மகா முனி சினிமா விமர்சனம் ரேட்டிங்

மகா முனி சினிமா விமர்சனம் ரேட்டிங்

ஸ்டுடியோ  கீரின் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து தருண்பிக்சர்ஸ் வெளீயிட்டில் வந்துள்ள மகாமுனி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சாந்தகுமார்.

இதில் ஆர்யா இரட்டைவேடத்திலும், இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார், இந்துஜா நடித்துள்ளனர். இவர்களுடன்இளவரசு, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், மதன்குமார், காளி வெங்கட், சுந்தர், தங்கமணிபிரபு, சூப்பர் குட் சுப்ரமணி, தீபா, யோகி, ரோகிணி, சினிமா லீகார்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு-அருள் பத்மநாபன், படத்தொகுப்பு-வி.ஜே.சாபுஜோசப், கலை-ரெம்போம் பால்ராஜ், சண்டை-ஆக்ஷன் பிரகாஷ், பாடல்கள்-முத்துலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தனுஷ்கோடி, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

காஞ்சிபுரத்தில் மகாதேவன் (ஆர்யா )டிரைவராக வேலை செய்து கொண்டு மீதி நேரத்தில் அரசியல்வாதி இளவரசுவிற்கு அடியாளாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்து வேலை முடிப்பதில் கில்லாடியாக இருக்கிறார். இதனால் அரசியல் எதிரிகள் மகாவை பழி வாங்க தருணம் பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனால் இளவரசுவிடம் பணபாக்கியை வாங்கிக்கொண்டு மகா தன் மனைவி இந்துஜா, மகனுடன் வேறு இடத்திற்கு சென்றுதிருந்து வாழ நினைக்கிறார்.  ஆனால் இளவரசு வேறு கோணத்தில் மகாவை மாட்டி விட சூழ்ச்சிசெய்கிறார். ஆதன் பின் மகாதேவனுக்கு நடந்தது என்ன? என்பதே படத்தின் ஒருபகுதிக்கதை. ஈரோட்டில் பட்டதாரியான முனிராஜ் (ஆர்யா) தன் வளர்ப்பு தாய் ரோகிணியோடு சாந்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுத்தும், மலை வாழ் மக்களுக்கு உதவி செய்து கொண்டும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். தொழிலதிபர் ஜெயபிரகாஷின் மகள் மஷிமாநம்பியார் முனியின் நல்லொழுக்கத்தை பார்த்து வியந்து பழகுகிறார். இவர்களின் நட்பை தவறாக புரிந்து கொள்ளும் ஜெயபிரகாஷ் முனியை கொல்ல திட்டம் போடுகிறார். இதிலிருந்து முனிதப்பித்தாரா? ஏன்பதே படத்தின் இன்னோரு பகுதியின் கதை. சகோதரர்களான இருவரும் சிறுவயதில் பிரிந்து வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்தாலும் இறுதியில் நேர் கோட்டில் சந்திக்கநேரிடும் போது நடக்கும் விபரீதம் என்ன? யார் பழி வாங்கப்பட்டார்கள்? இவர்களின்வாழ்க்கை பயணம் தடம் மாறிவிடுவதன் காரணம் என்ன? என்பதைச் சொல்லும் கதைக்களம்.

ஆர்யா மகாதேவன், முனிராஜ்என இரட்டை வேடத்தில் அச்சு அசலாக மாறுபட்ட நடிப்பை கொடுத்து வாழ்ந்து இருக்கிறார்என்றால் மிகையாகாது. வெல்டன்.

இந்துஜா சராசரி அடியாளின் மனைவி எந்த மனநிலையில் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பாரா? அதை பிரதிபலித்து சிறப்பாக செய்திருக்கிறார்.

மஹிமா நம்பியார் இதழியல் மாணவியாக துணிச்சலாக சவால் விடும் நாகரீக பெண்ணாக வலம் வருகிறார். இவர்களுடன் இளவரசு, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், மதன்குமார், காளி வெங்கட், சுந்தர், தங்கமணிபிரபு, சூப்பர் குட் சுப்ரமணி, தீபா, யோகி, ரோகிணி மற்றும் ஆர்யாவின் அடியாள் நண்பராக வரும் சினிமா லீ பத்திரிகையாளர் கார்த்தியின் நடிப்பும் பேசும்படி உள்ளது.

எஸ்.எஸ்.தமனின் இசையும்,  அருள் பத்மநாபன் ஒளிப்பதிவும் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டுபடத்திற்கு விறுவிறுப்பையும், அயராத உழைப்பும் கொடுத்து பலம் சேர்த்திருக்கின்றனர்.

படத்தொகுப்பு – வி.ஜே.சாபுஜோசப், கலை – ரெம்போம் பால்ராஜ், சண்டை – ஆக்ஷன் பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பு.

எழுத்து, இயக்கம் – சாந்தகுமார். சிறு வயதில் பிரிந்து வாழும் இரட்டை சகோதரர்கள் தங்களின் வாழ்க்கை பாதையில் வெவ்வேறு கோணங்களில் பயணிக்கும் போது ஏற்படும் சம்பவங்கள், இடர்பாடுகள், சிக்கல்களை கடந்து எதிர்பாராத விதத்தில் இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கும் போது சந்தர்ப்பங்கள் இருவரின் வாழ்க்கையை புரட்டி போடும் திரைக்கதையில் சில காட்சிகள் தெளிவில்லாமல் இருந்தாலும் சமூக சிந்தனையான வசனங்களும், காட்சிப்படுத்தி சொல்லும் விதத்தில் குழப்பமில்லாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சாந்தகுமார்.

மொத்தத்தில் மகாமுனி அனைவர் மனங்களில் இடம் பிடிப்பார்.

கலைப்பூங்கா ரேட்டிங் ‘மகாமுனி’ படத்துக்கு 3 ஸ்டார்.

Please follow and like us: