பன்னாட்டு சுகாதாரத் தொழில்நுட்பக் கருத்தரங்கு கேஹோடெக் 2019

பன்னாட்டு சுகாதாரத் தொழில்நுட்பக் கருத்தரங்கு கேஹோடெக் 2019

சுகாதாரப் பாதுகாப்பு வழங்கு நிறுவனங்களின் திறனை வளர்க்கவும், மேம்பட்ட சுகாதாரப் பாதுகாப்பை வழங்கவும், நவீன தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தும் பன்னாட்டு சுகாதாரத் தொழில்நுட்பக் கருத்தரங்கு கேஹோடெக் 2019

சென்னை ஐஐடி-இல் 2019 செப்டம்பர் 27-28 தேதிகள் நிகழ்ச்சி நடைபெற்றது

• இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் 1000க்கும் அதிகமான சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இரு நாள் நிகழ்வில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் உரையாற்றினர்

• ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய சுகாதாரப் பாதுகாப்புப் பொருள்கள் தொடங்க நிதியம், சேவை, பீடா–பரிசோதனை ஆகியவற்றுக்கான தளத்தை இந்தியாவின் மிகப் பெரிய சுகாதாரப் பாதுகாப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கு வழங்கும்

சென்னை: 2019 செப்டம்பர் 28 : சென்னையில் 2019 செப்டம்பர் 27-28 தேதிகளில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகள் கூட்டமைப்பின் நான்காவது பன்னாட்டு சுகாதாரப் பாதுகாப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கு கேஹோடெக் 2019இல் 1000க்கும் அதிகமான சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்கள், நிர்வாகிகள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் புதிய எண்ணங்களையும், பொருள்களையும், அறிமுகப்படுத்துவோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் இரு நாள்கள் நடைபெற்ற மிகப் பெரிய வருடாந்திரச் சுகாதாரப் பாதுகாப்பு தொழில்நுட்பப் கருத்தரங்கில் நவீன தொழில்நுட்பம் மற்றும் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்களின் செயல் திறன், இலாபம் மற்றும் தரத்தை அதிகரிக்கவும், மேம்பட்ட நோயாளி சிகிச்சையை வழங்கவும், நவீன தொழில்நுட்பம் அவசியம் என்பதைப் பங்கேற்ற அனைவரும் ஒரு மனதாக ஒப்புக் கொண்டனர்.

Int’l Health-Tech Conference CAHOTECH 2019- @IIT Chennai

இது குறித்து கேஹோ தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் கூறுகையில் ‘ஒரே கூரையின் கீழ் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனனங்களைக் கொண்டு வந்ததன் மூலம் கேஹோடெக் 2019 நவீன தொழில்நுட்பம், முதலீடு, சிறந்த் நடைமுறைகள் ஆகியவற்றைக் கொண்ட நாட்டிலேயே மிகப் பெரிய மற்றும் உறுதியான நிகழ்வாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு நாள்களில் காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள், மருத்துவமனைகள் தங்கள் திறனையும், இலாபத்தையும் அதிகரிக்கத் தேவையான ஆற்றலை வழங்கும். மேலும் நாட்டில் சில மருத்துவமனைகளில் ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள சில தொழில்நுட்பங்கள், முக்கிய விவரங்கள், கண்டுபிடிப்புகள் தொடர்பான அனுபவங்களும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்டன’ என்றார்.
கேஹோடெக் 2019 அவைத் தலைவர் சமீர் மேத்தா பேசுகையில் ‘சுகாதாரப் பாதுகாப்பு வழங்கலில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், மருத்துவக் கருவி, எந்திரம், செய்முறைகள் உள்ளிட்ட துறைகளின் அண்மை மேம்பாடுகளைத் தெரிந்து கொள்வதுடன், அவற்றை எதிர்காலத் தேவைகளுக்கு தயார்படுத்தச் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கேஹோடெக் 2019 வாய்ப்பு வழங்குகிறது. சுகாதாரப் பாதுகாப்பு தொழில்நுட்ப உருவாக்குனர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு இடையே ஆரோக்கிய மற்றும் ஆக்கப்பூர்வ உறவை மேம்படுத்த இக்கருத்தரங்கு உதவியது. நவின் சுகாதாரப் பாதுகாப்பை அனைவருக்கும் அணுக்கமாக்கவும், குறைந்த கட்டணத்தில் கிடைக்கவும், தீர்வுகளைக் கண்டறிய முனைந்தது’ என்றார்.

25க்கும் அதிகமான அமர்வுகளில் சோம் மிட்டல் (நாஸ்காம் முன்னாள் தலைவர் & அவைத் தலைவர்), டாக்டர் கங்காதீப் கங்க் (கிருத்தவ மருத்துவக் கல்லூரி), லக்ஷ்மி நாராயணன் (காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்), ஜோஷ் ஃபவுல்கர் (ஃபாக்ஸ்கான் இண்டர்நேஷனல் ஹோல்டிங்க்), அருண் ஜெயின் (நிறுவனர் – போலாரிஸ்), டாக்டர் பாஸ்கர் இராமமூர்த்தி (இயக்குனர் – ஐஐடி சென்னை), டாக்டர் யூன் க்யாங்க் சோ (உல்சன் அறிவியல் & தொழில்நுட்ப தேசிய நிலையம்), டாக்டர் ஹூஷ்மண்ட் பலனி (ஆசியன் – வணிக ஆலோசனைக் கவுன்சில்), பி ரவீந்திரன் (ஐஐடி சென்னை), அனில் ரெலியா (இந்தியத் தரக் கட்டுப்பாடு கவுன்சில்) உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இந்தியாவில் ஸ்டார்ட் அப் சூழலமைவைப் பாதுகாக்க கேஹோடெக் 2019 கருத்தரங்கில் பங்கேற்ற முதலீட்டாளர்களும், புது முனைவு முதலீட்டாளர்களும், கடுமையான போட்டிக்கு இடையே பல்வேறு நம்பத்தகுந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூ 20 லட்சம் முதலீடு செய்தனர். மருத்துவமனைகளுடன் இணைந்து சுகாதாரத் தொழில்நுட்பப் பொருள்களின் தொடக்கம், பீடா-பரிசோதனை தொடர்பான வாய்ப்புகளும் ஸ்டார்ட் அப்களுக்குன் வழங்கப்பட்டன.

கேஹோடெக் 22019 அமைப்புச் செயலர் ஜே அடெல் தொடர்கையில் ‘நிகழ்ச்சியின் நோக்கம் செய்முறைத் திறன், அதிகபட்சப் பயன்பாடு, மேம்பட்ட மருத்துவ & நோயாளி பாதுகாப்பு மற்றும் நோயாளிகளுக்கு ஆற்றலை வழங்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே ஆகும். தொடக்க நிலையிலேயே நவீன தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கவும், கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆற்றலை வழங்கி வளர உதவுவதுமே இக்கருத்தரங்கின் இலக்காகும்’ என்றார்.

Int’l Health-Tech Conference CAHOTECH 2019- @IIT Chennai

#CAHOTECH

Please follow and like us: