உயர்வானடயக்னோஸ்டிக் (நோயறிதல்) சேவைகளை தீவிரமாக விரிவாக்கும் நியூபெர்க்

உயர்வானடயக்னோஸ்டிக் (நோயறிதல்) சேவைகளை தீவிரமாக விரிவாக்கும் நியூபெர்க்

 எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் சேவைகள் என்பதை அறிமுகம் செய்கிறது
 ஹீலிஸ்ட் லேபரட்டரி ,நியூபெர்க் எர்லிச் நிறுவனத்துடன் இணைகிறது
 தனது பணியாளர் குழுவை வலுப்படுத்தும் நியூபெர்க் எர்லிச் லேபரட்டரி

சென்னை, செப்டம்பர் 6, 2019: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஹெல்த்கேர் ஸ்டார்ட் – அப்களில் ஒன்றாகவும் மற்றும் இந்தியாவின் நான்காவது முதன்மையான நோயறிதல் சேவை வழங்குனராகவும் திகழும் நியூபெர்க் டயக் னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் சேவைகள் (Anywhere Anytime Services) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. நோயறிதலுக்கான பரிசோதனையக சங்கிலித்தொடர் நிறுவனதளத்தில் இச்சேவை தொடங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.  முழு அளவிலான மாதிரி சேகரிப்பு மற்றும்  இசிஜி சேவைகள், சென்னை, பெங்களுரு, கொச்சின் மற்றும் ஹைதராபாத் அகிய நகரங்களில் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, தூய்மை மற்றும் அந்தரங்கத்திற்கான அடிப்படை தரநிலைகளை கொண்டவையாக அந்த அமைவிடம் இருக்க வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு, ஒரு தனிநபருக்கு சௌகரியமாக இருக்கின்ற எந்தவொரு அமைவிடத்திலிருந்தும் மாதிரிகளை இப்போது சேகரிக்க இயலும்.  எனிவேர் எனிடைம் சர்வீசஸ் திட்டத்தின் அறிமுகசலுகையாக, இச்சேவையானது, கட்டணமின்றி  இலவசமாக வழங்கப்படும். இச்சேவையை நியூபெர்க் நிறுவனத்தைச் சேர்ந்த முறையான பயிற்சி பெற்ற இரத்தமாதிரி சேகரிப்பு பணியாளர்கள் வழங்குவார்கள். எனிவெர் எனிடைம் சேவையை நியூபெர்க் அறிமுகம் செய்வதன் பின்னணி காரணமாக, இருப்பது, பொதுமக்களுக்கு ஆண்டு முழுவதும்  24 x 7 என்ற அடிப்படையில் நோயறிதலுக்கான பரிசோதனைகளை (இரத்தம், சிறுநீர் மற்றும் இசிஜி) கட்டு படியாகக்கூடிய கட்டணங்களில் எளிதில் அணுகிக் பெறக்கூடியதாக ஆக்கவேண்டும் என்ற குறிக்கோளாகும்.

Dr G S K Velu – Chairman MD Neuberg Diagnostics Pvt Ltd

ஹீலிஸ்ட் லேபரட்டரி என்ற நிறுவனம் நியூபெர் எர்லிச் உடன் இணைக்கப்படுகிறது என்ற அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் நியூபெர் எர்லிச் லேபாரட்டரிபிரைவேட் லிமிடெட் – ன் ஒருஅங்கமாக ஹீலிஸ்ட் இனிசெயல்படும்.  டாக்டர்.பி. ஸ்ரீனிவாஸ் மற்றுமடாக்டர். சரண்யாநாராயண்; ஆகியோர் நியூபெர்க் எர்லிச் லேபரட்டரியின் தலைமைத்துவ நிர்வாக குழுவிற்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். டாக்டர். ஸ்ரீனிவாசன், தொழில்நுட்ப இயக்குனராகவும், டாக்டர். சரண்யா, தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தலைமைநுண்ணுயிரியல் வல்லுனராகவும் பொறுப்பேற்பார்கள்.

இந்த முக்கியமான நிகழ்வுகளைஉறுதி செய்த நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் – ன் நிதி இயக்குனர் திரு. ஏ. கணேசன், “ஆரம்ப நிலையிலேயே துல்லியமான நோயறிதல் செயல்பாடு என்பதை நோக்கி இத்தொழிலினை மேற்கொள்ளவும் மற்றும் மிக நவீன தொழில்நுட்பத்தையும், புதியதலைமுறை நோயறிதல் கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அணுகி பெறத்தக்கதாகவும் கட்டுபடியாகக் கூடியதாகவும் ஆக்குவதன் மூலம் ஆழமான உள்நோக்குகளை வழங்குவதை தனது இலக்காகக் கொண்டு நியூபெர்க் எப்போதும் செயல்பட்டு வந்திருக்கிறது.  இதன்மூலம் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏதுவாக்குவதேஅதன் நோக்கமாகும். எனிவேர் எனிடைம் சேவைகளின் அறிமுகமும், நோயறிதல் பரிசோதனைகள் துறையில் தங்களை நிரூபித்திருக்கின்ற நிபுணர்களான டாக்டர் ஸ்ரீனிவாசன் மற்றும் டாக்டர் சரண்யா ஆகியோர்  நியூபெர்க் உடன் இணைந்திருப்பதும் இந்த குறிக்கோளை நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையை ஒட்டியதாக அமைந்திருக்கிறது. இன்றைய தினம் நியூபெர்க் – ன் வரலாற்றில் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒருதினம்  என்பதில் ஐயமில்லை. மேட்ரோ பொலிஸ் – ன் இணை நிறுவனர், லிஸ்டர் லேபரட்டரி மற்றும் ஹீலிஸ்ட் லேபரட்டரியின் இணைநிறுவனர்கள் மற்றும் எர்லிச் நிறுவனத்தை தொடங்கிய குடும்பத்தினர் ஆகிய அனைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இவ்வகையினத்தில் மிகச்சிறந்த மேற்கோள் ஆதார உடற்கூறியல் பரிசோதனை யகசேவைகளை வழங்கஒன்றாக இணைந்திருப்பதே இந்தநாளின் சிறப்பாகும்,”என்று கூறினார்.

டாக்டர் சரண்யா மற்றும் தனது நியமனம் குறித்து பேசிய டாக்டர். ஸ்ரீனிவாசன், “நோயறிதல் பரிசோதனை சேவைகள் தளத்தில் இன்றைக்கு நியூபெர்க் பிரமாண்டமான சாத்தியத்திறனைக் கொண்டிருக்கிறது. உடல் நலபராமரிப்பு தொழில் துறையில் அறிமுகம்  எதுவும் அவசியப்படாத பிரபல ஆளுமையான டாக்டர். ஜி.எஸ்.கே. வேலு அவர்களால் நிறுவப்பட்ட இந்த உயிரோட்டமுள்ள பெருநிறுவனத்தின் அங்கமாக இணைவதில டாக்டர் சரண்யாவும், நானும் பெருமகிழ்ச்சியடைகிறோம் மற்றும் கௌரவிக்கப்பட்டிருக்கிறோம். நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் – ன் குறிக்கோள் மற்றும் செயல் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு ஒட்டுமொத்த குழுவினருடன் மிகநெருக்கமாக ஒருங்கிணைந்து செயலாற்றுவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம். இப்பிராந்தியத்தில் மிகவலுவான நிலைக்கு நியூபெர்க் எர்லீச் நிறுவனத்தை வளர்த்தெடுப்பதும் மற்றும் மேலதிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக விரும்பப்படும் மாற்றங்களை வடிவமைப்பதும் எங்களது பிரதான கூர்நோக்க செயல்பாடுகளாக இருக்கும்,”என்று கூறினார்.

NEUBERG BETS BIG ON SUPERIOR DIAGNOSTIC EXPERIENCE 

“நோயறிதல் பரிசோதனை செயல்தளத்தில் சௌகரியம் என்பது ஒருமுக்கியமான அம்சமாக இருக்கின்ற போதிலும், துல்லியமும், செய்யப்பட்ட சோதனைகள் மீதான அறிக்கையைப் பெறுவதில் வேகமும் அதற்குசம அளவு முக்கியத்துவம் கொண்டவையாக  இருக்கின்றன.  தங்களது சொந்த உடல்நலம் மற்றும் நலவாழ்வின் முக்கியத்துவத்தை அதிகளவில் அறிந்தவர்களாக  இருக்கும் போக்கு மக்களிடம் வளர்ந்து வருகிறது.  அதிகளவில் தன்மயமாக்கப்பட்ட உடல் நலப்பராமரிப்பு கிடைக்க வேண்டும்  என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் மற்றும் கோருகின்றனர். எனிடைம் எனிவேர் போன்ற ஒருசேவை,  இந்தியாவின் உடல் நலபராமரிப்புத் துறையில் ஒருமுழுமையான உருமாற்றத்தை கொண்டுவரக்கூடியது என்று நியூபெர்க் குடும்பம்  நம்புகிறது.  தனிநபர்களின் கைகளில் சக்தியினை வழங்குவதன் வழியாகவும் மற்றும் மதிப்புமிக்க நேரம் மற்றும் பணத்தை அவர்களுக்கு மிச்சப்படுத்துவதன் வழியாகவும் இதைசெய்ய முடியும்,” என்றுடாக்டர். சரண்யாமேலும் கூறினார்.

தரம் என்ற அடித்தளத்தின் மீதுதான் நியூபெர்க் எர்லிச் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. CAP   மற்றும் NABL சான்றாக்கம் பெற்றிருக்கின்ற இந்நிறுவனத்தின் உலகத்தரத்திலான தரநிலைகள் மற்றும் உலகளவில் ஏற்கப்படும்; அறிக்கைகள் நம்பகத்தன்மை கொண்டவை. இந்த பரிசோதனையகத்தின் செயல்முறைகள், வெளியார்ந்த மற்றும் உள்ளார்ந்த மதிப்பீட்டாளர்களால் குறித்தகால அளவுகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கைகளுக்கு உட்பட்டவை. சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையான இயக்க முறைகளின் (SOP) வழியாகசெயல் முறைகள் மீதான கடுமையான கட்டுப்பாடு, பரிசோதனையக செயல்பாடுகள், பணியாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றை மேம்படுத்துவதோடு, வாடிக்கையாளருக்கு உயர்வான நம்பிக்கையும், திருப்தியும் கிடைக்குமாறு செய்கிறது.

நியூபெர்க் எர்லிச் லேபராட்டரியின் பரிசோதனையக செயல்திறன்களுள் உயிரிவேதியியல், நுண்ணியிரியல், இரத்தவியல், திசுத்துயரியல், மூலக்கூறு உயிரியல், மரபணுவியல், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம், வளர்சி தைமாற்றவியல், புரதவியல் மற்றும் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான ஸ்கிரீனிங் (NBS) ஆகியபிரிவுகள் உள்ளடங்கும்.

பிராந்திய அளவிலானஒப்பீட்டு மேற்கோள் பரிசோதனை யகமான நியூபெர்க் எர்லிச் லேபராட்டரி, தமிழ்நாட்டில் சென்னை (3), திருச்சி (2), சேலம் (3), ஓசூர் (1), காரைக்குடி (1) ஆகிய அமைவிடங்களில் மொத்தத்தில் 10 மருத்துவ பரிசோதனை யகங்களைக் கொண்டிருக்கிறது. தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நாகர்கோயில் ஆகிய நகரங்களில் இன்னும் 10 ஆய்வுக்கூடங்கள் விரைவில் நிறுவப்பட உள்ளன. அத்துடன் தற்போது 50 இடங்களில் மாதிரி சேகரிப்பு முனைகள் இயங்கிவருகின்றன. இன்னும் 3 மாதங்களுக்குள் கூடுதலாக 50 மாதிரி சேகரிப்பு முனைகள் செயல்பாட்டிற்கு வரும்.

H1N1 பரிசோதனைக்காக தமிழ்நாடு அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவ பரிசோதனை ஆய்வக் கூடங்களில் ஒன்றாக நியூபெர்க் எர்லிச் லேபராட்டரி இருக்கிறது. PPP மாதிரியின் அடிப்படையில் சென்னையில் எழும்பூரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனையில் (ICH) NABL   ஆல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட, புதிதாக பிறந்தபச்சிளம் குழந்தைகளுக்கான ஸ்கிரீனிங் ஆய்வகத்தை நியூபெர்க் எர்லிச் லேபாரட்டரிநடத்திவருகிறது.

Please follow and like us: