சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை,  73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்துமிடம் உள்ளிட்ட விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எவ்வித சிரமத்தையும் தவிர்க்கும்வகையில் முன் கூட்டியே விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பில் தொடர்டைய அனைத்துத் துறையினரையும் கொண்ட சிறப்புக் கூட்டம் விமான நிலையத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகஸ்ட் 31-ந் தேதி 2019 வரை அமலில் இருக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியதாக சென்னை விமான நிலையத்தின் பத்திரிகை குறிப்பு தெரிவிக்கிறது.

Please follow and like us: