முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை: க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி சாதனை

முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை: க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி சாதனை

தமிழ்நாடு மாநிலத்தில் முதலமைச்சரின் விரிவான உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சையை செய்திருக்கும் க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

சென்னை, ஆகஸ்ட் 21, 2019: தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நலக்காப்பீடு திட்டத்தின் கீழ், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை 32 கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளை கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை வெற்றிகரமாக செய்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் மாற்றுப்பதிய சிகிச்சைகளை செய்திருக்கின்ற ஒரே மருத்துவமனை என்ற பெருமையை கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி பெறுகிறது. அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக மாற்றுப்பதிய சிகிச்சைகளை செய்து கொண்டிருக்கின்ற நோயாளிகளை பாராட்டுவதற்காக இம்மருத்துவமனையில் ஒரு நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர். C. விஜயபாஸ்கர், இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இத்தகைய திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசிற்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதற்காக, மாற்றுப்பதிய சிகிச்சை செய்துகொண்ட 25 நோயாளிகள் அவர்களது குடும்பங்களோடு வந்திருந்தனர். இன்று பாராட்டி கௌரவிக்கப்பட்ட இந்த நோயாளிகள், அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தந்திருக்கின்ற உயிருள்ள மற்றும் இறந்து தானம் அளித்த தாராள மனதுள்ள நபர்களிடமிருந்து உடலுறுப்புகளை பெற்றிருக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கையின்படி, கல்லீரல் நோய் என்பது, இந்தியாவில் உயிரழப்பிற்கான மிக பொதுவான காரணமாக இருக்கிறது. 5 இந்தியர்களில் ஒரு இந்தியரை இந்நோய் பாதிக்கிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கல்லீரல் என்பது நமது உடலில் உணவுகளை செறிமானம் செய்வதற்கும் மற்றும் உடலிலிருந்து நச்சு பொருட்களை அகற்றுவதற்கும் பயன்படுகின்ற ஒரு உடலுறுப்பாகும். நச்சுயிரிகள் (ஹெபடிடிட்டிஸ் A,B மற்றும் C), மதுபான பழக்கம், உடல்பருமன், மரபு வழியாக பெறப்படும் மரபணு சார்ந்த நோய் போன்ற பல்வேறு காரணங்களினால் கல்லீரல் நோய் ஏற்படக்கூடும். கல்லீரல் சேதம் அல்லது கல்லீரல் செயலிழப்பிற்கு இந்த கல்லீரல் நோய் மேலும் வழிவகுக்கக்கூடும். இத்தகைய தீவிரமான கல்லீரல் செயலிழப்பிற்கு சிகிச்சையளிக்க இருக்கக்கூடிய ஒரே விருப்பத்தேர்வு கல்லீரல் மாற்றுப்பதியம் மட்டுமே.

வசதியற்ற சமூக – பொருளாதார பின்னணியைச் சேர்ந்த இத்தகைய நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான உடல்நலக் காப்பீடு திட்டம் உதவியிருக்கிறது. அரசின் இத்திட்டம் இல்லையென்றால், கல்லீரல் மாற்றுப்பதிய செலவை இவர்களால் சமாளித்திருக்க முடியாது. செய்யப்பட்டிருக்கின்ற 32 கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை நோயாளிகளில் 15 பேர் சிறார்களாவர். இவர்களுள் மிக இளைய நோயாளி, 7 மாதமே நிரம்பிய பச்சிளம் குழந்தையாகும். இத்திட்டத்தின் கீழ் இக்குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் – ன் நிறுவனரும், தலைவருமான டாக்டர் கே. ரவீந்திரநாத் பேசுகையில்,“வசதியற்ற எளிய பின்னணியைச் சேர்ந்த மக்களுக்கு பேருபகாரமாக இருக்கக்கூடிய இத்தகைய ஒரு புதுமையான திட்டத்தை தொடங்கி, தொடர்ந்து செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது மருத்துவமனையில் கல்லீரல் மாற்றுப்பதிய செயல்திட்டமானது, இந்தியாவில் மிக தொன்மையான மற்றும் அதிக தீவிர செயல்பாடு கொண்ட திட்டங்களுள் ஒன்றாகும். நாங்கள் இம்மருத்துவ மனையை தொடங்கிய நாளிலிருந்தே, பச்சிளம் குழந்தைகள் மற்றும் வயதுவந்த நபர்களுக்கு, புதிய அறுவைசிகிச்சை உத்திகளையும் மற்றும் தரமான நோயாளி கவனிப்பு சேவை மீது கூர்நோக்கம் செலுத்தி, கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறோம்,” என்று கூறினார்.

“மிகச்சிறப்பான சிகிச்சை விளைவுகளுக்கு பிரதான காரணமாக இருக்கின்ற அனுபவம் மற்றும் திறனுக்காக எனது மருத்துவர்களின் ஒட்டுமொத்த குழுவினருக்கு எனது நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சர்வதேச தர அளவுகளையும் விட உயர்வாக, இச்சிகிச்சையை மேற்கொண்டிருக்கும் நோயாளிகளின் உயிர்பிழைப்பு விகிதம் இம்மருத்துவமனையில் இருப்பதற்கு எமது மருத்துவ குழுவினரே காரணம்,” என்று டாக்டர். கே. ரவீந்திரநாத் மேலும் கூறினார்.

Gleneagles Global Health City Performs Highest Number of Liver Transplants

டாக்டர் கே. ரவீந்திரநாத் இது தொடர்பாக மேலும் பேசுகையில்,“சமீபத்தில், தமிழ்நாடு மாற்றுப்பதிய ஆணையத்தால் (டிரான்ஸ்டான்) 2018-19 ஆம் ஆண்டிற்காக இம்மாநிலத்தில் உயிரிழந்த நபர்கள் தானமாக உடலுப்புகளை வழங்கும் திட்டத்தில் மிக நேர்த்தியான செயல்பாட்டிற்காக தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களிடமிருந்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி விருதினைப் பெற்றிருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் HPB மற்றும் கல்லீரல் மாற்றுப்பதிய துறையின் இயக்குனர் டாக்டர் விவேக் விஜ் கூறியதாவது: சர்வதேச தரநிலைகளுக்கு நிகராக அல்லது அவைகளை விட சிறப்பாக சிகிச்சை விளைவுகளை வழங்குவதற்காக மாற்றுப்பதிய செயல்உத்திகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்நாட்டில் பாதுகாப்பான கல்லீரல் மாற்றுப்பதிய சிகிச்சைகளை மேற்கொள்வதில் நாங்கள் முன்னோடியாக செயலாற்றி வருகிறோம்.”

கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் கல்லீரலியல் மற்றும் கல்லீரல் மாற்றுப்பதியவியல் பிரிவின் இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் ஆற்றிய உரையில்,தமிழ்நா மாநிலம் முழுவதிலுமிருந்து வருகின்ற சமூகப் பொருளாதார அந்தஸ்தில் பின்தங்கிய, வசதியற்ற நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்றுப்பதியம் உட்பட, மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கி வருவதற்காக தமிழ்நாடு அரசிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மாற்றுப்பதிய சிகிச்சைக்குப் பிறகு இந்த நோயாளிகள், நல்ல உடல்நலத்துடன் வாழ்க்கையை நடத்தி வருவதை காண்பது மிகவும் திருப்தியளிக்கிறது,” என்று கூறினார்.

கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவு துறையின் தலைவர் டாக்டர் செல்வகுமார் பேசுகையில்,“இந்த 32 நோயாளிகளில் 5 நபர்களுக்கு தீவிர கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிப்பு இருந்தது மற்றும் அறுவைசிகிச்சைக்கு முன்பு அவர்கள் வென்ட்டிலேட்டர் சாதனத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படும்வரை மாற்றுப்பதிய சிசிச்சைக்குப் பிறகு, பல்வேறு துறைகளால் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை கவனிப்பின் மூலம் இவர்கள் அனைவருமே நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்,” என்று குறிப்பிட்டார்.

Gleneagles Global Health City Performs Highest Number of Liver Transplants

Please follow and like us: