என்விரோநெஸ்ட் மற்றும் பயோபைப் நிறுவனங்களின் கூட்டுறவில் கழிவுநீர் சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பம், இந்தியாவில் அறிமுகம்!

என்விரோநெஸ்ட் மற்றும் பயோபைப் நிறுவனங்களின் கூட்டுறவில் கழிவுநீர் சுத்திகரிக்க புதிய தொழில்நுட்பம், இந்தியாவில் அறிமுகம்!

  • குறைந்த இடத்தில், குறைந்த செலவில் கழிவு நீரை தூய நீராக சுத்திகரிக்க உதவுகிறது, இந்த துருக்கி நாட்டு தொழில்நுட்பம்

சென்னை, சென்னையைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் திரு. பி.கே. செந்தில்குமார் தொடங்கியுள்ள என்விரோநெஸ்ட் குளோபல் (Environest Global) என்ற இந்திய நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த பயோபைப் குளோபல் கார்ப் (Biopipe Global Corp) என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் கழிவு நீர் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளது. கழிவு நீர் உற்பத்தியாகும் களத்திலேயே செயல்படும்படி நிறுவப்படும் இதற்கான சாதனத்துக்கு காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம், எந்தவித சத்தமும், துர்நாற்றமும் இல்லாமல், 100 சதவீதம் முழுமையான சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்கிறது. இந்த பணி நிறைவில் திடக்கழிவு (solida waste)க்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்களிக்கும் அமெரிக்க நிறுவனமான பயோபைப் குளோபல் கார்ப், அந்நாட்டின் லைப் க்வெஸ்ட் வேர்ல்ட் கார்ப் (Lifequest World Corp) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.

யு.கே. (UK)-வில் எம்.பி.ஏ. (MBA) பட்டம் பெற்ற திரு. செந்தில்குமார், தனது நிறுவனத்தின் திட்டம் குறித்து பேசுகையில், “இந்த தொழில்நுட்பம் துருக்கி நாட்டில் இருந்து வந்துள்ளது என்றார். சிறிய அளவில் தேவையானாலும், அதற்கேற்ப வடிவமைத்து, முன்னதாகவே உள்ளூரில் தயாரித்து கொண்டு சென்று உரிய இடத்தில் நிறுவப்படும் தொழில்நுட்பம் இது எனவும் அவர் தெரிவித்தார். அதனால் இரும்புக் கம்பி மற்றும் சிமென்ட் காங்கிரீட் கொண்டு, பெரும் பொருட் செலவில் கட்டப்படும் கழிவு நீர் சேகரிப்புத் தொட்டி, அதன் பிற கட்டமைப்பு சாதனங்கள் என எதுவும் தேவையற்றதாகி விடுகிறது. இச்சாதனத்தின் பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு. இந்தச் சாதனத்தில் இருந்து வெளியாகும் நீரைச் சுத்தம் செய்யவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.

100 கோடி ரூபாய் விற்பனையை எட்ட இலக்கு:

இந்தத் துறையின் தொழில் மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி பேசிய திரு. செந்தில்குமார், “அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு எங்களது விற்பனையை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக வணிக மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், தொழிலாளர் முகாம்கள் என, எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 

ஏற்கனவே எங்களது நிறுவனம் சென்னையில் ஹோட்டல் பிரதாப் பிளாசாவில், தினமும் 30 கிலோ லிட்டர் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட சாதனத்தை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. வேலூரில் ஹோட்டல் டார்லிங் கிளாசிக்கில் தினமும் 20 கிலோலிட்டர் கழிவு நீருக்கானச் சாதனத்தைப் பொறுத்தியுள்ளது. இதுதவிர, தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள ஹோட்டல் டால்பின் (Hotel Dolphin), ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரம் (Ramoji Film City), ஜி.ஆர்.டி. குருப் ஹோட்டல் (GRT Group of Hotels), பேன் இந்தியா (Pan ndia), பெங்களுருவில் உள்ள நோவல் டெக் பார்க் (Novel Tech Park) மற்றும் குண்டூரில் உள்ள விக்ஞ்யான் பல்கலைக்கழகம் (Vygyan University) போன்ற இடங்களில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு சாதனத்தை நிறுவ பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வரும் மாதங்களில் இந்த இடங்களிலும் எங்களது சாதனத்தை நிறுவ முடியும் என நம்புகிறோம்.

தற்போது அசுத்த நீர் மேலாண்மை விவகாரங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் காட்டி வரும் தீவிரம் மற்றும் வேளாண் நிலங்களை பாதுகாப்பதில் காட்டப்படும் கவனம் குறிப்பிடத்தக்கது. இப்பணிகளில் ஈடுபட திட்டமிடும் என்விரோநெஸ்ட் நிறுவனத்துக்கு தேவைப்படும் நிதிக்காக, எங்களது சொந்த முதலீட்டைத் தாண்டி, கூடுதலாகத் தேவைப்படும் நிதி திரட்டுவதிலும் பிரச்சனை இருக்காது என நம்புகிறோம். அண்மையில் வெளியான 2020-21-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பிலும் கூட நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் – நீர்பாசனம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் கழிவு நீர் அகற்றல் போன்ற விஷயங்களுக்கு 2.3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

எனவே, இதுபோன்றத் திட்டங்களுக்கு இந்தியாவிலேயே தற்போது ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனெஸ்ட் & யங் (Ernst & Young  – E&Y) என்ற பன்னாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 2030-ஆம் ஆண்டு வாக்கில், மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9,10,000 கோடி ரூபாய் – 1 அமெரிக்க டாலர் மதிப்பு 70 ரூபாய் என்ற கணக்குப்படி) மதிப்புக்கு வர்த்தக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வருகிறது. அதேபோல, நேஷனல் அசோசியேஷன் ஆஃப் பிஸினஸ் எக்கானாமிக்ஸ் (National Association of Business Economics – NABE) என்ற அமைப்பின் தகவல்படி, கழிவு நீர் சுத்திகரிப்புக்கான உலக சந்தை 2012-ஆம் ஆண்டில் 62 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருந்து, அடுத்த 10 ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சி கண்டு, 2022-ஆம் ஆண்டு வாக்கில் 112 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 7,84,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் எனவும் தெரிய வருகிறது. அந்த வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு என்பது எல்லா இடங்களிலும் தவிர்க்க இயலாத முக்கியம் பெறும் துறையாக வளர்ந்து வருகிறது. மேற்கண்ட இந்த வாய்ப்புகளில் பல தொழில் நிறுவனங்களில் 60 சதவீத அளவும், வீட்டுத் தேவைகளில் 26 சதவீத அளவும் மட்டுமே தற்போது சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

நாம் வாழும் பூமியின் பொறுப்புள்ள குடிமகனாக நிலத்தடி நீரைப் பாதுகாப்பது… நம்மைச் சுற்றியுள்ள சூழலை மாசுபடாமல் காப்பது போன்றவற்றில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதையே, நமது முக்கிய இலக்காகக் கொள்ள வேண்டும். அதோடு, தொழிற்சாலைகள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவற்றில் இருந்து வெளியாகும் கழிவு நீரை சுத்திகரித்து பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இன்றைய அவசியத் தேவையாக மாறிவருகிறது. விவசாயத் தேவைக்கான நீர் பற்றாக்குறை உள்ள சூழலில் இது போன்ற காரியங்கள் நம்மால் தவிர்க்க இயலாது.

இந்தியாவில் இந்தத் தொழில்நுட்பத்தை அமல்படுத்தும் முதல் நிறுவனம் என்விரோநெஸ்ட்தான். சமூகத்திற்கானப் பயன்களைக் கருத்தில் கொண்டு, எங்களது கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் அனைத்தையும் முழுமையான தீர்வு தரும் ஒன்றாகவே வடிவமைத்து நிறுவி வருகிறோம். இதன்மூலம் குறைந்த பொருட் செலவில் இதை அமைப்பது சாத்தியமாகிறது. ‘இன்றுள்ள நிலையிலிருந்து வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதே’ (A better tomorrow from today) எங்களது நிறுவனத்தின் கனவு”  எனவும் தெரிவித்தார்.

என்விரோநெஸ்ட் நிறுவனத்தின் அமெரிக்கக் கூட்டாளியான பயோபைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. நிஸ் குட்லுகா (Enes Kutluca) பேசுகையில், “ஆரம்ப நிலைகளில் சந்திக்க வேண்டிய சவால்களை என்விரோநெஸ்ட் எதிர்கொண்ட முறைகளில் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம். எங்களது குறைந்த நேரடிப் பங்களிப்பிலேயே, அவர்கள் இந்த சுத்திகரிப்பு சாதனத்தை இணைத்து, உரிய இடத்தில் நிறுவி, சரிபார்த்து வழங்கிய திறன் – அவர்கள் மீதான நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் எங்களது கூட்டுறவும், வணிக வளர்ச்சியும் கணிசமான முன்னேற்றம் காணும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

இந்தியர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 120 முதல் 125 லிட்டர் (33 கேலன்கள்) நீரைப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. அதில் பாதியளவு கழிவு நீராக வெளியாகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் அந்நீரை மறுசுழற்சி செய்தால் 940 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத்தக்க அளவு அதன் கொள்ளளவு அமைகிறது.

2017-ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த 12-ஆவது ஐந்தாண்டு திட்டப்படி, இந்திய அரசின் திட்டக் கமிஷன் – இந்தியர்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க 26.5 பில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது 1,85,500 கோடி ரூபாய்) தேவைப்படும் எனக் கூறுகிறது. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி என்பது, எதிர்கால வளர்ச்சியில் ஆர்வமுட்டும் ஒரு துறை என்பதில் சந்தேகமில்லை.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஒரு தகவல்படி, உலகில் சுமார் 180 கோடி மக்கள் குடிப்பதற்கு கூட மாசு கலந்த, அசுத்த நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். மேலும், பூமியில் உற்பத்தியாகும் மனித மற்றும் விலங்கின கழிவுகளில் 80 சதவீதம் வரை, எந்தவிதமான சுத்திகரிப்பும் இன்றி, அத்தனைக் கழிவுப் பொருட்களோடுதான் நேரடியாக ஆறுகளிலோ, அல்லது கடலிலோ கொட்டப்படுகிறது. எனவே, இந்த சூழல், என்விரோநெஸ்ட் போன்ற நிறுவனங்களுக்கு உள்ள கணிசமான வர்த்த வாய்ப்புகளை விளக்குகிறது.

இது குறித்து மேலும் தகவல்களைப் பெற https://www.LifeQuestCorp.com / http://www.biopipe.com / www.environestglobal.com வலைதளங்களை அணுகலாம்.

ENVIRONEST JV WITH BIOPIPE OF U.S.

Please follow and like us: