விவசாயிகளுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் மொபைல் செயலியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

விவசாயிகளுக்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் மொபைல் செயலியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான முன்னறிவிப்பு மாதிரி திட்டத்தை புவியியல் தகவல் அமைப்பின் (GIS) மூலம் ம சா சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஆரக்கிள் (Oracle CSR) நிறுவனத்தின் நிதி உதவியுடன் நெல் மற்றும் காய்கறி வகைகளின் சாகுபடிக்காக செயல்படுகிறது.
இந்த திட்டத்தால் ஓர் புதுமையான தொழில்நுட்பம் இயக்கப்படுகிறது. வானிலை, GIS மற்றும் தொலை உணர்வு (Remote Sensing) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பயிர்களில் பூச்சி மற்றும் நோயைக் கணித்து, அத்தகவலை மொபைல் செயலி மற்றும் டாஷ்போர்ட் மூலம் விவசாயிக்கு அளித்து, பயிர்கள் நன்றாக வளரவும் அதனால் அதிக மகசூல் பெறவும், மேலும் சிறந்த பண்ணை நிர்வாகத்தை மேற்கொள்ளவும் இத்திட்டம் உதவும். இதன் மூலம் சுமார் 10000 விவசாயிகள் பயன் பெறலாம்.
விவசாயிகளுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ‘பண்ணை’ (PANNAI) என்கிற மொபைல் செயலி மற்றும் GIS அடிப்படையிலான தகவல்களை கொண்ட டேப்லெட்டை வழங்கினோம். அவர்களின் பண்ணை தரவை நிர்வகிப்பதற்கும், முன்னறிவிப்பு ஆலோசனைகளை பெறுவதற்கும் இது உதவும். இந்த சேவை விவசாயிகளையும் அறிவியல் சமூகங்களையும் தங்கள் பண்ணைகளை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் இணைக்கும்.
இந்த பயன்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து FMB (நில அளவை வரைப்படம்) நில பதிவுகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் MSSRF தானியங்கி வானிலை நிலையத்தின் மூலம் குறிப்பிட்ட நில வாரியான வேளாண் ஆலோசனைகளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் (TNAU) இணைந்து வழங்கவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம்:
• அதிக வருமானம்
• அதிக சாகுபடி
• பூச்சி மற்றும் நோய்களை தவிர்ப்பது/ குறைப்பது
• குறைந்த பூச்சி கொல்லி மருந்தை உபயோகித்தல்
• நிலம்/நீர் பாதுகாப்பு
போன்ற பயன்களை பெறலாம்.
குறிப்பு: மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மைதுறை அமைச்சர் திரு. இரா. துரைக்கண்ணு அவர்களும், மாண்மிகு தகவல் தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்களும் இந்த விழாவினை சிறப்பித்து விவசாயிகளுக்கு டேப்லெட்களை வழங்கினர்.

Tamil Nadu ministers launch app, portal to help farmers control pests

Tamil Nadu ministers launch app, portal to help farmers control pests

Please follow and like us: