பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் படம் “வார்”

பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் படம் “வார்

ஆர்டிக் பெருங்கடலில் மிகப்பெரிய பனி உடைப்பு கப்பலில் ஹிரித்திக் மற்றும் டைகர் ஸ்ராஃப் – க்கும் இடையே மெய்சிலிர்க்க வைக்கும் கடும் சண்டை!

ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஸ்ராஃப் நடிப்பில் உருவாகிவரும் “வார்” திரைப்படம், பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் திரைப்படங்களுள் மிகப்பெரியயதாகவும், பிரமாண்டமான அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்ததாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ஒருபோதும் பார்த்திராத பிரமாண்டத்தையும் மற்றும் வியப்பில் ஆழ்த்துக்கின்ற காட்சிகளையும் இத்திரைப்படத்திற்கு வழங்குவதற்காக யாஷ் ராஜ் பிலிம்ஸ் அனைத்து முயற்சிகளையும் முழு மூச்சுடன் மேற்கொண்டு வருகிறது. ஆர்டிக் கடலில் பயணிக்கின்ற மிகப்பெரிய – பனிஉடைப்பு கப்பலில் ஹிருத்திக் மற்றும் டைகர் மோதுகின்ற அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

“ஆர்டிக் பெருங்கடலில் உறைந்த பனியின் மீது இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய சண்டைக்காட்சியை வார் திரைப்படம் கொண்டிருக்கும். அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படமான இதில் நமது நாட்டின் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோக்கள் என்று பெயரெடுத்திருக்கும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஸ்ராஃப் ஆகியோர் ஒருவருக்கொருவர் எதிராக மோதுகின்ற காட்சிகள் பார்iயாளர்களை சிலிர்க்க வைப்பது நிச்சயம். பனியை உடைக்கும் திறன்கொண்ட ஒரு கப்பலில் ஒருவர் மற்றொருவரை தோற்கடிப்பதற்காக மிகக்கடுமையாக மோதுகின்ற இந்த சண்டைக்காட்சி தத்ரூபமானதாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது,” என்று குறிப்பிடுகிறது தயாரிப்பு தரப்பு.

“பனிக்கட்டிகளை உடைக்கும் திறன்கொண்ட இந்த கப்பல் எவ்வளவு பெரியது என்ற ஒரு கண்ணோட்டத்தை வழங்கவேண்டும் என்றால், இது 300 அடி நீளமானது மற்றும் தண்ணீருக்கு கீழே 10 அடி ஆழம் வரை இருக்கின்ற பனிக்கட்டிகளை உடைத்துக்கொண்டு பயணிக்கும் திறன் கொண்டது. ஆர்டிக் கடலில் பயணிக்கிற மிகப்பெரிய ஐஸ் பிரேக்கர் சரக்கு கப்பலாக திகழும் இந்த கப்பலில்தான் இந்த பிரமாண்டமான அதிரடி சண்டைக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. இக்கப்பலில் இக்காட்சியை எடுப்பதற்கு அனுமதி பெற தயாரிப்பு குழுவானது 5 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது,” என்று அந்த தயாரிப்பு தரப்பு தகவல் அளித்தது.

இத்திரைப்படத்தின் இயக்குனரான சித்தார்த் ஆனந்த், இத்தகவலை உறுதிப்படுத்தி பேசியபோது, “அதிரடி சண்டைக்காட்சிகளைப் பொறுத்தவரை மிகப்பிரமாண்டமான, ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை வழங்கவேண்டும் என்பதற்காகவே வார் என்ற இத்திரைப்படம், அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆம். பனிக்கட்டிகளை உடைக்கும் திறன்கொண்ட இந்த மாபெரும் கப்பலில் இக்காட்சியினை எடுப்பதற்கு அனுமதியை பல மாதங்கள் காத்திருப்புக்குப் பிறகு நாங்கள் பெற்றோம். ஹிரித்திக் மற்றும் டைகர் மோதும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளை இக்கப்பலில் நாங்கள் சிறப்பாக படமாக்கியிருக்கிறோம், நாங்கள் ஒளிப்பதிவு செய்திருக்கின்ற இந்த அதிரடி காட்சிகளை பார்வையாளர்கள் பெரிதும் நேசிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

Hrithik, Tiger fight each other on the biggest ice-breaker ship in the Arctic!

டைரக்டர் சித்தார் மேலும் பேசுகையில், “ஆர்டிக் பகுதியில் எனது மனைவி மம்தா 6 ஆண்டுகளுக்கு முன்பு பயணித்தபோது, உறைந்துபோன ஐஸ் கட்டிகளை உடைத்துக்கொண்டு, ஒரு பனிக்கட்டி உடைப்பு கப்பல் பயணிக்கும் காட்சியை வீடியோ பதிவாக எடுத்திருந்தார். இந்த வீடியோவை அவர் என்னிடம் காண்பித்தபோது வியப்பில் நான் வாயடைத்துப்போனேன். எனது திரைப்படங்களுள் ஒன்றில் இந்த அற்புதமான காட்சியினை நான் ஒளிப்பதிவு செய்து இடம்பெறச் செய்வேன் என்று அத்தருணமே நான் முடிவு செய்தேன். இந்த யோசனையானது வார் திரைப்படத்தில் நிஜமாகியிருப்பது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நமது தலைமுறையின் இரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் இடம்பெறும்போது இதற்கு முன்பு ஒருவரும் பார்த்திருக்காத மிகச்சிறந்த காட்சிகளை பார்வையாளர்களுக்கும் மற்றும் அதில் நடிப்பவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள்,” என்று கூறினார்.

வார் திரைப்படத்தின் காட்சிகள் 7 வெவ்வேறு நாடுகளிலும் மற்றும் 15 உலக நகரங்களிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன. நிலம், நீர் ஃ பனிக்கட்டி மற்றும் வான்வெளி ஆகிய வெவ்வேறு பரப்புகளில் ஒருவர் மற்றொருவரை மிகக் கடுமையாக தாக்கி, மோதுகின்ற இந்த காட்சிகளின் மூலம் இந்நாட்டின் முதன்மையான ஆக்ஷன் ஹீரோக்கள், சண்டைக்காட்சிகள் எடுக்கப்படும் தரஅளவுகோலையே உயர்த்தியிருக்கின்றனர். இதற்கு முன்பு திரையில் ஒருபோதும் காணப்படாத அதிரடி சண்டைக்காட்சிகளுக்காக உலகெங்கிலுமிருந்து நான்கு சண்டை இயக்குனர்கள் இத்திரைப்படத்தில் பணிபுரிந்திருக்கின்றனர்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வார் திரைப்படம், நம் நாட்டின் மிகப்பெரிய தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) அன்று நாடெங்கிலும், இந்தி, தமிழ் மற்றும் தெலுகு ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தில் ஹிரித்திக் – ன் காதலியாக வாணி கபூர் நடிக்கிறார்.

Hrithik, Tiger fight each other on the biggest ice-breaker ship in the Arctic!

Please follow and like us: