`டியர் பீப்புள், வித் லவ் அன்ட் கேர், யுவர் டாக்டர்ஸ்’ புத்தகம் நீரிழிவு நிபுணர் டாக்டர் மோகன் வெளியிட்டார்

Photo Caption :  Book release – Dr.R.M. Anjana, Managing Director, Dr. Mohan’s Diabetes Specialities Centre, Dr. Debraj Shome, eminent Facial Plastic & Cosmetic Surgeon & Co-founder and Director, Debabrata-Auro Foundation, Dr. V Mohan, Chairman and Chief of Diabetology, Dr Mohan’s Diabetes Specialities Centre and Dr. Aparna Govil Bhaskar, Bariatric Surgeon and Co-founder and Director of Debabrata-Auro Foundation

`டியர் பீப்புள், வித் லவ் அன்ட் கேர், யுவர் டாக்டர்ஸ்’ புத்தகம்

நீரிழிவு நிபுணர் டாக்டர் மோகன் வெளியிட்டார்

மருத்துவர் – நோயாளிக்கு இடையேயான உறவுகள் பற்றிய `டியர் பீப்புள், வித் லவ் அன்ட் கேர், யுவர் டாக்டர்ஸ்’ புத்தகம் புகழ்பெற்ற நீரிழிவு நிபுணர் டாக்டர் மோகன் வெளியிட்டார்.

இதயப்பூர்வமான கதைகளுடன் வெளிவந்துள்ள இந்தியாவின் முதல் புத்தகம்

* மருத்துவர் – நோயாளிகள் இடையே உள்ள உறவை குறிக்கும் வகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் குழு இந்த புத்தகத்தில் கட்டுரைகள் எழுதியுள்ளது

* ப்ளூம்ஸ்பரி பதிப்பகத்தின் வெளியீடாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்திற்கு தலாய்லாமா முன்னுரை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு நிபுணருமான டாக்டர் மோகன் வெளியிட்டார்.

* மருத்துவ உலகில் புதிய கண்ணோட்டத்தை அளிக்கும் இந்த புத்தகத்தை அதன் ஆசிரியர்களான டாக்டர்கள் தேபராஜ் ஷோம் மற்றும் அபர்ணா கோவில் பாஸ்கர் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.

* டாக்டர் மோகனிடம் சிகிச்சை பெறும் பேராசிரியர்கள் எஸ்.
வி. சிட்டிபாபு மற்றும் மிஸ்கின் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

சென்னை, ஆக. 27,2019-மருத்துவர் – நோயாளிகளுக்கு இடையிலான உறவை பற்றி விவரிக்கும் `டியர் பீப்புள், வித் லவ் அன்ட் கேர், யுவர் டாக்டர்ஸ்’ என்னும் `அன்புள்ள மக்களே, அன்புடனும் அக்கறையுடனும், உங்கள் மருத்துவர்கள்’ என்னும் புத்தகத்தை மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு நிபுணருமான டாக்டர் மோகன் வெளியிட்டார்.இந்த புத்தகத்தை ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கான முன்னுரையை தலாய்லாமா எழுதியுள்ளார். மருத்துவ உலகில் புதிய கண்ணோட்டத்தை அளிக்கும் இந்த புத்தகத்தை அதன் ஆசிரியர்களான டாக்டர்கள் தேபராஜ் ஷோம் மற்றும் அபர்ணா கோவில் பாஸ்கர் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த புத்தகத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் குழு தங்கள் அனுபவங்களை எழுதியுள்ளனர். இந்தியாவில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையிலான உரிமைகள் குறித்து இந்த புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு நிபுணருமான டாக்டர் மோகன் வெளியிட இந்த சிறப்பு மையத்தின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம். அஞ்சனா பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் பேசுகையில், இந்த புத்தகம் மருத்துவர்களின் பார்வைகளையும், அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களையும் தெளிவாக விவரித்துள்ளது. மேலும் மருத்துவர் என்பவர், நோயாளியின் குடும்பத்திற்கு நண்பராகவும், ஆலோசனை வழங்குபவராகவும், அந்த குடும்பத்திற்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

டாக்டர் அஞ்சனா பேசுகையில், சமுதாயத்தில் மருத்துவர்களின் பங்கு என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவர்கள் மருத்துவர்கள் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர்களாக மட்டுமல்லாமல் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களின் நல விரும்பிகளாக உள்ளனர் என்னும் சாராம்சத்தை இந்த புத்தகம் விரிவாக விவரித்துள்ளது என்று தெரிவித்தார்.

Manifesto launch – Dr.R.M. Anjana, Managing Director, Dr. Mohan’s Diabetes Specialities Centre, Dr. Aparna Govil Bhaskar, Bariatric Surgeon and Co-founder and Director of Debabrata-Auro Foundation , Dr. V Mohan, Chairman and Chief of Diabetology, Dr Mohan’s Diabetes Specialities Centre and Dr. Debraj Shome, eminent Facial Plastic & Cosmetic Surgeon & Co-founder and Director, Debabrata-Auro Foundation

இந்த புத்தகத்தை அதன் ஆசிரியர்களான, புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், டெபப்ரதா – ஆரோ அறக்கட்டளையின் இணை நிறுவனரும், இயக்குனருமான டாக்டர் தேபராஜ் ஷோம், எடைகுறைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும் இந்த அறக்கட்டளையின் இணை நிறுவனரும், இயக்குனருமான டாக்டர் அபர்ணா கோவில் பாஸ்கர் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த புத்தகம் மருத்துவ உலகில் ஒரு புதிய கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் மருத்துவர் – நோயாளி உறவில் நம்பிக்கையை ஏற்படுத்த இந்த புத்தகம் ஊக்குவிக்கும்.

இந்த புத்தகம் குறித்து டாக்டர் தேபராஜ் ஷோம் கூறுகையில், டாக்டர்களை தவறாக கூறுவதையும், மருத்துவமனைகள் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளையும் நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். இது கொஞ்சம் கொஞ்சமாக எதிர்மறையாக மாறுகிறது. இதன் காரணமாக மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே சுமுகமான உறவு இருப்பதில்லை. இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமே மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இடையே நல்ல உறவை வலுப்படுத்த வேண்டும் என்பது ஆகும். அதன் காரணமாக இந்த புத்தகத்தில் 30 மருத்துவர்கள் மற்றும் 5 நோயாளிகளின் கதைகள் எழுதப்பட்டுள்ளது. இந்த கதைகள் வெற்றி, அனுதாபம், நேர்மறை, இழப்பு மற்றும் சில நேரங்களில் தோல்வி ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும். இது ஒரு படி மேலே போய் மருத்துவரை சுற்றியுள்ள மக்களைப் பற்றி விரிவாக கூறியுள்ளது. ஒரு மருத்துவரின் தாய், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கணவர் மற்றும் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்துவர் ஆகியோர் பற்றி கூறுகிறது. இந்த கதைகள், மருத்துவர்களும் மனிதநேயமிக்கவர்கள் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. இந்த கதைகள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

டாக்டர் அபர்ணா கோவில் பாஸ்கர் கூறுகையில், ஒரு காலத்தில் மருத்துவர்கள் கடவுளுக்கு இணையாக கருதப்பட்டனர். ஸ்டெதாஸ்கோப் போற்றப்பட்டது. அவர்களின் தொடுதலும் குணப்படுத்தலும் விவாதிக்கப்பட்டது. இந்த புத்தகம் ஒரு தொழிலில் என்ன தவறு நடந்திருக்கலாம் என்பதற்கான ஒரு பதிலாக இருக்கக்கூடும். மருத்துவர்களுக்கும் உலகில் உள்ள மற்றவர்களுக்கும் இடையிலான அழகான உறவை மீண்டும் வலுப்படுத்த இந்த புத்தகம் நிச்சயம் உதவியாக இருக்கும். முதல் முறையாக இந்த புத்தகத்தில் நோயாளிகளின் உரிமைகளுடன் மருத்துவர்களின் உரிமைகளும் பகிரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் மருத்துவர் – நோயாளிகள் இடையிலான மனித நேய கதைகள் இடம் பெற்றுள்ளன. இது அனைவரும் எளிமையாக வாசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக உயர் கல்விக் குழு முன்னாள் துணைத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் எஸ்.வி. சிட்டிபாபு, 99 வயதான தனக்கு கடந்த 40 வருடமாக நீரிழிவு நோய் இருப்பதாகவும் டாக்டர் மோகனின் ஆலோசனைப்படி செயல்படுவதால் நல்ல முறையில் இருப்பதாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதேபோல் கணக்கு தணிக்கையாளரும், திருவாரூர் ஆர்ஏசி கல்லூரி நிறுவனரும், திருவாரூர் லயன்ஸ் கண் மருத்துவமனை நிறுவனருமான 91 வயது பேராசிரியர் எஸ்.எம். மிஸ்கீன், தனக்கும் டாக்டர் வி. மோகனுக்கும் இடையிலான உறவை பகிர்ந்து கொண்டார்.

இந்த புத்தகத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களின் கட்டுரைகளை எழுதியுள்ளனர். குடலியல் மற்றும் எடை குறைப்பு மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீப் சௌபே, இந்திய மருத்துவ சங்க தேசியத் தலைவர் டாக்டர் ரவி வான்கடேகர், மூத்த பல் மருத்துவர் நிதின் கடம், ஆதித்ய ஜாட் இன்ஸ்ட்டிடூட் ஆப் விஷன் சயின்ஸ் அன்ட் ரிசர்ச் மைய டீன் டாக்டர் எஸ். நடராஜன், பி.எம். பிர்லா இருதய ஆராய்ச்சி மையத்தின் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவரும் மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் லலித் கபூர், கொச்சி மருத்துவ பள்ளியின் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுப்பிரமணிய அய்யர், மூத்த கண் மருத்துவரும், கண் மருத்துவ பேராசிரியரும், லாஸ் ஏஞ்சல்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனையின் கண் புற்றுநோயியல் துறை இணை இயக்குனருமான டாக்டர் ஜெசி பெர்ரி, புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், ஸ்டர்ட்கர்ட், மரியன் மருத்துவமனையின் பேஷியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை கிளினிக்கின் மூத்த இயக்குனரும் மற்றும் ஜெர்மன் மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கவுன்சில் தலைவருமான டாக்டர் உல்ப்கேங் கியூபிச், மூத்த தோல் நோய் நிபுணர் டாக்டர் கேப்ரிலா கசாபோனா, இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் எடைகுறைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகருமான டாக்டர் கமல் மகாவர் உள்ளிட்ட பலர் தங்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

Renowned Diabetologist Dr. V. Mohan releases India’s first-of-its-kind book on heartfelt stories about Doctor-Patient relationship

டாக்டர் தேபராஜ் ஷோம்
டாக்டர் தேபராஜ் ஷோம், முக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் முக ஒப்பனை அறுவை சிகிச்சையில் சிறந்த நிபுணர் ஆவார். இவர், இந்தியா முழுவதும் செயல்படும் எஸ்தெடிக் கிளினிக் இணை நிறுவனரும் இயக்குனரும் ஆவார். முக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இவரின் புதிய கண்டுபிடிப்புகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சர்வதேச பதிப்புகளுக்காக இவர் 55க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் க்யூஆர் 678 முடி வளர்ச்சி உருவாக்க கண்டுபிடிப்பிற்கு அமெரிக்க காப்புரிமை கிடைத்துள்ளது. கிளாஸ்கோ, ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் மதிப்புமிக்க விருதான டேவிஸ் பவுண்டேஷன் கிராண்ட் விருது இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு கிடைத்தது. இந்த விருதை பெற்ற ஆசியாவை சேர்ந்த முதல் இளம் மருத்துவர் இவர் ஆவார். டாக்டர் ஷோம் தனது மருத்துவ பணிகளுக்கு இடையே டெபப்ரதா ஆரோ அறக்கட்டளையின் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.

டாக்டர் அபர்ணா கோவில்
டாக்டர் அபர்ணா கோவில் பாஸ்கர், மும்பையில் புகழ்பெற்ற எடை குறைப்பு மற்றும் குடலியல் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் குளோபல், இந்துஜா, குர்ரே, நமஹா, சுஜக் மற்றும் அப்பல்லோ குழும மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு பதிப்பகங்களுக்காக ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் பல அறுவை சிகிச்சை சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். இவர் மருத்துவ ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார். 2016-ம் ஆண்டு துவக்கப்பட்ட டெபப்ரதா ஆரோ அறக்கட்டளையின் இணை நிறுவனரான இவர் ஏழை எளிய மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இவர் தீவிர புத்தக வாசிப்பாளரும் கலைஞரும் ஆவார்.

டியர் பீப்புள், வித் லவ் அன்ட் கேர், யுவர் டாக்டர்ஸ் புத்தகம் பற்றி
இந்த புத்தகம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் இதயப்பூர்வமான கதைகளின் தொகுப்பாகும். இந்த கதைகள் வெற்றி, அனுதாபம், நேர்மறை, இழப்பு மற்றும் சில நேரங்களில் தோல்வி ஆகியவற்றுடன் தொடர்புடையவையாகும். இது ஒரு படி மேலே போய் மருத்துவரை சுற்றியுள்ள மக்களைப் பற்றி விரிவாக கூறியுள்ளது. ஒரு மருத்துவரின் தாய், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கணவர் மற்றும் ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்துவர் ஆகியோர் பற்றி கூறுகிறது. இந்த கதைகள், மருத்துவர்களும் மனிதநேயமிக்கவர்கள் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. மேலும் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இடையிலான உறவில் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள இந்த புத்தகம் லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Renowned Diabetologist Dr. V. Mohan releases India’s first-of-its-kind book on heartfelt stories about Doctor-Patient relationship

Please follow and like us: