திருமலை-திருப்பதி ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு இணையதள முகவரிக்கு மாற்றம்

திருமலை-திருப்பதி ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு இணையதள முகவரிக்கு மாற்றம்

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அருள்மிகு திருமலை ஏழுமலையான் தரிசன ஆன்லைன் சேவா டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரியை மாற்றியுள்ளதாக தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது..

அதில், திருமலை-திருப்பதி ஏழுமலையான் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய நடைமுறையில் இருந்த https:/ttdsevaonline.com என்கின்ற இணையதள முகவரிக்கு மாற்றாக.. புதிய இணையதள முகவரி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் பக்தர்கள் https:/tirupatibalaji.ap.gov.in என்கின்ற புதிய இணையதள முகவரியை மட்டுமே பயன்படுத்தி தங்களுக்கு தேவையான நேரத்தில் ஏழுமலையான் சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவா, ஸ்ரீவாரி அறக்கட்டளை நன்கொடை, திருமலை-திருப்பதியில் உள்ள தங்கும் விடுதிகள் முன்பதிவு உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம்..

ஆக, மே.23. 2020 தேதியான இன்று (சனிக்கிழமை) முதல் இந்த புதிய இணையதளம் மட்டுமே செயல்பட தொடங்கும் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Please follow and like us: