பாண்டிச்சேரி கடற்கரையில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் வைரலாகும் வீடியோ

பாண்டிச்சேரி கடற்கரையில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் வைரலாகும் வீடியோ

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகின்ற மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர் நடிகைகள் பழைய ஞாபகங்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. நானும் ரவுடிதான் படத்தில் இருவருக்கும் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு முடிவடைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் துவங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: