சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிப்பு

சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பார்ட் டைம் (பகுதி நேரம் படிப்பு) எம்.இ, எம்.டெக் படிப்புகள் செல்லும் என்று ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பல்கலைக்கழகம் சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்த மாணவர்களின் பட்டம் செல்லாது என்று அறிவித்தது . இதனால் ஸ்ரீ காளஹஸ்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேலை பார்த்த 6 உதவி பேராசியர்கள் வேலை இழந்தனர் . பாதிக்கப்பட்ட 6 பேரும் தமிழக மாநில தகவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக தொடர்பாக முறையிட்டனர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2002ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்தவர்கள் ஆந்திராவின் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆந்திர அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மாநில தகவல் ஆணையர் திரு.முத்துராஜ் அவர்கள் சத்தியபாமா நிகர்நிலை பல்கலகழத்தினால் வழங்கப்படும் குறிப்பிட்ட எம்.இ, எம்.டெக் பட்டங்கள் செல்லும் என்பதற்கான ஆவணங்களை ஆந்திர அரசு, ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படிப்புகள் செல்லும் என்பதற்கான ஆவணங்கள் ஆந்திரா அரசு, ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதோடு 2 மாதங்களுக்கு இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு உரிய விளக்கமளித்து சுமூக சூழலை உருவாக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் திரு.முத்துராஜ் சத்யபாமா பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் உரிய ஆவணங்களை அனந்தபுரம் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு சமர்பித்து தாங்கள் நடத்தும் பகுதிநேர எம்.இ, எம்.டெக், முழுநேர எம்.இ, எம்.டெக் டிகிரிக்கு சமமானது எனவும் அதை ஆணையாக வெளியிடவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அனந்தபுரம் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிலைக் குழுவிற்கு அனுப்பியது. அக்குழு ஆவணங்களை சரிபார்த்து அவற்றை தகுதியானதாக கருதி ஏற்றுக்கொண்டது.

மேலும் சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பகுதிநேர எம்.இ, எம்.டெக் பட்டங்கள் முழுநேர படிப்புக்கு இணையானது என்று சான்றளித்துள்ளது. இதனால் வேலை இழந்த ஆந்திர மாநில 6 உதவிப் பேராசிரியர்களுக்கும் உடனடியாக வேலை வழங்கவும், அவர்கள் பணிபுரிந்து வந்த ஸ்ரீ காளஹஸ்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கும் பரிந்துரை செய்துள்ளது.

இதன்மூலம் சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பகுதிநேர எம்.இ, எம்.டெக் படித்த அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது.

Sathyabama Institute of Science and Technology part time M.E, M.Tech degrees declared valid by JNTU, Anantapur

Please follow and like us: