மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் சினிமா விமர்சனம்

மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் சினிமா விமர்சனம்

ரேட்டிங்

சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரி;த்து மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சரண்.

இதில் ஆரவ், ராதிகா, காவ்யா தப்பர், சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெரடி, நாசர், விஹான், ஆதித்யா, மதன் பாபு, சாம்ஸ், ரோகினி, நிகிஷா பட்டேல், பிரதீப் ரவாத், மதன்பாபு, தேவதர்ஷினி, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-சைமன் கே.கிங், ஓளிப்பதிவு கே.வி.குகன், கட்ஸ்-கோபி கிருஷ்ணா, கலை -ஏ.ஆர்.மோகன், நிர்வாகத் தயாரிப்பு-கே.பி.பஷீர் அஹமத், சண்டை-ஹரி தினேஷ்,பிரதிப் தினேஷ், விக்கி, நடனம்-கல்யாண், தினேஷ், ஆடை-நித்யா, பாடல்கள்-தமயந்தி, கு,கார்த்திக், ரோகேஷ், பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா.

ஊருக்குள் அடி தடி வெட்டுக்குத்துனு செம்ம கெத்தான தாதாவாக உலா வருபவர் மார்க்கெட் ராஜா(ஆரவ்). இவர் ஒரு அமைச்சருக்கு அடியாளாக இருந்து வருகிறார். இவருடைய தாய் ராதிகா, ஆரவ்வை வைத்து ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். ஆனால், ஆரவ்வோ, தாய் ராதிகாவை மதிக்காமல் இருக்கிறார்.குறிப்பிட்ட கட்சியில் இருக்கும் சாயாஜி ஷிண்டேவிற்கு ஆதரவாக ஆரவ் செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் மார்க்கெட் ராஜாவை தூக்கினால் தான் நாம் முன்னேற முடியும் என மற்றொரு அமைச்சர் முடிவெடுக்கின்றார். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாள் ஒரு கல்லூரியில் ஒருவரை அடிக்கிறார். இவரின் துணிச்சலை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் நாயகி காவ்யா. ஆனால் ஆரவ், காவ்யா மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் மிகவும் கோழையான மாணவர் ஒருவர் காவ்யாவை காதலிக்கிறார். இதற்கிடையில் போலிஸ் இருவரை ஆரவ் பிடித்து வைக்க இனி மார்க்கெட் ராஜவை சும்மவிடக்கூடாது என போலிஸார் என்கவுண்டர் ப்ளான் செய்கின்றனர். என்கவுண்டரின் போது கோழையான மாணவர் சிக்கி இறக்கிறார். மேலும் அவரின் ஆவி, ஆரவ் உடம்பிற்குள் செல்கிறது. அதன் பிறகு நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆரவ் கேங்ஸ்டராக உடற்கட்டு, ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்து அதன் பின் உடம்பிற்குள் ஆவி சென்றவுடன் காமெடி காட்சிகளில் முடிந்தவரை ஸ்கோர் செய்திருக்கிறார்.

தாயாக வரும் ராதிகா, வித்தியாசமான நகைச்சுவை கலந்த வேடத்தில், புல்லட் ஓட்டுவது சுருட்டு பிடிப்பது என அலட்டலான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

மாடர்ன் பெண்ணான கதாபாத்திரத்தில் நிகிஷா பட்டேல் கவர்ச்சியால் ரசிகர்களை உசுப்பேற்றுகிறார்.

அசியல்வாதிகளாக வரும் சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி, நாசர், விஹான், ரோகினி, ஆதித்யா, மதன் பாபு, சாம்ஸ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கதையின் ஒட்டத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் மற்றும் ஒளிப்பதிவுவாளர் கே.வி.குகன் ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கியாக படத்தில் செயல்பட்டிருக்கிறார்கள்.

சில வருடங்கள் கழித்து களமிறங்கியிருக்கும் இயக்குனர் சரண், கேங்ஸ்டர் கதையில், பேயோடு காமெடி கலந்து ஜாலியான பொழுதுபோக்கு படமாக மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் அனைவரையும் திருப்தி செய்யும் வண்ணம் இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் சுரபி பிலிம்ஸ் எஸ்.மோகன்; தயாரித்துள்ள ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்” அனைவரையும் மகிழ்விக்கும்.

கலைப்பூங்கா ரேட்டிங் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்” படத்துக்கு 3 ஸ்டார்.

Please follow and like us: