இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது

இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது

சென்னை, தமிழ்ராக்கர்ஸ் அட்மின் என்ற அடையாளத்தோடு வலம் வந்த திருப்பத்தூரை சேர்ந்த கௌரி சங்கர் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். நடிகர் விஷால் தலைமையிலான தனிக்குழு இவரை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பெயரில் கைதுசெய்யப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் Gun என்ற இணையதளத்தை நடத்தி வந்த இவர் நூறுக்கும் மேற்பட்ட போலி ஐடி யுடன் திரைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது:

இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும், பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *