”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்!

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார்.

வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் கூறினர்.

காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சாத்தன்குளம் சம்பவம் பற்றி விசாரிக்க போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவர உத்தரவிட்டனர்.

மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் மாஜிஸ்திரேட் கைப்பற்றவும் உத்தரவிட்டுள்ளனர்

 

இந்நிலையில், இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் இந்தக் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அந்த தண்டனை இன்னொரு முறை இது போல நடக்காத வகையில் இருக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

#JusticeForJeyarajAndFenix

Please follow and like us: