இந்திய இளம் மரபணுவியலாளர் டாக்டர் சம்பத்குமாருக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது: மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்கியது

அமெரிக்காவின் அரிசோனா மாநில தலைநகர் பீனிக்ஸ் டிரான்ஸ்லேஷனல் ஜெனோமிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூரோஜெனோமிக்ஸ் பிரிவின்

இந்திய இளம் மரபணுவியலாளர் டாக்டர் சம்பத்குமாருக்கு சிறந்த முன்னாள் மாணவர் விருது: மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்கியது

சென்னை, அக்டோபர் 4, 2019: டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் – மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து டாக்டர் சம்பத்குமார் ரங்கசாமிக்கு மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் சிறந்த முன்னாள் மாணவர் விருதை இன்று வழங்கி கவுரவித்துள்ளன. முதலாம் ஆண்டாக இந்த விருதை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் – மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து துவக்கியுள்ளன. நீரிழிவு ஆராய்ச்சி துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் அரிசோனா மாநில தலைநகர் பீனிக்ஸ் டிரான்ஸ்லேஷனல் ஜெனோமிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூரோஜெனோமிக்ஸ் பிரிவின் டாக்டர் சம்பத்குமார் ரங்கசாமிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை – சிறந்த முன்னாள் மாணவர் விருது இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பி.எச்டி. செய்த முன்னாள் மாணவர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது குறித்து டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில், நீரிழிவு ஆராய்ச்சி துறையில் சிறந்த விளங்கியதற்காக டாக்டர் சம்பத்குமார் ரங்கசாமியை கவுரவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் பி.எச்டி பட்டம் பெற்ற மாணவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் மற்றும் பொதுத்துறை பணிகளில் சிறந்து விளங்கி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இது குறித்து, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சி படிப்புகள் துறை தலைவர் எம். பாலசுப்பிரமணியம் கூறுகையில், எங்களது அறக்கட்டளை நீண்ட காலமாக, தங்களது துறையில் நிபுணத்துவமிக்க முன்னாள் மாணவர்களை கவுரவிக்க திட்டமிட்டிருந்தது.இதைக் கருத்தில் கொண்டு மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை – சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இனி வரும் மாணவர்களுக்கு சிறந்த ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

டாக்டர் சம்பத்குமார்: ஈரோடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி முடித்தவுடன் சம்பத்குமார் கடந்த 2001-ம் ஆண்டு மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் ஜூனியர் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். டாக்டர் எம். பாலசுப்பிரமணியத்தின் மேற்பார்வையில் தனது ஆராய்ச்சி பணியை துவங்கினார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார். 2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அமெரிக்காவில் டென்வர் நகரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தின் பார்பரா டேவிட் குழந்தை பருவ நீரிழிவு மையம், நியூ மெக்சிகோ பல்கலைக்கழகம் மற்றும் பாரோ நியூராலஜிக்கல் இன்ஸ்டிடூட் (பீனிக்ஸ்) உள்ளிட்ட பல புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.

கடந்த 2014-ம் ஆண்டில், அவர் தனித்துவமிக்க விஞ்ஞானியானார். தற்போது அவர், உதவிப் பேராசிரியராக அரிசோனா மாநில தலைநகர் பீனிக்ஸ் டிரான்ஸ்லேஷனல் ஜெனோமிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூரோஜெனோமிக்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் நீரிழிவு நோய், நீரிழிவு விழித்திரை நோய், நரம்பியல் வளர்ச்சி மற்றும் நியூரோ வாஸ்குலர் பிரச்சினைகள் குறித்து தனது ஆய்வுகளை தொடர்ந்து வருகிறார். மேலும் டாக்டர் சம்பத்குமார், குழந்தை பருவ கால பிரச்சினைகளுக்கான மையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னோடி சிகிச்சைகள் தொடர்பாகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை பற்றி: மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை கடந்த 1996-ம் ஆண்டு சென்னையில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்ச்சிதை மாற்ற கோளாறுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்று, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீரிழிவு மற்றும் அதன் பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சி கல்வியில் சிறந்து விளங்கும் மையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் இருந்து 1250க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Young Indian Geneticist from Arizona Honoured With the First Madras Diabetes Research Foundation-Distinguished Alumnus Award

Please follow and like us: