‘கொரோனா’ வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 200 வென்டிலேட்டர்கள்: அமெரிக்காவின் பரிசு

‘கொரோனா’ வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 200 வென்டிலேட்டர்கள்: அமெரிக்காவின் பரிசு

புதுடெல்லி: ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வழங்கப்படும், 200 ‘வென்டிலேட்டர்’கள், ‘இந்தியாவுக்கான பரிசு, அதற்கு பணம் வசூலிக்கப்படாது’ என, அமெரிக்கா கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் கோரிக்கையை ஏற்று, ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ என்ற மருந்தை, பிரதமர், நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். இதற்கு பிரதிபலனாக, ‘இந்தியாவுக்கு, 200 வென்டிலேட்டர் சாதனங்கள் அனுப்பப்படும்’ என, டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். இதற்கு, மோடி நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘முதல்கட்டமாக, 50 வென்டிலேட்டர்கள் உடனடியாக அனுப்பப்பட உள்ளது. இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. ‘இது இந்தியாவுக்கு அளிக்கப்படும் பரிசு’ என, யு.எஸ்.எய்ட் எனப்படும் அமெரிக்க உதவி அமைப்பின் இயக்குநர், ரமோனா எல் ஹம்சோவி கூறியுள்ளார்.

Please follow and like us: