அடுத்த சாட்டை சினிமா விமர்சனம் ரேட்டிங்

அடுத்த சாட்டை சினிமா விமர்சனம் ரேட்டிங்

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதிலக்;; இணைந்து தயாரித்துள்ள ‘அடுத்த சாட்டை” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அன்பழகன்.

இதில் சமுத்திர கனி, தம்பி ராமய்யா, யுவன், ஸ்ரீராம், ஜார்ஜ்,அதுல்யா, கனிகா, ராஜஸ்ரீ பொன்னப்பா, பிச்சைக்காரன் மூர்;த்தி, பென்ஜமின் ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள படம் அடுத்த சாட்டை.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:- இசை: ஜஸ்டின் பிரபாகர்,ஓளிப்பதிவு: ராசாமதி, பாடல்கள்;: யுகபாரதி ,தேன்மொழி தாஸ், சண்டை-சில்வா, எடிட்டிங்-நிர்மல், கலை-விஜயகுமார், நடனம்-நோபல், பிஆர்ஒ-நிகில்.

தமிழ் கல்லூரி பேராசிரியராக சமுத்திரகனி அப்பா கலை மற்றும் அ;றிவியல் கல்லூரியில் சேர்கிறார். அங்கே மாணவர்களுக்கும்-பேராசிரியர்களுக்கும் இடையே காணப்படும் ஜாதி இடைவேளியை கண்கூடாக காண்கிறார்.முதலில் பேராசிரியர்களிடம் இதனை சுட்டிக் காட்டி திருத்த முயல்கிறார். இதனால் கல்லூரி முதல்வர் தம்பி ராமையா மற்றும் சில பேராசிரியர்களின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார்.அதன்பின் மாணவர்களுக்கிடையே நிலவும் ஒழுங்கின்மை, ஒற்றுமையின்மை, அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை கண்டறிந்து, மாணவர்களுக்கிடையே இருக்கும் சாதிப்பிளவுகளையும் நீக்குகிறார். சமுத்திரகனியின் செயலால் கோபமடையும் தம்பிராமையா, அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். இப்படி எல்லாப் பிரச்சினைகளையும், நியாயமான சில பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் துணையோடு தனியொரு மனிதனாய் சமுத்திரக்கனி எப்படி சமாளித்து தம்பிராமையாவின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்தார்? கல்லூரி முதல்வர் தம்பிராமையா மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமுத்திரகனி தமிழ் பேராசிரியர் தயாளனாக வாழ்ந்து தீர்க்கமான பேச்சு, நடை, உடையில் கச்சிதமாக பொருந்தி படம் முழுவதும் கருத்துகளை வாரி வழங்கி அசத்தியிருக்கிறார்.

அதே போல் கல்லூரி முதல்வராக தம்பி ராமய்யா, நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பின் மூலம் வழக்கம் போல் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

பியூனாக இருக்கும் ஜார்ஜ் , மாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீPராம், அதுல்யா ரவி, கனிகா, போராசிரியையாக ராஜஸ்ரீ பொன்னப்பா, பிச்சைக்காரன் மூர்;த்தி, பென்ஜமின் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.நட்புக்காக சசிகுமார் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார்.

ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும், யுகபாரதி வரிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அடுத்த சாட்டை படத்தில் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பழகன். இதில் கல்லூரியில் நடக்கும் சாதி பாகுபாடுகளும், படிப்பை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் வாழ்வியலை அனுபவ பூர்வமாக உணர்ந்து கற்றுக் கொள்ளும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். ஏற்றத்தாழ்வுகளின்றி மாணவர்கள் பழக வேண்டும், கல்லூரியின் நற்பெயரை களங்கப்படுத்தாத வண்ணம் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல சமூக சிந்தனைகளை முன்னிருத்தி எடுத்தியிருக்கிறார் இயக்குனர் அன்பழகன். சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வசனங்கள் சில நேரங்களில் ஒவர்டோசாக இருப்பதால் திகட்டி விடுகிறது.

மொத்தத்தில் கல்லூரியில் நடக்கும் சீர்கேடுகளை தோலுரித்து காட்டுகிறது அடுத்த சாட்டை.

கலைப்பூங்கா ரேட்டிங் ‘அடுத்த சாட்டை” படத்துக்கு 3 ஸ்டார்.

Please follow and like us: