டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் நடத்தப்பட்ட உலக நீரிழிவு தினநிகழ்வு

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் நடத்தப்பட்ட உலக நீரிழிவு தினநிகழ்வு

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் நடத்தப்பட்ட உலக நீரிழிவு தின நிகழ்வில் நீரிழிவை தாங்களே வெற்றிகரமாக போரிட்டு வென்ற அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர் நீரிழிவை வெல்வதற்கு உதவிய சாதனையாளர்கள் அவர்களது உத்வேகமளிக்கும் வாழ்க்கைக் கதைகளை நேர்த்தியாக சித்தரித்தனர்

ஸ்பெயின்-ஐ சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரர் திரு. பிரைஸ் டகால், ஆக்டிவ் ஏஜிங் – ன் தூதர் திரு. ஹரி பாஸ்கரன், ஸ்குவாஷ் பயிற்சியாளரும், துரோணாச்சாரியா விருதுபெற்றவருமான திரு. சைரஸ் பூஞ்சா, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி பார்வையாளர்களுக்கு உத்வேகம் வழங்கினர்
• டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் 90 நாட்கள் உடற்தகுதி சவால் நிகழ்ச்சியின் தொடக்கத்தோடு வகை 1 நீரிழிவு பாதிப்புள்ள சிறார்கள் வழங்கிய அற்புதமான நடன நிகழ்ச்சி இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அனைவரையும் கவர்ந்தது

சென்னை,  உலக நீரிழிவு தினம் அனுசரிப்பையொட்டி, இந்த ஆண்டு கருப்பொருளான “குடும்பம் மற்றும் நீரிழிவு” என்பது மீது கூர்நோக்கம் செலுத்துகிற ஒரு நிகழ்வை டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் நடத்தியது. பல்வேறு பிரமுகர்கள் மற்றும் பிரபல சாதனையாளர்கள் வழங்கிய உத்வேகமளிக்கும் சிறப்புரைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன. உலகப்புகழ்பெற்ற சைக்கிள் பந்தய வீரரான திரு. பிரைஸ் டகால், நீரிழிவையும் மற்றும் அதன் விளைவான சிக்கல்களையும் அவர் எப்படி சமாளித்து வெற்றி கண்டார் என்பது குறித்து உரையாற்றினார். முன்னாள் பெருநிறுவன அதிகாரியும், ஆக்டிவ் ஏஜிங் – ன் தூதருமான திரு. ஹரி பாஸ்கரன், 70 வயதில் இன்னும் சுறுசுறுப்பாகத் திகழும் அவரது உடற்தகுதி கதையை வர்ணித்தார். அத்துடன், வகை 1 நீரிழிவுக்கு எதிராக அவரது சகோதரர் நடத்திய யுத்தம் மீது அதிக உணர்ச்சிகரமாக நிகழ்வுகளை வர்ணித்தார். பிரபல ஸ்குவாஷ் பயிற்சியாளரும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷனின் தலைமைச் செயலரும், துரோணாச்சாரியா விருதுபெற்றவருமான திரு. சைரஸ் பூஞ்சா, 2 வயதில் இளமைக்கால நீரிழிவு இருப்பதாக நோய் நிலை உறுதிசெய்யப்பட்ட தனது மனைவி ரோஷனின் வாழ்க்கை அனுபவத்தை எடுத்துரைத்தார். நீரிழிவுக்கு எதிரான போரில் அங்கம் வகித்து தங்களது உரைகளின் மூலம் உத்வேகமளிக்கின்ற இந்த பிரபலங்களின் பங்கேற்பு மட்டுமன்றி, வளரிளம் சிறுமிகள் வழங்கிய வண்ணமயமான தாண்டவ் நடன நிகழ்ச்சி மற்றும் பாலிவுட்-ன் அதிவேக துள்ளல் இசைக்கு வகை 1 நீரிழிவு நிலை கொண்ட சிறார்கள் வழங்கிய சிறப்பு நடன நிகழ்ச்சியினால் அந்த மாலைப்பொழுதே உற்சாகத்தில் களைகட்டியது. தாண்டவ் என்பது சோம்பேறித்தனமான, உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் உடல்சார்ந்த சிக்கல்களை உருவாக்குகின்ற பிற வாழ்க்கைமுறைகளை எதிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிற ஒரு உடற்தகுதி நெறிமுறையாக தாண்டவ் திகழ்கிறது. 90 நாட்கள் உடற்தகுதி சவால் என்ற திட்ட அறிமுகத்தின் அறிவிப்பும், இந்நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்றது. உடல் எடையை 5 மூவரையும் மற்றும் குறித்த காலஅளவுகளில் பரிசோதனைகள், ஹீமோகுளோபினுடன் ஒட்டிக்கொண்டிருக்கிற குளுகோஸை 1% வரை குறைக்கின்ற குறிக்கோளோடு டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மருத்துவர்களால் குறித்த காலஅளவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள், நிகழ்நிலை கண்டறிதல்கள் மற்றும் மதிப்பீடுகளை உள்ளடக்கி, நன்கு கண்காணிக்கப்படுகிற மற்றும் கடுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறவாறு பங்கேற்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான பிரத்யேக சவாலாக இது இருக்கிறது.

இந்நிகழ்வின்போது உரையாற்றிய டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர். ஏ. மோகன், ‘புகழ்பெற்ற ஸ்பானிய சைக்கிள் பந்தய வீரரும், நீரிழிவு மேலாண்மைக்கான தூதருமான பிரைஸ் டகால், உடற்தகுதி ஆர்வலரும், சைக்கிள் வீரருமான திரு. ஹரி பாஸ்கரன், தனது குடும்ப உறுப்பினர் நீரிழிவை சமாளித்து வெற்றிகாண உதவியிருக்கிற ஸ்குவாஷ் பயிற்சியாளரான திரு. சைரஸ் பூஞ்சா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். கண்டிப்பான ஒழுங்குக்கட்டுப்பாடு மற்றும் மீண்டெழுவது மீது உறுதி ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நிலையிலுள்ள நபர்கள் இயல்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை எப்படி வாழ முடியும் என்று இவர்கள் செயல்பாட்டின் மூலம் எடுத்துக்காட்டியிருக்கின்றனர். “குடும்பம் மற்றும் நீரிழிவு” என்பதே இந்த ஆண்டின் உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருளாகும். குடும்பத்தின் மீதும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு வலையமைப்பின் மீதும் நிரிழிவின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த கருப்பொருளின் நோக்கமாகும். குடும்பத்தில் ஒரு நபர் நீரிழிவினால் பாதிக்கப்படுவாரானால் அது குடும்பத்தின் பிற உறுப்பினரையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. கணவர் அல்லது மனைவிக்கு நீரிழிவு இருக்குமானால் மற்றும் கண், பாதம், இதயம், சிறுநீரகம் போன்ற நீரிழிவினால் விளையும் சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுமானால், அது நோயாளியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையையும் உற்சாக உணர்வையுமே சீர்குலைத்து விடுகிறது. இதை கவனத்தில் கொண்டு, இதில் பங்கேற்கிற பங்கேற்பாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்கிறவாறு தன்மயமாக்கப்படவிருக்கும் 90 நாட்கள் உடற்தகுதி சவால் திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதில் குறித்த காலஅளவுகளில் எமது மருத்துவர்கள் குழுவால் பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு இந்த ஆண்டின் உலக நீரிழிவு தினத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கருப்பொருளான “குடும்பம் மற்றும் நீரிழிவு” என்பது மிகப் பொருத்தமானது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், நீரிழிவு நிலையிலுள்ள ஒரு நபர் குடும்பத்தால் வழங்கப்படும் ஆதரவைக் கொண்டு மட்டுமே சிறப்பான வாழ்க்கை தரத்துடன் வாழமுடியும். நீரிழிவு பாதிப்புள்ள நபர்களுக்கு உடல்நல விளைபயன்களை மேம்படுத்துவதில் குடும்ப ஆதரவு ஒரு கணிசமான தாக்கத்தைக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது,’ என்று கூறினார்.

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குநரும், நீரிழிவு சிறப்பு மருத்துவருமான டாக்டர். R M அஞ்சனா பேசுகையில், ‘தொடர்ந்து தவறாமல் செய்யப்படும் உடற்தகுதி பழக்க-வழக்கங்கள் மற்றும் முறையான சமச்சீராக்கப்பட்ட உணவுகள் போன்ற வாழ்க்கைமுறை தொடர்புடைய திருத்தங்கள், ஒரு வலுவான நீரிழிவு மேலாண்மைக்கு மிக முக்கியமானவையாகும். வாழ்க்கைமுறை தொடர்புடைய சிக்கல்களை எதிர்த்துப்போரிடும் நோக்கத்தோடு தாண்டவ் என்ற இத்திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய அனைத்து சிக்கல்களையும் வெற்றிகரமாக சமாளிப்பதற்கு நல்ல சமநிலை கொண்ட உடற்தகுதி திட்டத்தை நிர்வகிப்பதற்கு நம்மையே தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொள்வது அவசியம் என்பதை இது காட்டுகிறது. நீண்டகால அளவிற்கு இதை சாதிப்பதற்கு நமது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் நமக்கு நிச்சயமாக அவசியமாக இருக்கிறது,’ என்று குறிப்பிட்டார்.

Launch of an exciting 90 Day Fitness Challenge by Dr. Mohan’s Diabetes Specialities Centre 

நீரிழிவு மேலாண்மையில் குடும்ப ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய முன்னாள் பெருநிறுவன உயரதிகாரியும், ஆக்டிவ் ஏஜிங் – ன் தூதருமான திரு. ஹரி பாஸ்கரன் பேசுகையில், ‘எங்களது குடும்பம் பற்றிய எனது இனிமையான கடந்தகால நினைவலை என்பது, சாப்பாட்டு மேஜையில் நாங்கள் நடத்திய விறுவிறுப்பான, ஆரோக்கியமான உரையாடல்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு சாப்பாட்டு வேளையிலும் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணவேண்டும் என்பதை எங்களது பெற்றோர்கள் ஒரு நடைமுறையாகவே ஆக்கியிருந்தனர். பல்வேறு தலைப்புகள் மீது எனது பெற்றோர்களும் சகோதரர்களும் உற்சாகமாக கலந்துரையாடலில் ஈடுபடுவோம். நாங்கள் விரும்பிய வழியில் எங்களது வாழ்க்கையை வாழ நாங்கள் அனுமதிக்கப்பட்டோம் மற்றும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கப்பட்டோம். எனது சகோதரரான ரவி பாஸ்கரனுக்கு 16 வயதிலிருந்தே வகை 1 நீரிழிவு இருந்தது. 2013 ஆம் ஆண்டில் 73 வயதில் கணையப்புற்றுநோயின் காரணமாக இறக்கும் வரை துடிப்பான மற்றும் உற்சாகமான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். தமிழ்நாடு ஜுனியர் மாநில அணியில் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரராக இருந்ததோடு, சென்னையில் ஒரு பிரபல ஆங்கில நாடகக்குழுவான மெட்ராஸ் பிளேயர்ஸ் – ன் ஒரு தீவிர உறுப்பினராகவும் மற்றும் டோஸ்ட் மாஸ்டர் நிகழ்வுகளில் ஆர்வமுள்ள பங்கேற்பாளராகவும் ரவி இருந்தார். சிறப்பாக உரையாற்றும் திறனுக்காக பல பரிசுகளையும், விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். முறையான உணவுமுறை, தவறாத உடற்பயிற்சி, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பு ஆகியவை மட்டுமன்றி, தனிப்பட்ட செயல்பாடுகளுக்கென நேரம் ஆகியவற்றின் மூலம் தனது வாழ்க்கை முறை மேலாண்மையில் மிகத்தீவிரமான ஒழுங்குக் கட்டுப்பாட்டை பேணுபவராக அவர் இருந்தார். அவரது அனைத்து தேவைப்பாடுகள் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து அவருக்கு உதவுவதன் மூலம் ரவி மீது நெருக்கமான கண்காணிப்பை வைத்திருந்ததோடு, மிகப்பெரிய அளவில் உடல்ரீதியான ஆதரவை ரவியின் அன்புக்குரிய மனைவியான மேரி வழங்கினார்,’ என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், அந்த காலகட்டத்தின்போது நீரிழிவின் மீதான தகவல், அறிவு மற்றும் சிகிச்சைக்கு முறையான அணுகுவசதி இல்லாதபோதிலும் கூட எந்த விதத்திலும், நீரிழிவின் காரணமாக திறனிழப்பு ஏற்பட்ட நபராக எனது சகோதரர் ரவி ஒருபோதும் கருதியதில்லை என்று குறிப்பிட்டார். தனது உணவு முறையில் சிறப்பான கட்டுப்பாட்டை தனது சகோதரர் கொண்டிருந்ததாகவும் அதே நேரத்தில் இன்சுலின் ஊசி மருந்தை தினசரி போட்டுக் கொள்வதற்கான அவசியமில்லாதவாறு அவரது குடும்ப உறுப்பினர்கள் அக்கறையோடு கவனித்துக் கொண்டனர் என்று திரு. ஹரி பாஸ்கரன் நினைவுகூர்ந்தார்.

ஸ்பெயின் நாட்டவரான பிரபல சர்வதேச சைக்கிள் பந்தய வீரர் பிரெய்ஸ் டகால், 7 வயது சிறுவனாக இருந்தபோது வகை 1 நீரிழிவு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அந்த வயதிலிருந்தே, எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சங்கத்திற்காக சிறப்பாக பணியாற்றிய தனது வாழ்க்கைப்பணி காலம் முழுவதும் நீரிழிவை எதிர்த்து போரிட்ட தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். 7 வயதில் இந்த நீரிழிவு பாதிப்பு இருப்பதாக அறியப்பட்ட டகாலுக்கு அதிக உடலுழைப்பு இல்லாதவாறு எளிதாக வாழ்க்கையை நடத்துவதும் மற்றும் ஒரு அளவுக்குமேல் தன்னையே அதிக சிரமப்படுத்திக்கொள்ளக்கூடாது என்று தொடக்கத்தில் அவருக்கு எச்சரிக்கை தரப்பட்டிருந்தது. தனது நீரிழிவை நிர்வகிப்பதில் டீம் நோவோ நார்டிஸ்க் டெவெலப்மெண்ட் குழுவோடு 5 சீசன்களை தான் செலவிட்டதாக டகால் விளக்கமளித்தார். இப்போது சைக்கிள் ரேஸிங்கில் ஈடுபடவில்லையென்றாலும், டீம் நோவோ நார்டிஸ்க் – ன் தூதர்களுள் ஒருவராக டகால் செயலாற்றி வருகிறார். ரேஸிங் மற்றும் நீரிழிவு நிலையோடு வாழ்வது மீதான அவரது அனுபவம் குறித்து மிக உத்வேகமளிக்கும் அற்புதமாக உரையாற்றி வருவதற்காக இவர் பிரபலமாக அறியப்படுகிறார். நீரிழிவு நிலையுள்ள நபர்கள் மட்டுமே அவர்களது சொந்த வரம்புகளை நிர்ணயித்துக் கொள்பவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று அவர் நம்பிக்கையோடு வலியுறுத்திக் கூறினார்.
தேசிய ஸ்குவாஷ் சேம்பியனான திரு. சைரஸ் பூஞ்சா, வகை 1 நீரிழிவு நிலை கொண்ட அவரது மனைவி ரோஷன் குறித்து பேசினார். நீரிழிவு பாதிப்பை எப்படி அவர் சிறப்பாக நிர்வகித்து சமாளித்தார் மற்றும் 2 குழந்தைகளை வெற்றிகரமாக வளர்த்தார் என்று விளக்கமளித்த திரு. சைரஸ், பல நாடகங்களில் சிறப்பாக நடித்து, புகழ்பெற்ற நாடகக்கலைஞராகவும் தனது மனைவி திகழ்ந்ததை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

இந்த மாலைப்பொழுது முழுவதுமே உத்வேகமளிக்கும் வாழ்க்கைக்கதைகள், அழகான நடன நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவியோடு நீரிழிவை எப்படி சமாளிக்கலாம் என்ற ஆலோசனைகள் மற்றும் ஆர்வமூட்டும் உள்நோக்குகள் ஆகியவைகள் நிரம்பியதாக இருந்தது. குடும்பம் மற்றும் நீரிழிவு என்ற கருத்தரங்கு மீது சிறப்பு கவனம் செலுத்திய இந்நிகழ்வானது, இந்த ஆண்டுக்கான கருப்பொருளோடு இணைத்துப்பார்த்து நீரிழிவை வெற்றிகரமாக எதிர்த்துப் போரிடுவது மீதான முக்கிய அம்சங்களை வலியுறுத்தியதாக அமைந்தது.

Launch of an exciting 90 Day Fitness Challenge by Dr. Mohan’s Diabetes Specialities Centre 

Please follow and like us: