இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை தகவல்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 5 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இது வரை இல்லாத வகையில் ஒரு நாள் பாதிப்பாக 18552 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. மேலும் 384 இறப்புகள் பதிவு செய்துள்ளது

மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 508953 ஆகும், இதில் 197387 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 295881 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மொத்த இறப்புகள் 15685 ஆகும்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீட்பு விகிதம் 58.13 சதவீதமாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு உள்ள தகவலில் ஜூன் 26 வரை கொரோனா இருக்கிறதா என பரிசோதனை நடத்திய மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 79,96,707; ஆக உள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் 2,20,479 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என கூறி உள்ளது.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து10 ஆயிரத்து 461 ஆக இருந்தது.

ஜூன் 22-ஆம் தேதி 4 லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக உயர்ந்தது.

ஜூன் 23-ல் 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக பாதிப்பு அதிகரித்த நிலையில்,

ஜூன் 24-ஆம் தேதி 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக எண்ணிக்கை உயர்ந்தது.

ஜூன் 25-ஆம் தேதி 4 லட்சத்து 73 ஆயிரத்து105 ஆக இருந்த எண்ணிக்கை இருந்தது.

ஜூன் 26-ல் 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 27-ஆம் தேதி, இன்றைய நிலவரப்படி 5 லட்சத்தை தாண்டிய நிலையில், மொத்த பாதிப்பு 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிப்பானது, ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது.

Please follow and like us: