மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் – வைரலாகும் வீடியோ

மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் – வைரலாகும் வீடியோ

முகக்கவசம் அணிந்தபடி மருத்துவமனையிலிருந்து நடிகர் அஜித் வெளியேறும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்திருப்பதாகவே தெரிகிறது.

கொரோனா ஊரடங்கின் போது அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று விசாரித்த போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பொதுவான உடல் பரிசோதனை செய்து கொள்ளும் அஜித், அதற்காகவே மருத்துவமனை சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் பணியாற்றிய மூவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களான குஷி கபூர், ஜான்வி கபூர் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பின்றி நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us: