கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தர்பார் – படக்குழு அதிர்ச்சி

கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தர்பார் – படக்குழு அதிர்ச்சி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9-ந் தேதி வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள ஒரு லோக்கல் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படத்தை ஒளிபரப்பி இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களே ஆகியுள்ள நிலையில் கேபிள் டிவி படத்தை ஒளிபரப்பியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Please follow and like us: