முழங்கால் திருத்த ஆர்தோபிளாஸ்டி: Dr.A.நவாலடி சங்கர்

முழங்கால் திருத்த ஆர்தோபிளாஸ்டி: Dr.A.நவாலடி சங்கர்

ஆகஸ்ட் 18, 2019: மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில்
முழங்கால் ஆர்த்திரிட்டிஸ் நேர்வுகள் 15 மடங்குகள் அதிகமாக உள்ளன.
இந்தியர்களின் முழங்கால் ஆர்த்திரிட்டிஸ் தொடர்பான மரபணு முற்சார்பு நிலை
மற்றும் முழங்கால் மூட்டுகளை அதிகப்படியாகப் பயன்படுத்தும் வாழ்க்கை
முறை ஆகியவைகளே இதற்கான முதன்மை காரணிகளாகத் திகழ்கின்றன.
கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சராசரியாக ஒவ்வொரு
ஆண்டும் 300–க்கும் மேற்பட்ட முழுமூட்டு மாற்று அறுவைசிகிச்சைகளை
செய்வது வரும், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின், எலும்பியல்
அறுவை சிகிச்சைப் பிரிவின் துறைத்தலைவரும் மற்றும் முதுநிலை
ஆலோசகருமான மரு.யு.நவாலடி சங்கர் அவர்கள் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்களில் ஒருவராகத்
திகழும் Dr.A.நவாலடி சங்கர் அவர்கள், சென்னையில், ஆகஸ்ட் 18 அன்று
நடைபெற்ற முழங்கால் திருத்த ஆர்தோபிளாஸ்டி கூட்டத்தில் பேசியது:
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
முறைகளில் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற
போதிலும், ஈடேற்றப்படாத தேவைப்பாடுகள், தற்போதும் அதிகளவில் நீடிக்கவே
செய்கிறது. ஏற்கனவே முதன்மை மூட்டு மாற்று அறுவை சகிச்சைகள்
மேற்கொண்டு, அவை தோல்வியடைந்த மக்களைப் போன்று.
தற்காலத்தில் முழு மூட்டு ஆர்தோபிளாஸ் தோல்வியடைவதற்கான
காரணிகளாகத் திகழ்பவை நிலைப்புத்தன்மையற்ற நிலை, தவறான
பொருந்துநிலை, தவறான ஒருங்கிணைப்பு, பதிப்பு தவறுதல்கள்,
பொருத்துதல்களை நெகிழ்விக்கும் எலும்புமெலிவு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்)
போன்றவைகளே ஆகும்.

Revision Knee ArthroplastyRevision Knee Arthoplasty: Dr A. Navaladi Shankar

அவற்றை மீண்டும் சரி செய்ய, நாம் ஒரு திருத்த மூட்டுமாற்று சிகிச்சையை
மேற்கொள்ள வேண்டும். லேமினார் தியேட்டர், தனிப்பட்ட மூட்டு மாற்று
வார்டுகள், நவீன சாதனங்கள், தீவிர சிகிச்சைப் பரிவு, மூப்பு வசதிகள் மற்றும்
சிக்கலான திருத்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் ஆகியவற்றை அப்போலோ மருத்துவமனை
கொண்டுள்ளது.

மூட்டு மாற்றுகளில், தொற்று விகிதம் மிகவும் குறைவாகும் மற்றும்
மருத்துவமனையில் தங்குவதற்கான கால அளவும் குறுகியதே ஆகும். அடுத்த
பத்து ஆண்டுகளில், உடல்ரீதியிலான இயலாமைக்கான முதன்மையான
முக்கியக் காரணமாக முழங்கால் ஆர்த்திரட்டிஸ் திகழும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பொதுவாகத் தோன்றும் ஆர்த்திரிட்டிஸ், கார்டிலேஜின்
(குருத்தெலும்பு) தேய்வு மற்றும் தொய்வின் காரணமாகவே ஏற்படுகிறது மற்றும்
இது எந்தவொரு மூட்டையும் பாதிக்கலாம். ஆண்களுக்கு 60 வயதிற்கு மேலும்
மற்றும் பெண்களுக்கு 50 வயதிற்கு மேலும் மூட்டுப் பிரச்சனைகள் தோன்றத்
துவங்குகின்றன. இதற்கான முதன்மை காரணிகளாக உடல்பருமன் மற்றும்
மோசமான ஊட்டச்சத்து திகழ்கின்றன.

Dr.A.நவாலடி சங்கர் அவர்கள்: “ஏறக்குறைய அரைநூற்றாண்டிற்கும் மேற்பட்ட
பழமைவாய்ந்த சிகிச்சை முறையாகத் திகழும் முழு மூட்டு மாற்று
அறுவைசிகிச்சையானது, ஒரு மிக வெற்றிகரமான செயல்முறையாகத்
திகழ்கிறது மற்றும் அது 95மூ வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது
நோயாளியின் வாழ்க்கை தரத்தை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.
முழங்கால் ஆர்தோபிளாஸ்டியில், நோயாளிக்கு ஏற்றதான கருவிகள், பாலினம்
சார்ந்த மூட்டுகள், மினிமலி இன்வேசிவ் அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள்
மற்றம் அதிக நவீன கணிணிகளைப் பயன்படுத்து முழு மூட்டு மாற்று
அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளுதல் உட்பட்ட பல்வேறு புதிய மேம்பாடுகள்
ஏற்பட்டுள்ளன. ஒரு நல்ல மூட்டு மாற்றினை மேற்கொள்வது மற்றும்
நோயாளிக்கு அதிகபட்ச பலனை வழங்குவதில், அறுவைசிகிச்சை நிபுணர்களின்
நிபுணத்துவம் மற்றும் திறன்களுக்கு மாற்று தற்போது வரை ஏதுமில்லை” என்று
கூறினார்.

மேலும், Dr.A.நவாலடி சங்கர் அவர்கள், ஆர்த்தரிட்டிஸ் சீர்கேட்டின் ஆரம்பகட்ட
அறிகுறிகள், சிகிச்சை தேர்வுகள் மற்றும் தவிர்ப்பு குறித்தும் பேசினார்.
எந்தவொரு மூட்டிலும் வலி அல்லது கடினத்தன்மை ஏற்பட்டாலோ அல்லது சில
காரியங்களை திரும்பத்திரும்ப செய்கையில் மூட்டுகளில் சத்தம் ஏற்பட்டாலோ,
அவைகள் ஆர்த்திரட்டிஸிற்கான அறிகுறிகளாகும் என்பதை உணர
வேண்டும்.ஆரம்ப நிலையில்ஆர்த்திரிட்டிஸ் சிகிச்சைக்கு அனால்ஜெஸிக்ஸ்
போன்ற மருந்துகள், இன்ட்ரா ஆர்டிகுலேஷன் ஊசிகள் மற்றும் பிசியோதெரபி
போன்றவைகள் பயன்படும். அத்தகைய நோயாளிகள் உண்ணும் உணவு
பால்சார் பொருட்கள், நிறைந்ததாகவும் பருவத்திற்குரிய பழங்கள் மற்றும்
காய்கறிகளின் வழியாகக் கிடைக்கப்பெறும் புரதச்சத்து, கால்சியம் மற்றும்
ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

Revision Knee ArthroplastyRevision Knee Arthoplasty: Dr A. Navaladi Shankar

Please follow and like us: