சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது – ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் : இயக்குநர் கே.பாக்கியராஜ் 

“கல்தா” இசை வெளியீட்டு விழா!

சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது – ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் : இயக்குநர் கே.பாக்கியராஜ்

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் நடிகர் கருணாநிதி பேசியதாவது…

இந்த படம் ஒரு சமூகப்படம் இந்தப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். வைரஸ் எப்படி உருவாகிறது என்பதை இப்படத்தில் எடுத்திருக்கிறோம். சமூக பிரச்சனையை இந்தப்படத்தில் எடுத்துள்ளோம்.இந்தப்படத்தை அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் எனக்கேட்டு கொள்கிறேன் நன்றி.

நடிகர் ராதாரவி பேசியது….

“கல்தா” படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயகுநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார் சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும் நன்றி.

நடிகர் ராஜ சிம்மன் பேசியதாவது…

இந்தப்படத்தின் பாடல்கள் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும். ஹரி உத்ரா நன்றாக இயக்கியுள்ளார். இந்தப்படம் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் நன்றி.

நடிகர் ஆண்டனி பேசியதாவது…

மேற்கு தொடர்ச்சி மலை படத்தை நீங்கள் தான் ஜெயிக்க வைத்தீர்கள். அந்தப்படம் தான் என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும் மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு இந்தப்படம் தான் நடித்துள்ளேன். ஹீரோ கடுமையாக உழைத்துள்ளார் அவர் நன்றாக வர வாழ்த்துகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

நடிகை திவ்யா பேசியது….

இந்தப்படத்தில் இயக்குநர் இரவு பகலாக தூக்கமே இல்லாமல் உழைத்துள்ளார். படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய ஒரு படம் நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.

இசையமைப்பாளர் ஜெய் கிரிஷ் பேசியதாவது….

இயக்குநர் இப்படத்தில் மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளார். அவர் எனக்கு நண்பர். இயக்குநர் சமூக அக்கறை கொண்டவர். வைரமுத்து சார் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். அது எனக்கு கிடைத்த பாக்கியம். இந்தப்படம் மிக முக்கியமான பிரச்சனையை பற்றி பேசுகிறது. இந்தப்படம் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் நன்றி.

நாயகி ஐரா பேசியது….

இந்தப்படத்தில் நடித்தது சந்தோஷம். ஒரு சமூக பிரச்சனையை படம் பேசுகிறது. இப்படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் நன்றி

நாயகன் சிவ நிஷாந்த் பேசியது…

இந்தப்படம் தான் என்னை தேர்ந்தெடுத்தது. இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இப்படியான படத்தில் நாயகனாக நடித்தது சந்தோஷம். எனக்கு நடனம் சுத்தமாக வராது. நடனம் வராத என்னை இப்படத்தில் நடனம் ஆட வைத்துள்ளார்கள். எல்லோரும் புதுமுகங்களாக இருந்தாலும் கடுமையாக உழைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். உண்மையான உழைப்பு ஜெயிக்கும். இந்தப்படமும் ஜெயிக்கும் நன்றி.

இயக்குநர் லெனின் பாரதி பேசியது….

கலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவை கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும் நன்றி.

தயாரிப்பாளர் ரகுபதி பேசியது…

எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும். நன்றி.

இயக்குநர் ஹரி உத்ரா பேசியதாவது..

“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம். பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள் ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பி தயாரித்துள்ளார். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். இந்தப்படத்தை எடுத்த இடங்களில் மக்களின் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு தான் இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். இம்மாதம் படம் வெளியாகிறது. இப்படம் உருவாக ஆதரவாக இருந்த படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள்.

இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசியதாவது…

நல்ல கருத்துள்ள படத்தை எடுக்க இவர்கள் துணிந்திருப்பதே நல்ல விசயம் தான். அரசியல் பழகு என டைட்டிலில் சொல்கிறார்கள் அது அவ்வளவு எளிதல்ல. எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும் இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது. ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தபடத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளார்கள். படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பாளர்கள் – மலர்க்கொடி, ரகுபதி, செ.ஹரி உத்ரா,
ரா.உஷா

எழுத்து இயக்கம் – S.ஹரி உத்ரா

ஒளிப்பதிவு – B.வா

படத்தொகுப்பு – முத்து முனியசாமி

இசை – ஜெய் கிரிஷ்

பாடல்கள் – வைரமுத்து, வித்யா சாகர்

கலை இயக்கம் – இன்பா ஆர்ட் பிரகாஷ்

சண்டை – கோட்டி

நடனம் – சுரேஷ் S

ஸ்டில்ஸ் – பா. லக்‌ஷ்மண்

வரைகலை – பிளசைன்

‘Kaltha’ has something fresh and special to offer the audiences sayas Director Bhagyaraj

Please follow and like us: