சி.பி.சி.எல் சக்ஷம் சைக்கிள் தினம்

சி.பி.சி.எல் சக்ஷம் சைக்கிள் தினம்

சி.பி.சி.எல்.லின் சக்ஷம் சைக்கிள் தினம், இது ஒரு எரிப்பொருட்களின் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழல் மற்றும் எரிப்பொருள் பாதுகாப்பு குறித்து பெட்ரோலியம் கன்சர்வேசன் ரிசர்ச் அசோசியேஷன் (பிசிஆர்ஏ) உதவியுடன் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு
அமைச்சகத்தின் முயற்சியாகும்-.

சக்ஷம் 2020 (சன்ரக்ஷன் க்ஷம்தா மஹோத்ஸவ்) ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15 வரை ஒரு மாத பிரச்சாரமாகும். இது பெட்ரோலியப் பொருட்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் முயற்சி. சென்னையில் சக்ஷம் சைக்கிள் தினம்  2020 ஜனவரி 19 அன்று, ஒரே நாளில் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட 200 நிகழ்வுகளில் ஒன்றாகும்.

சைக்கிள் ஓட்டுதல் என்பது அருகிலுள்ள இடங்களுக்குச் செல்வது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் குறுகிய தூரங்களுக்கு இயந்திரமயமாக்கப்படாத போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். இது எரிபொருளைச் சேமிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் வாழ உதவுகிறது.

சக்ஷம் சைக்கிள் தினம் 2020 சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) ஜனவரி 19, 2020  ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மணலியில் ஏற்பாடு செய்யப்பட்டது. சி.பி.சி.எல். நிர்வாக இயக்குனர் திரு-.எஸ்.என்.பாண்டே, காலை 7 மணிக்கு சைக்கிள் ஓட்டுநர்களின் முதல் அணியை தொடங்கிவைத்தார்.

திரு.ஜி.அரவிந்தன், இயக்குநர் (செயல்பாடு), திரு-.ராஜீவ் ஐலவாடி, இயக்குநர் (நிதி) மற்றும் சிபிசிஎல் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி திரு.ஜே.டி.வெங்கடேஸ்வர்லு ஆகியோர் கொடியசைத்து அடுத்தடுத்த அணிகளைத் தொடங்கிவைத்தனர்.

திரைபட மற்றும் தொலைக்காட்சியைச் சேர்ந்த பிரபலங்கள், பிரபல விளையாட்டு வீரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தங்கப் பதக்கம் வென்ற பவர் லிஃப்டிங் சாம்பியனான டாக்டர் ஆரத்தி அருண், நீச்சல் மற்றும் சர்வதேச சர்ஃபர் ஜூனியர் தேசிய தங்கப் பதக்கம் வென்ற விலாசினி சுந்தர், திரைப்பட நடிகர்கள் நகுல், அபிஷேக் வினோத், சம்யுக்த கார்த்திக் மற்றும் ஸ்ருதி பாஸ்கர் ஆகியோர் அடுத்தடுத்த அணிகளைத் தொடங்கிவைத்து, அணிகளில் கலந்துக்கொண்டு சைக்கிள் ஓட்டினர்.

சென்னை, மணலியில் உள்ள சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த சைக்ளோத்தானில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 3000க்கும் மேற்ப்பட்ட ஏராளமான பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி 10 கி.மீ சுற்றி
வந்து அதே இடத்தில் சைக்கிள் பேரணி முடிவடைந்தது.

இந்த முயற்சி சூழலையும், புதுப்பிக்க முடியாத பெரும்பாலான வளங்கள் அடுத்த 50 ஆண்டுகளில் குறைந்துவிடும் என்ற உண்மையையும் கருத்தில் கொண்டு, நமது நாட்டின் பல நகரங்களில் சைக்ளோத்தான் பேரணிகள் பரவலான விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகின்றன. இன்றைய சைக்ளோத்தனில் பலர்
தன்னார்வத்துடன் முன்வருவதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது.

CHENNAI PETROLEUM CORPORATION LIMITED (CPCL)’s SAKSHAM CYCLING DAY

Please follow and like us: