சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

அதிக ஆபத்துள்ள கர்ப்பகால நேர்வுகளில் மிக அதிக எண்ணிக்கையில் இயல்பான சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

• கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியயில் மிக அதிக எண்ணிக்கையில், சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியதற்காக டாக்டர். பத்மப்பிரியாவை, தென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டி கௌரவித்தார்

சென்னை, செப்டம்பர் 272019: கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் – ன் மிகப்பெரிய மருத்துவமனையான கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, பெண்மையை கொண்டாடவும் மற்றும் மொத்தம் 11,000 கர்ப்பகால நேர்வுகளில் 85மூ இயல்பான சுகப்பிரசவங்களை ஏதுவாக்கி, சாதனை மைல்கல்லை எட்டியிருக்கும் டாக்டர். பத்மப்பிரியா அவர்களை பாராட்டி, கௌரவிக்கவும் ஒரு நிகழ்ச்சியை இன்று சிறப்பாக நடத்தியது. செயற்கைமுறை கருத்தரிப்பு, இரட்டைக் குழந்தைகள், கருவுற்ற நிலை, முன்பு சிசேரியன் முறையில் மகப்பேறு மற்றும் குறைவான அம்னியாட்டிக் திரவ அளவுடன் கருவுற்ற நிலை போன்ற மிக சிக்கலான பிரசவ நேர்வுகளிலும் கூட இயல்பான, சுகப்பிரசவங்களை டாக்டர் பத்மப்பிரியா நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் பாராட்டி கௌரவித்தார்.

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் மகப்பேறியல், மகளிர் நோயியல் மற்றும் ஐஏகு துறையின் தலைவர் டாக்டர். பத்மப்பிரியா விவேக் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில்,“பிரசவத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைப் பிறப்பு என்பது, ஒரு நேர்மறையான வாழ்க்கையை மாற்றுகின்ற பருவமாகும். இதை பாதுகாப்பான, சௌகரியமான அனுபவமாக ஆக்குவதே எங்களது நோக்கமாகும். ஆனால், உடல் உழைப்பற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் பிரசவ வலி குறித்த அச்சம் போன்ற காரணிகள் இந்தியாவில் சிசேரியன் முறையில் பிரசவிக்கும் நிகழ்வுகள் பெரிதும் உயர்ந்திருப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்கள் “இயல்பாக சிந்திக்க” (இயல்பான சுகப்பிரசவம் பற்றி) குழந்தை பிறப்பின்போது ஏற்படும் வலியை எப்படி சமாளிப்பது, தாய்க்கும், குழந்தைக்கும் இயற்கையான பிரசவம் எப்படி ஒரு நேர்மறையான அனுபவமாக இருக்கிறது மற்றும் வலியில்லாத “பிரசவத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகள் குறித்து கருத்தரித்த பெண்களுக்கு எடுத்துக்கூறி கற்பிப்பது அவசியமாகும். “வலியில்லாத இயற்கையான சுகப்பிரசவம்” ஒரு விருப்பத்தேர்வாக வழங்கப்படும்போது பிரசவத்திற்காக காத்திருக்கும் தாய், இயற்கையான பிரசவத்திற்கான வழிமுறையாக அதை தயக்கமின்றி தேர்வு செய்வார் மற்றும் விரைவில் “இயல்பாக சிந்திக்க”தொடங்கிவிடுவார்,” என்று கூறினார்.

GLENEAGLES GLOBAL HEALTH CITY PERFORM MAXIMUM NUMBER OF NORMAL DELIVERIES IN HIGH-RISK PREGNANCY CASES

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தில் நிறுவனரும், தலைவருமான டாக்டர் ரவீந்திரநாத் பேசியதாவது,“இந்தியாவில் சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 மடங்காகியிருக்கிறது. 2005-2006-ல் சிசேரியன் பிரசவம் 9மூ ஆக இருந்தபோது, உலக சுகாதார நிறுவனம் சிசேரியன் முறைக்கு பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15மூ என்ற அளவில் இருக்கின்ற போதிலும் 2015-16-ல் 18மூ ஆக உயர்ந்திருக்கிறது (மேற்கோள் ஆதாரம் – தி லேன்செட்). வயிற்றில் குழந்தையின் இயல்புக்கு மாறான நிலை, நஞ்சுக்கொடி படுக்கையிலிருந்து இரத்தக்கசிவு, கட்டுப்பாட்டில் இல்லாத உயர் இரத்த அழுத்தம் போன்ற குறிப்பிட்ட சில சூழ்நிலைகளின்போது உயிர்காக்கும் இடையீட்டு நடவடிக்கையாக சி செக்ஷன் எனப்படும் சிசேரியன் பிரசவமுறை இருக்கிறது. ஆனால்,இயல்பாக பிரசவ வலி உருவாகாத நிலை, பிரசவ வலி குறித்த அச்சத்தினால் தாயின் வேண்டுகோள் மற்றும் குழந்தை வெளியே வர இயலாமை மற்றும் பிரசவத்திற்கு குறிப்பிட்ட நல்ல நேரத்தை விரும்புவது ஆகிய காரணங்களுக்காகவும் கூட இப்போதெல்லாம் சிசேரியன் முறைகள் செய்யப்பட்டு வருகின்றன.

சமச்சீரான உணவு, ஆரோக்கியமான உணவுமுறை பழக்கங்கள், கருத்தரிப்பு காலத்தில் பிஎம்ஐ – ன் அடிப்படையில் உடல்எடை அதிகரிப்பு மற்றும் பேறுகாலத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகள் ஆகியவை இயல்பான பிரசவ வலி உருவாக அவர்களுக்கு உதவி இயல்பான பிரசவத்திற்கு வழிவகுக்கும். மேற்கூறப்பட்ட வாழ்க்கைமுறை மாற்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டிருக்குமானால், பிரசவ வலி தூண்டல் என்பது, கர்ப்பகால நீரிழிவு, கருவுற்ற நிலையில் பித்ததேக்கம், கருவுற்ற காலத்தில் உயர்இரத்த அழுத்தம் மற்றும் பிந்தைய தேதியிட்ட கர்ப்பம் ஆகியவற்றின் காரணமாக இருமுறை யோசிக்கப்படும்போது, சி செக்ஷனுக்குப் பதிலாக இயல்பான பிரசவத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மூன்றாவதாக இருப்பது பிரசவ வலி குறித்த அச்சம், வலி குறித்த இந்த அச்சமே சிசேரியன் முறை பிரசவத்திற்கு வேண்டுகோள் வைப்பதற்கான மிக பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது. நமது நாட்டில் அச்சுறுத்தும் அளவிற்கு சிசேரியன் பிரசவங்களின் விகிதாச்சாரம் அதிகரித்து வருவதை குறைப்பதற்கு இந்த நிலைகள் குறித்து கவனம் செலுத்துவதும் மற்றும் தீர்வு காண்பதும் சாத்தியமானவையே. இயல்பான பிரசவமே தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் நேர்மறையான தாக்கத்தையும், அனுபவத்தையும் வழங்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

GLENEAGLES GLOBAL HEALTH CITY PERFORM MAXIMUM NUMBER OF NORMAL DELIVERIES IN HIGH-RISK PREGNANCY CASES

Please follow and like us: