சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “தனுஷ் 43”

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “தனுஷ் 43 “

தனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் “தனுஷ் 43 ”

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் .
தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும் கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .

தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43 ” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது .

பொல்லாதவன் , ஆடுகளம் , மயக்கம் என்ன மற்றும் அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு GV பிரகாஷ் 5 முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார் .

கதாநாயகி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது .வரும் அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Dhanush 43 to be helmed by Karthick Naren and bankrolled by Sathya Jyothi Films

Please follow and like us: