எனை நோக்கி பாயும் தோட்டா சினிமா விமர்சனம்

எனை நோக்கி பாயும் தோட்டா சினிமா விமர்சனம்

ரேட்டிங்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்,ஆன்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் வெங்கட் சோமசுந்தரம், கௌதம் வாசுதேவ் மேனன், பி.மதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இதில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ், சுனைனா, செந்தில் வீராசாமி,வேல.ராமமூர்த்தி., அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை: தர்புகா சிவா,ஓளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா,ஜோமோன் டி.ஜான், எடிட்டிங்-பிரவீன் ஆண்டனி, கலை- ராஜீவன், சண்டை-சில்வா, உடை-உத்தாரா மேனன், நடனம்-சதீஷ் கிருஷ்ணன், பிஆர்ஒ-ரியாஸ்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பையனான ரகு (தனுஷ்), சென்னையில் ஒரு கல்லூரியில் படிக்கிறார். அங்கே படப்பிடிப்பிற்காக வரும் நடிகை லேகாவைச் (மேகா ஆகாஷ்) சந்திக்கிறார். லேகாவை பார்த்ததும் காதலில் விழுகிறார் ரகு. இருவரும் காதலிக்கிறார்கள். பெற்றோரை இழந்த லேகாவை குபேரன் வளர்கிறார். ஆனால், குபேரன் (செந்தில் வீராசாமி) தன் கட்டுப்பாட்டில் உள்ள லேகாவை சினிமாவில் நடிக்க வைத்து, பணம் சம்பாதிக்க விரும்புகிறார். லேகா குபேரன் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படத்தில் நடிப்பதாகவும் சொல்ல, உடனே தனுஷ் அவரை யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு அழைத்து செல்கிறார். சில நாட்களுக்கு பின் லேகாவை தேடி குபேரன் தனுஷ் வீட்டுக்கு வருகிறார். ரகு குடும்பத்தினரை குபேரன் மிரட்ட, லேகா காதலரின் குடும்பத்திற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்து ரகுவிடம் 5 நாட்கள் கழித்து என்னை பார்க்க வா என சொல்லிவிட்டு குபேரனுடன் செல்கிறார். குபேரன் லேகாவை மும்பைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். 5 நாட்களுக்கு பின் லேகாவை பார்க்க சென்னைக்கு செல்லும் தனுஷ், அவரை தேடி அலைகிறார். எங்கு தேடியும் கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார். அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் ரகுவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த சூழலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையிலிருந்து ரகுவை அழைக்கும் லேகா, ரகுவின் சகோதரன் திரு (சசிகுமார்) ஆபத்தில் இருப்பதாகவும், உடனே மும்பைக்கு வருமாறும் கூறுகிறார். மும்பைக்கு கிளம்பிச் செல்லும் ரகுவின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. லேகாவுக்கும் திருவுக்கும் என்ன தொடர்பு, திரைத்துறையை சேர்ந்த குபேரனுக்கு கேங்ஸ்டர்களுடன் என்ன தொடர்பு? ரகு பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளியே வருகிறார்? லேகாவை காப்பாற்றினாரா? சகோதரன் திருவுக்கு என்ன நடந்தது? என்பது தான் மீதிக்கதை.

தனுஷ், தனது அழுத்தமான நடிப்பால் ஆக்ஷன் களத்தில் அக்மார்க் முத்திரை பதித்து அனைத்து காட்சிகளிலும் பரிமாணங்களிலும் தனித்து நின்று ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேகா ஆகாஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் அழகாக ஆச்சர்யமான நடிப்பை தந்திருக்கிறார்.

சசிகுமார் சஸ்பென்சாக வந்து சர்ப்ரைஸ் கொடுத்து படத்தின் அச்சாணியாக இருக்கிறார்.

தனுஷின் அப்பாவாக வேல.ராமமூர்த்தி., செந்தில் வீராசாமி., சுனைனா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக ஜொலித்திருக்கிறார்கள்.

கண்களுக்கு விருந்தளிக்கும் காதல் காட்சிகள், மிரள வைக்கும் ஆக்ஷன் களங்கள் என்று மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு, பாடல்களை தாளம் போடச் செய்த தர்புகா சிவாவின் இசை. பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார். வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

தனுஷ் தனக்கு நடந்த சம்பவங்களை விவரிக்கும் விதமாக படம் முழுவதும் அவரின் நினைவு அலைகளி;ல் பயணிக்கிறது. மேகா காதல், சினிமா பயணம், சசிகுமார் பாசம், போலீஸ் துரத்தல், குபேரன் மோதல், அண்டர்வேல்ட் கனெக்ஷன் என்று முன்னும் பின்னும் பயணிக்கும் காட்சிகள் தெளிவில்லாத திரைக்கதையால் தடுமாறி பயணிப்பதை தன் சமார்த்தியத்தால் இறுதியில் சரி கட்டி விடுகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். படம் முழுவதும் தேவையில்லாமல் கதையை விவரிக்கும் விதம் எதற்காக என்பது தான் புர்pயவில்லை.

மொத்தத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா” எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் வாய்ஸ் ஓவரில் சீறிப் பாய்கிறது.

கலைப்பூங்கா ரேட்டிங் ‘எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.

Please follow and like us: