிப்பு மேற்பார்வை-பால முருகன், மக்கள் தொடர்பு – ஜான்சன்.

கடலோர மீனவ குப்பத்தின் காமெடி தாதாவாக வலம் வரும் பாலசரவணனை நட்பாக்கிக் கொண்டு அவரது வீட்டில் தங்குகிறார் தினேஷ்.இதனிடையே பால சரவணனின் தங்கையையும் காதலிக்கிறார். கட்ட பஞ்சாயத்து, கந்துவட்டி, அடிதடி, கொலை என்று நாட்டாமை பண்ணும் சரத் லோகிதஸ்வாவும் அவரது மகனான திலீப் சுப்பராயனும் ஊரில் பெரிய மனிதர்களான வலம் வருகின்றனர். தினேஷ் இவர்களின் அடியாளை அடித்து விட, அதை தட்டி கேட்கும் திலீப் சுப்பராயனையும் அடித்து அனுப்புகிறார். இதைக் கேள்விப்படும் சரத் லோகிதஸ்வா தினேஷை கொல்ல ஆட்களை அனுப்புகிறார். ஆனால் தினேஷ் சரத் லோகிதஸ்வா மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோருடன் சமரசமாக பேசி நட்பாக்கிக் கொள்கிறார். கூட இருந்தே சமயம் பார்த்து திலீப் சுப்பராயனை படகில் கடல் நடுவே அழைத்துச் சென்று கொலை செய்து விடுகிறார். இதனை கேள்விப்படும் சரத் லோகிதஸ்வாவிடம் வேறு காரணம் சொல்லி திசை திருப்பி விடுகிறார். எதற்காக தினேஷ் திலீப் சுப்பராயனை கொன்றார்? பழி வாங்கும் காரணம் என்ன? என்பதே படத்தின் சென்டிமெண்ட் கலந்த அடிதடி க்ளைமேக்ஸ்.
ராஜாவாக தினேஷ் சோக முகத்துடன் படம் முழுவதும் வலம் வந்தாலும் சில இடங்களில் உடல் மொழியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆக்ஷன் காட்சிகளிலும், சோகக் காட்சிகளிலும் முடிந்த வரை நன்றாக செய்திருக்கிறார்.
காதலி கடலரசியாக நந்திதா கச்சிதமாக நடித்து விட்டு செல்கிறார்.
பாலசரவணனின் காமெடி டயலாக் சுறா சங்கர்ன்னா சும்மாவா என்று படத்தில் அடிக்கடி ரிபீட் ஆகி அவருக்கே ஆப்பு வைக்கும் நகைச்சுவை கலாட்டா.
ஸ்ரீமன் முதல் பாதியில் தாதாவிடம் அடி வாங்குவதும் இடைவேளைக்குப் பிறகு தாதாவிற்கே வில்லங்கமாக காயை நகர்த்துவதும் முக்கியமான கதாபாத்திரம் அமர்க்களம்.
வில்லன்களாக சரத் லோகிதஸ்வா மற்றும் திலீப் சுப்பராயன் மிரட்டல் ரகம். வில்லனாக அறிமுகமாகும் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் நடிப்பில் கலக்கி இருப்பதால் இனிமேல் தமிழ் சினிமாவிற்கு புது வரவு.
மற்றும் சாயாசிங், ஜான் விஜய், செஃப் தமோதரன் ஆகியோர் பக்கமேளங்கள்.
ஜஸ்டின் பிரபாகரின் இசை படத்திற்கு பலம்.
பி.கே.வர்மாவின் காட்சிக் கோணங்களில் கடலோர குப்பம், படகு செய்யும் தாதாவின் இடம், பாய்மர போட்டி, படகு சவாரி, கபடி ஆட்டம், மீன் மார்க்கெட், சண்டைக் காட்சிகள் என்று ஒளிப்பதிவில் அசத்தியிருக்கிறார்.
கதை, வசனம், இயக்கம்-கார்த்திக் ராஜீ.அக்கா-தம்பி பாசக் கதையில் கந்துவட்டி கொடுமை, பழிவாங்குதல், காதல் சென்டிமெண்ட் கலந்து தாதா, அடிதடி, ஆக்ஷன் களத்தில் கொஞ்சம் காமெடியோடு முதல் பாதி பழி தீர்ப்பது இடைவேளைக்குப் பின் பிளாஷ்பேக் என்று சிறப்பாக திரைக்கதையமைத்து விறுவிறுப்பாக, இயல்பாக க்ளைமேக்சை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜீ. வெல்டன்.
மொத்தத்தில் உள்குத்து யாருக்கும் வலிக்காத அசத்தல் குத்து.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *