வருடத்திற்கு ரூ.41 லட்சம் சம்பளம்: சத்தியபாமா மாணவரை வேலைக்கு எடுத்தது திவேர்தா நிறுவனம்

வருடத்திற்கு ரூ.41 லட்சம் சம்பளம்: சத்தியபாமா மாணவரை வேலைக்கு எடுத்தது திவேர்தா நிறுவனம்

சென்னை: சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தன் வரலாற்றில் புதிய மைல்கல்லைப் படைத்துள்ளது. இந்நிறுவனத்தில் ‘கேம்பஸ் இண்டர்வ்யூ’ நடந்தது. இங்கு பி.டெக். இறுதியாண்டு படித்து வரும் ஆதர்ஸ் எனற மாணவரை திவேர்தா என்னும் நிறுவனம் வேலைக்கு தேர்ந்தெடுத்துள்ளது. வருடத்திற்கு ரூ.41 லட்சம் சம்பளம். இதுவே சத்தியபாமா நிறுவன மாணவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் உயர்ந்தபட்ச சம்பளமாகும்.

இந்நிறுவனத்தின் வேந்தர் டாக்டர். மரியசீனா ஜான்சன், தலைவர் டாக்டர். மேரி ஜான்சன் இம்மாணவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், அவரின் ஜூனியர்களையும் ஊக்குவித்தனர்.

சத்தியபாமா நிறுவனம்‌ மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை தொடர்ந்து செய்து வருகிறது. இந்தக் கல்லூரியில் படித்த 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்களை 82 நிறுவனங்கள் இதுவரை தேர்வு செய்துள்ளன.

மேலும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து வரும் நாட்களில் மாணவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும் 15 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்களை வருடத்திற்கு ரூ. 5.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் சம்பளம் தரும் அளவிற்கு பிரபல அதாவது மாணவர்களின் ‘கனவு நிறுவனங்கள்’ தேர்வு செய்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வருடத்திற்கு ரூ. 10 லட்சம் சம்பளம் கொடுக்கும் அளவிற்கு தற்போது நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அதிக தேவை உள்ள முக்கிய தொழில்நுட்பங்களில் திறமை பெற்றவர்கள். இதுவே அவர்களுக்கு அதிக சம்பளம் தரும் நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு உதவுகிறது.

அமேசான், ஏடிபி, காக்னிசன்ட், கேப்ஜெமினி, எர்ன்ஸ்ட் & யங்க், ஹெச்.சி.எல், ஹெக்சாவேர், ஹெச்பி, ஹூண்டாய், ஐபிஎம், மின்ட்ரீ, என்டிடி டேட்டா, ஆரக்கிள், ரெனால்ட் நிஸான், சீமென்ஸ், வெரிசான், விப்ரோ நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு சத்தியபாமா நிறுவனத்தை நாடி வருகின்றன.

SATHYABAMA INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY (DEEMED TO BE UNIVERSITY) PLACEMENT PRESS RELEASE

Please follow and like us: