முதல்வர் பழனிச்சாமி நாளை சென்னை திரும்புகிறார்!

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை (செப். 10)சென்னை திரும்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய நாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு எடுத்து வரும் பொருட்டு, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுற்றுப்பயணம் முடிவடைந்து நாளை(செப்டம்பர் 10) அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: