இறால் சாப்பிடுவதால் என்ன நன்மை ..?

இறால் சாப்பிடுவதால் என்ன நன்மை ..?

கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும்.

இறாலில் உள்ள சத்துக்கள்:

கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது.

இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்

செலினியம்(Selenium), புரதம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

கொலஸ்ட்ரால் – 43 Mg

சோடியம் – 49 Mg

புரதம் – 4.6 Mg

கால்சியம் – 8.6 Mg

பொட்டாசியம் – 40 Mg

நன்மைகள்

செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகை வருவதை தடுக்கிறது.

வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக்கொண்டால், இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து எலும்புகளை வலுப்படுத்துகின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் உள்ள மக்னீசியம் சத்து இரண்டாவது நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன.

இதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *