சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 39 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 39 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* சுனில்குமார்- சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யான இவர், மனித உரிமை கமிஷனுக்கு மாற்றப்பட்டார்.

* டேவிட்சன் தேவாசீர்வாதம்- மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், மாநில தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

* ஏ.கே.விஸ்வநாதன்- சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி ஏற்பார்.

* எம்.ரவி- பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை கமிஷனர்

* மகேஷ்குமார் அகர்வால்- மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* ஜெயராம்- சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* அமல்ராஜ்- திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யான இவர், சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

* கணேஷமூர்த்தி- சென்னை பொருளாதார பிரிவு ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* தினகரன்- சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவி வகிக்கும் இவர், சென்னை தெற்கு கூடுதல் கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

மதுரை கமிஷனர்

* பிரேம் ஆனந்த் சின்ஹா- சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனரான இவர், மதுரை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.

* அருண்- சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனரான இவர், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* சஞ்சய்குமார்- திருப்பூர் போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர், தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.

* லோகநாதன்- தஞ்சை சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.

* கபில்குமார் சரத்கர்- சென்னை வடக்கு இணை கமிஷனராக பதவி வகிக்கும் இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* கண்ணன்- உள்நாட்டு பாதுகாப்பு டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

ஐ.ஜி.யாக பதவி உயர்வு

* சந்தோஷ்குமார்- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாக பிரிவுக்கு பொறுப்பு ஏற்கிறார்.

* தேன்மொழி- காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* கார்த்திகேயன்- கோவை சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.

* ஜோஷி நிர்மல்குமார்- திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ‘எஸ்டாபிளிஸ்பென்ட்’ பிரிவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பவானீஸ்வரி- கடலோர பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.யான இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* பாலகிருஷ்ணன்- திருச்சி சரக டி.ஐ.ஜி.யான இவர் சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* விஜயகுமாரி- சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனரான இவர், கடலோர பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

* ஏ.ஜி.பாபு- சென்னை தலைமையக இணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டார்.

* மகேஸ்வரி- சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரான இவர் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்.

போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர்

* எழிலரசன்- சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான இவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

* செந்தில்குமாரி- ஆயுதப்படை டி.ஐ.ஜி.யான இவர், சென்னை தலைமையக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* ஆனி விஜயா- மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர், திருச்சி சரகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

* நரேந்திரன் நாயர்- சென்னை நிர்வாக பிரிவு டி.ஐ.ஜி.யான இவர், கோவை சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

* ரூபேஷ்குமார் மீனா- ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், தஞ்சை சரகத்துக்கு மாற்றப்பட்டார்.

டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு

* அபிஷேக் தீட்சீத்- போலீஸ் சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* மல்லிகா- சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று அந்த பிரிவில் தொடர்ந்து பணியாற்றுவார்.

* சாமுண்டிஸ்வரி- காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், பதவி உயர்வு பெற்று காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* லட்சுமி- சென்னை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.

* ராஜேஸ்வரி- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டான இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படைக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* பாண்டியன்- சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

* ராஜேந்திரன்- சென்னை பூக்கடை துணை கமிஷனரான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்துக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

* முத்துச்சாமி- சென்னை அண்ணாநகர் துணை கமிஷனரான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்துக்கு மாற்றப்பட்டார்.

* மயில்வாகணன்- சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் சரகத்தில் பொறுப்பு ஏற்பார்.

* ராதாகிருஷ்ணன்- சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனரான இவர், விழுப்புரம் சரக சூப்பிரண்டாக மாற்றப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பற்றிய சிறு தகவல்கள்!!

_சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ்குமார் அகர்வால், 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார்

இவர் சட்டம் பயின்றவர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 22 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியானார்.

தேனி எஸ்பி, தூத்துக்குடி எஸ்பி, 2001-ல் சென்னைப் பூக்கடை துணை கமிஷனர், சென்னைப் போக்குவரத்துக் காவல் தெற்கு துணை கமிஷனராகப் பணியாற்றியுள்ளார்.

சிபிசிஐடி ஐஜியாகவும் மதுரை கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின் மனைவி பேராசிரியர்

Please follow and like us: